ஹூண்டாய் க்ரெட்டா Vs கியா செல்டோஸ்... எது கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகம் விற்பனையானது?

2019 டிசம்பர் மாத விற்பனையில் கியா செல்டோஸ் எஸ்யூவியை முதன்முறையாக ஹூண்டாய் க்ரெட்டா மிட்-சைஸ் எஸ்யூவி முந்தியுள்ளது. இவை இரண்டும் கடந்த மாதத்தில் பதிவு செய்த விற்பனை எண்ணிக்கைகளை விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹூண்டாய் க்ரெட்டா Vs கியா செல்டோஸ்... எது கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகம் விற்பனையானது?

கியா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து முதல் இந்திய அறிமுகமாக மாடலாக செல்டோஸ் எஸ்யூவி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டுட்டது. 2019 நவம்பர் மாதத்தில் எஸ்யூவிகளின் விற்பனையில் முதலிடத்தை பிடித்திருந்த இந்த கார் கடந்த மாத விற்பனையில் சுமார் 67 சதவீதம் வீழ்ச்சியடைந்து 4,645 யூனிட்கள் மட்டும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா Vs கியா செல்டோஸ்... எது கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகம் விற்பனையானது?

இதனால் நவம்பர் மாதத்தில் விற்பனை லிஸ்ட்டில் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்திருந்த எஸ்யூவி கார்கள் முன்னேற்றத்தை கண்டுள்ளன. இந்த வகையில் செல்டோஸ் எஸ்யூவியின் விற்பனையை முதன்முறையாக ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா எஸ்யூவி முந்தியுள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா Vs கியா செல்டோஸ்... எது கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகம் விற்பனையானது?

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி கடந்த டிசம்பர் மாதத்தில் 6,713 கார்கள் விற்பனையை பதிவு செய்துள்ளது. இந்த எண்ணிக்கை கியா செல்டோஸ் மாடலின் விற்பனை எண்ணிக்கையை முந்தியிருந்தாலும் 7,631 யூனிட்கள் விற்பனையான 2018 டிசம்பர் மாதத்தை விட 12 சதவீதம் குறைவாகும்.

ஹூண்டாய் க்ரெட்டா Vs கியா செல்டோஸ்... எது கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகம் விற்பனையானது?

விற்பனை நிலவரம் ஒருபுறம் இருக்க, ஹூண்டாய் நிறுவனம் தற்சமயம் க்ரெட்டா எஸ்யூவி மாடலின் அடுத்த தலைமுறை காரை தயாரிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஐஎக்ஸ்25 என்ற பெயரில் சீனாவில் கடந்த ஆண்டு இறுதியிலேயே அறிமுகமாகிவிட்ட இந்த புதிய தலைமுறை கார் இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியின் மூலம் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா Vs கியா செல்டோஸ்... எது கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகம் விற்பனையானது?

இந்த புதிய காரில் செல்டோஸ் எஸ்யூவியில் உள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளை தான் பிஎஸ்6 தரத்தில் ஹூண்டாய் நிறுவனம் வழங்கியுள்ளது. என்ஜின் வெளியிடும் ஆற்றலின் அளவிலும் இரண்டு மாடல்களிலும் எந்த மாற்றமும் இல்லை. இரண்டு காரிலும் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களானது ஒரே 115 பிஎச்பி பவரை தான் வெளிப்படுத்துகின்றன.

ஹூண்டாய் க்ரெட்டா Vs கியா செல்டோஸ்... எது கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகம் விற்பனையானது?

டார்க் திறனை பொறுத்தவரை பெட்ரோல் என்ஜின் 144 என்எம்-ஐயும், டீசல் என்ஜின் 250 என்எம்-ஐயும் அதிகப்பட்சமாக வெளிப்படுத்துகின்றன. அதேபோல் கியா செல்டோஸ் மற்றும் க்ரெட்டா மாடலின் இரண்டாம் தலைமுறை கார்களில் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா Vs கியா செல்டோஸ்... எது கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகம் விற்பனையானது?

