ரேஞ்ச் ரோவர் காராக மாறிய ஹூண்டாய் கிரெட்டா... உரிமையாளர் செய்த கவர்ச்சிகரமான மாடிஃபிகேஷன்...

புத்தம் புதிய ஹூண்டாய் கிரெட்டா கார் ஒன்று, ரேஞ்ச் ரோவர் காரை போன்று மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளது.

ரேஞ்ச் ரோவர் காராக மாறிய ஹூண்டாய் கிரெட்டா... உரிமையாளர் செய்த கவர்ச்சிகரமான மாடிஃபிகேஷன்...

புதிய தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி ரக கார், இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. முந்தைய மாடல்களை போன்றே, புத்தம் புதிய 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி காருக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த எஸ்யூவியை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பலர் மாடிஃபிகேஷன் செய்து வருகின்றனர்.

ரேஞ்ச் ரோவர் காராக மாறிய ஹூண்டாய் கிரெட்டா... உரிமையாளர் செய்த கவர்ச்சிகரமான மாடிஃபிகேஷன்...

இதற்கு உதாரணமாக ஒரு புத்தம் புதிய ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி கார், ஷோரூமில் இருந்து நேரடியாக மாடிஃபிகேஷன் செய்யும் பட்டறைக்கு எடுத்து செல்லப்பட்டு, அங்கு அட்டகாசமான தோற்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ரேஞ்ச் ரோவர் காரை போன்று, இந்த 2020 ஹூண்டாய் கிரெட்டா மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளது.

ரேஞ்ச் ரோவர் காராக மாறிய ஹூண்டாய் கிரெட்டா... உரிமையாளர் செய்த கவர்ச்சிகரமான மாடிஃபிகேஷன்...

இதில், பெரிய ஆஃப்டர் மார்க்கெட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இது ஹூண்டாய் கிரெட்டா காரின் என்ன வேரியண்ட்? என்பது சரியாக தெரியவில்லை. எனினும் வெளியாகியுள்ள புகைப்படங்களை வைத்து பார்க்கும்போது, பேஸ் அல்லது மிட் வேரியண்ட் போல தெரிகிறது. காரை வாங்கிய உடனேயே மாடிஃபிகேஷன் செய்யும் எண்ணத்துடன் இதன் உரிமையாளர் இருந்திருக்கலாம் என தெரிகிறது.

ரேஞ்ச் ரோவர் காராக மாறிய ஹூண்டாய் கிரெட்டா... உரிமையாளர் செய்த கவர்ச்சிகரமான மாடிஃபிகேஷன்...

அப்படியானால் டாப் வேரியண்ட்டிற்கு அதிகப்படியான தொகையை செலவிடுவதை விட, பேஸ் அல்லது மிட் வேரியண்ட்டை வாங்குவதுதான் சரியான முடிவாக இருக்கும். சாடின் சாம்பல் நிறத்தில் செய்யப்பட்டுள்ள வ்ராப்தான், இந்த காரை பார்க்கும் ஒருவரை கவரும் முதல் விஷயமாக இருக்கும். அதே சமயத்தில் காரின் பல்வேறு பாகங்களில் பளபளப்பான கருப்பு வண்ணம் பயன்படுத்தப்பட்டுள்ளதும் கவர்ச்சி சேர்க்கிறது.

ரேஞ்ச் ரோவர் காராக மாறிய ஹூண்டாய் கிரெட்டா... உரிமையாளர் செய்த கவர்ச்சிகரமான மாடிஃபிகேஷன்...

உதாரணத்திற்கு தேன்கூடு வடிவ டிசைனை பெற்றுள்ள முன் பக்க க்ரில் அமைப்பானது, பளபளப்பான கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் காரின் விங் மிரர்களுக்கும் பளபளப்பான கருப்பு வண்ணம்தான் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் காரின் பின் பகுதியில், பம்பர் மற்றும் டெயில் லேம்ப்களுக்கு இடைப்பட்ட பகுதியிலும் பளபளப்பான கருப்பு நிறத்தை பார்க்க முடிகிறது.

ரேஞ்ச் ரோவர் காராக மாறிய ஹூண்டாய் கிரெட்டா... உரிமையாளர் செய்த கவர்ச்சிகரமான மாடிஃபிகேஷன்...

இந்த எஸ்யூவியின் க்ரில் அமைப்பிற்கு மேலே மற்றும் பூட் லிட்டில், ரேஞ்ச் ரோவர் கார்களை போன்ற பேட்ஜ் இடம்பெற்றுள்ளது. ஆனால் முழுமையான 'ரேஞ்ச் ரோவர்' என்ற பேட்ஜிற்கு பதிலாக, 'ரோவர்' என்ற பேட்ஜ் மட்டும்தான் வழங்கப்பட்டுள்ளது. இந்த கிரெட்டாவின் உரிமையாளர் 'ரோவர்' பேட்ஜ்ஜை மட்டும் தேர்வு செய்ததற்கு காரணம் இருக்கலாம் என கூறப்படுகிறது.

ரேஞ்ச் ரோவர் காராக மாறிய ஹூண்டாய் கிரெட்டா... உரிமையாளர் செய்த கவர்ச்சிகரமான மாடிஃபிகேஷன்...

அதாவது இது ரேஞ்ச் ரோவர் காரை மனதில் வைத்து டிசைன் செய்யப்பட்ட கிரெட்டா கார்தான். ஆனால் முழு காப்பி அல்ல என்பதை சொல்வதற்காக, அவர் இப்படி செய்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனினும் இந்த காரில் செய்யப்பட்டுள்ள மாடிஃபிகேஷன்கள் அட்டகாசமாக உள்ளன. சாலையில் செல்லும்போது நிச்சயமாக இது அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும்.

ரேஞ்ச் ரோவர் காராக மாறிய ஹூண்டாய் கிரெட்டா... உரிமையாளர் செய்த கவர்ச்சிகரமான மாடிஃபிகேஷன்...

இது தொடர்பாக 91வீல்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இந்த காரின் உட்புற புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. எனவே உட்புறத்தில் ஏதேனும் மாடிஃபிகேஷன்கள் செய்யப்பட்டுள்ளனவா? என்பது எங்களுக்கு உறுதியாக தெரியவில்லை.

Most Read Articles

English summary
Hyundai Creta Modified To Look Like Range Rover. Read in Tamil
Story first published: Tuesday, September 29, 2020, 19:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X