லாக் டவுனிலும் புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு புக்கிங் அமோகம்!

லாக் டவுன் நீடித்து வரும் நிலையில், ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு முன்பதிவு மிக அமோகமாக இருந்து வருகிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

லாக் டவுனிலும் புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு புக்கிங் அமோகம்!

இந்தியாவின் எஸ்யூவி மார்க்கெட்டில் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி சூப்பர் ஹிட் மாடலாக வலம் வருகிறது. டிசைன், எஞ்சின், விலை என அனைத்திலும் அதிக மதிப்புவாய்ந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாத மத்தியில் புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

லாக் டவுனிலும் புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு புக்கிங் அமோகம்!

இரண்டாம் தலைமுறை மாடலாக வந்த ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. விற்பனை தினத்தன்று வரை 14,000 முன்பதிவுகளை பெற்றிருந்தது. ஆனால், விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு ஒரு வாரத்தில் கொரோனா லாக் டவுன் அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனால், கார் விற்பனை முடங்கியது.

லாக் டவுனிலும் புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு புக்கிங் அமோகம்!

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக லாக் டவுன் நீடிக்கும் நிலையில், ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கான புக்கிங் தொடர்ந்து சிறப்பாக இருந்து வருவது தெரிய வந்துள்ளது. விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் கணிசமான அளவு புக்கிங்கை பெற்றிருக்கிறது.

லாக் டவுனிலும் புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு புக்கிங் அமோகம்!

இதுகுறித்து, கார் அண்ட் பைக் தளத்திடம் பேசிய ஹூண்டாய் விற்பனை பிரிவு அதிகாரி தருண் கார்க் கூறுகையில்,"ஹூண்டாய் கரெட்டாவுக்கு தொடர்ந்து மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

லாக் டவுனிலும் புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு புக்கிங் அமோகம்!

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு 20,000 முன்பதிவுகளை பெற்றிருக்கிறோம். லாக் டவுன் காலத்தில், 18,000 புக்கிங்குகள் மொத்தமாக பெற்றிருக்கிறோம். இதில், க்ரெட்டா எஸ்யூவிக்குத்தான் 75 சதவீத முன்பதிவுகள் கிடைத்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன். தொடர்ந்து இந்த காரை வாங்குவதற்கான விசாரணைகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து வந்து கொண்டே இருக்கிறது.

லாக் டவுனிலும் புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு புக்கிங் அமோகம்!

லாக் டவுன் முடிந்த உடன் முன்பதிவு செய்தவர்களுக்கு டெலிவிரிப் பணிகள் துவங்கப்படும். எந்த இடர்பாடுகளும் இருக்காது. எனவே, வாடிக்கையாளர்கள் கவலை கொள்ள தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

லாக் டவுனிலும் புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு புக்கிங் அமோகம்!

முதல் மாதத்தில் 6,703 புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் டீலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ஹூண்டாய் மோட்டார் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், லாக் டவுன் முடிந்த உடன் மாதத்திற்கு 10,000 க்ரெட்டா எஸ்யூவிகளை அனுப்புவதற்கு திட்டமிட்டுள்ளது.

லாக் டவுனிலும் புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு புக்கிங் அமோகம்!

புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியானது இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் எஞ்சின்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வழங்கப்படுகிறது.

லாக் டவுனிலும் புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு புக்கிங் அமோகம்!

வாடிக்கையாளர்களின் விருப்பத்தின் பேரில் எஞ்சின், கியர்பாக்ஸ் மற்றும் வசதிகளின் அடிப்படையில் E, EX, S, SX மற்றும் SX(O) என 5 விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

லாக் டவுனிலும் புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு புக்கிங் அமோகம்!

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 113 பிஎச்பி பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 138 பிஎச்பி பவரையும், 242 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 113 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் பெறலாம்.

லாக் டவுனிலும் புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு புக்கிங் அமோகம்!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி ரூ.9.99 லட்சம் என்ற மிக சவாலான விலையில் கிடைக்கிறது. கியா செல்டோஸ் உள்ளிட்ட காம்பேக்ட் ரக எஸ்யூவி கார்களுடன் போட்டி போடுகிறது.புதிய க்ரெட்டா எஸ்யூவியின் பிஎஸ்6 டீசல் மாடலுக்குத்தான் 55 சதவீத அளவுக்கு புக்கிங் கிடைத்துள்ளதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Hyundai Motor India has revealed now that the new-gen Creta has received nearly 20,000 bookings after its launch in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X