செல்டோஸில் கூடுதல் தேர்வாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் வழங்கப்படுகிறது. க்ரெட்டாவின் அடுத்த தலைமுறை கார் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வை பெற்றுள்ளதா என்பது குறித்த எந்த தகவலையும் ஹூண்டாய் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. இதுபோல் க்ரெட்டாவின் இந்த தலைமுறை கார் 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் தேர்வை கொண்டிருக்குமா என்பதும் தெரியவில்லை.

ஹூண்டாய் க்ரெட்டா Vs கியா செல்டோஸ்... எது கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகம் விற்பனையானது?

இந்த டர்போ-பெட்ரோல் என்ஜின் தேர்வு செல்டோஸின் ஜிடி-லைன் வேரியண்ட்களுக்கு மட்டும் கியா நிறுவனம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஹூண்டாய் நிறுவனம் க்ரெட்டாவின் அடுத்த தலைமுறை காரை பற்றிய பெரும்பாலான தகவல்களை இதுவரை வெளியிடவில்லை. இதனால் இந்த புதிய காரை பற்றிய செய்திகளை இனி வரும் வாரங்களில் பார்க்கலாம்.

ஹூண்டாய் க்ரெட்டா Vs கியா செல்டோஸ்... எது கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகம் விற்பனையானது?

கியா நிறுவனத்தை பார்த்தோமேயானால், செல்டோஸ் எஸ்யூவியின் விற்பனை இவ்வாறு ஒரே அடியாக குறைந்து இருப்பதற்கான காரணம் தெரியவில்லை. ஏற்கனவே கூறியதுபோல் கடந்த நவம்பர் மாதத்தில் சுமார் 14,000 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்ட செல்டோஸ் மாடல் கடந்த மாதத்தில் வெறும் 4,645 கார்கள் மட்டும் விற்பனை செய்யப்பட்டிருப்பது கியா நிறுவனத்தை கண்டிப்பாக கவலையுற செய்திருக்கும்.

Rank Models Dec'19 Dec'18 Growth (%)
1 Hyundai Creta 6,713 7,631 -12
2 Kia Seltos 4,645 0 -
3 Mahindra Scorpio 3,656 2,690 36
4 MG Hector 3,021 0 -
5 Tata Harrier 1,458 0 -
6 Mahindra XUV500 1,399 1,141 23
7 Maruti S-Cross 979 3,270 -70
8 Renault Duster 756 1,296 -42
9 Jeep Compass 742 1,150 -35
10 Nissan Kicks 501 11 4455
ஹூண்டாய் க்ரெட்டா Vs கியா செல்டோஸ்... எது கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகம் விற்பனையானது?

கியா மோட்டார்ஸில் இருந்து அடுத்த இந்திய அறிமுக மாடலாக கார்னிவல் எம்பிவி இந்திய மார்க்கெட்டில் விரைவில் ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் அறிமுகமாகவுள்ளது. ப்ரீமியம் காராக நிலைநிறுத்தப்படவுள்ள இந்த எம்பிவி காரின் விற்பனையும் இன்னும் சில மாதங்களில் இருந்து துவங்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் க்ரெட்டா Vs கியா செல்டோஸ்... எது கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகம் விற்பனையானது?

கியா செல்டோஸை க்ரெட்டா எஸ்யூவி முந்தியிருப்பது எதிர்பார்க்காத ஒன்று தான். இருப்பினும் க்ரெட்டா மாடலையும் குறைவாக மதிப்பிட வேண்டாம். ஏனெனில் ஹூண்டாய் க்ரெட்டா மாடல் மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் நீண்ட காலமாக சிறந்த விற்பனை காராக இருந்து வருகிறது. இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ள கவர்ச்சிக்கரமான டிசைன், உயர்த்தர தோற்றத்தில் உட்புற அமைப்பு மற்றும் சக்தி வாய்ந்த என்ஜின் போன்றவற்றால் வாடிக்கையாளர்களின் முதல் விருப்பமாக க்ரெட்டா மாடல் இன்றளவும் இருந்து வருகிறது.

Source: Auto Punditz

Most Read Articles
மேலும்... #ஆட்டோ #auto news
English summary
Hyundai Creta Vs Kia Seltos Sales In December 2019: Creta Regains Best-Selling Mid-Size SUV Title
Story first published: Tuesday, January 7, 2020, 17:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X