ஹூண்டாய் க்ரெட்டா 7 சீட்டர் மாடல் இந்திய வருகை விபரம்!

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என்பது குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

ஹூண்டாய் க்ரெட்டா 7 சீட்டர் மாடல் இந்திய வருகை விபரம்!

இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி சூப்பர் ஹிட் மாடலாக வலம் வருகிறது. கடந்த மார்ச் மாதம் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

ஹூண்டாய் க்ரெட்டா 7 சீட்டர் மாடல் இந்திய வருகை விபரம்!

இந்த நிலையில், ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலும் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது. இந்த புதிய மாடல் அல்கஸர் என்ற பெயரில் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் க்ரெட்டா 7 சீட்டர் மாடல் இந்திய வருகை விபரம்!

ஹூண்டாய் க்ரெட்டா 5 சீட்டர் மாடலை விட கூடுதல் நீளம் கொண்ட காராக மாற்றம் செய்யப்பட்டு மூன்று வரிசை இருக்கை அமைப்புடைய 7 சீட்டர் மாடலாக க்ரெட்டா மாற்றப்பட்டு இருக்கிறது.

ஹூண்டாய் க்ரெட்டா 7 சீட்டர் மாடல் இந்திய வருகை விபரம்!

இந்த நிலையில், அடுத்த ஆண்டு இரண்டாவது காலாண்டு காலத்தில் (ஏப்ரல் - ஜூன்) ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஸிக்வீல்ஸ் தள செய்தி தெரிவிக்கிறது.

ஹூண்டாய் க்ரெட்டா 7 சீட்டர் மாடல் இந்திய வருகை விபரம்!

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் தற்போது தென்கொரியாவில் வைத்து சாலை சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், முகப்பு சிறிய மாற்றங்களுடன் தக்க வைக்கப்பட்டிருந்தாலும், பக்கவாட்டு மற்றும் பின்புற டிசைனில் குறிப்பிடத்தக்க மாறுதல்கள் செய்யப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.

ஹூண்டாய் க்ரெட்டா 7 சீட்டர் மாடல் இந்திய வருகை விபரம்!

மூன்றாவது வரிசை இடம்பெறுவதால், 5 சீட்டர் மாடலை விட பூட்ரூம் கொள்ளளவு குறைவாக இருக்கும். அதேநேரத்தில், மூன்றாவது வரிசை இருக்கையை மடக்கினால் 430 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதியை பெற முடியும்.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா 7 சீட்டர் மாடலில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், போஸ் சவுண்ட் சிஸ்டம், இன்டர்நெட் கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

ஹூண்டாய் க்ரெட்டா 7 சீட்டர் மாடல் இந்திய வருகை விபரம்!

புதிய மாடலில் பல்முனை பாதுகாப்பை தரும் வகையில் ஏர்பேக்குகள், முன்புற, பின்புறத்தில் பார்க்கிங் சென்சார்கள், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டர் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு வசதிகளும் இடம்பெற்றிருக்கும்.

ஹூண்டாய் க்ரெட்டா 7 சீட்டர் மாடல் இந்திய வருகை விபரம்!

ஹூண்டாய் க்ரெட்டா 7 சீட்டர் மாடலில் 115 பிஎஸ் பவரை வழங்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 140 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் டப்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் 5 சீட்டர் மாடலைவிட 7 சீட்டர் மாடல் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் வரையிலான கூடுதல் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்புள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி500, விரைவில் வரும் டாடா க்ராவிட்டாஸ் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles

English summary
According to the report, Hyundai is likely to launch the 7-seater Creta might be christened as Alcazar in the second quarter of 2021.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X