ஹூண்டாய் நிறுவனத்தின் இரண்டாவது N-வரிசை மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தனது என் வரிசை மாடல் கார்களை வருங்காலத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டங்களை வகுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக இந்நிறுவனத்தின் ஐ30 என் ஃபாஸ்ட்பேக் என்ற மாடல் நடைபெற்றுவரும் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் இரண்டாவது N-வரிசை மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!

இந்நிறுவனத்தின் விலையுயர்ந்த தயாரிப்புகளுள் ஒன்றாக இந்த நிகழ்ச்சியில் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு இந்த ஃபாஸ்ட்பேக் கார் வைக்கப்பட்டுள்ளது. ஐ30 என் மாடலிற்கு அடுத்து ஹூண்டாயின் என் வரிசையில் தயாராகியுள்ள இரண்டாவது மாடலாக இந்த ஐ30 ஃபாஸ்டேக் விளங்குகிறது.

ஹூண்டாய் நிறுவனத்தின் இரண்டாவது N-வரிசை மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!

ஸ்போர்ட்டியான தோற்றத்தில் வெளிப்புறத்தை கொண்டுள்ள இந்த ஃபாஸ்ட்பேக் மாடலின் முன்புறத்தில் உள்ள பம்பர், சிவப்பு நிறத்தில் மெல்லிய கோடு போன்ற டிசைனை பெற்றுள்ளது. உட்புறமும் வெளிப்புறத்திற்கு ஏற்றாற்போல் ஸ்போர்டியான டிசைனில் கருப்பு நிற தீம்-ஆல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் இரண்டாவது N-வரிசை மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!

காரின் உள்ளே முக்கியமான பாகங்கள் சிவப்பு நிறத்தை கொண்டுள்ளன. தற்போதைய ஐ30 என் மாடலுடன் ஒப்பிடும்போது இந்த புதிய ஃபாஸ்ட்பேக் மாடல், அப்டேட்டான சஸ்பென்ஷன், ப்ரேக் மற்றும் டயர்களை பெற்றுள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் இரண்டாவது N-வரிசை மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!

இந்த காருக்கு ஆற்றலை வழங்க 4-சிலிண்டர், 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் என்ஜின் நிலையான பேக்கேஜில் 275 பிஎச்பி பவரையும், பர்ஃபார்மன்ஸ் பேக்கேஜில் 353 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்துகிறது.

ஹூண்டாய் நிறுவனத்தின் இரண்டாவது N-வரிசை மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!

இந்த என்ஜின் வெளிப்படுத்தும் அதிகப்பட்ச டார்க் திறன் 378 பிஎச்பி ஆகும். இந்த என்ஜினுடன் இணைக்கப்பட்டுள்ள 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன், ஆற்றலை எலக்ட்ரானிக் லிமிடேட்-ஸ்லிப் டிஃபெரென்ஷியல் (E-LSD) மூலமாக காரின் முன்புற சக்கரங்களுக்கு வழங்குகிறது.

ஹூண்டாய் நிறுவனத்தின் இரண்டாவது N-வரிசை மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!

ஹூண்டாயின் இந்த ஐ30 என் ஃபாஸ்ட்பேக் மாடல், ஈக்கோ, நார்மல், ஸ்போர்ட், ஸ்போர்ட் என் மற்றும் என் கஸ்டம் என 5 விதமான ட்ரைவ் மோட்களை கொண்டுள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் இரண்டாவது N-வரிசை மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!

இந்த புதிய ஃபாஸ்ட்பேக் மாடல் இந்தியாவில் பாகங்களாக இறக்கமதி செய்யப்பட்டு, அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்திய அரசாங்கம், வருடத்திற்கு 2,500 கார்களை எந்தவொரு உறுதியளிப்பும் இன்றி இந்தியாவில் இறக்குமதி செய்யலாம் என அறிவித்திருந்தது.

ஹூண்டாய் நிறுவனத்தின் இரண்டாவது N-வரிசை மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!

இதனை பயன்படுத்தும் நோக்கில் தான் ஹூண்டாய் இந்த ஃபாஸ்ட்பேக் மாடலை பாகங்களாக இந்தியாவில் இறக்குமதி செய்கிறது. அறிமுகத்திற்கு பிறகு இந்த புதிய கார் எந்த மாடலுடனும் நேரடியாக விற்பனையில் மோத போவதில்லை.

ஹூண்டாய் நிறுவனத்தின் இரண்டாவது N-வரிசை மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!

குறைவான எண்ணிக்கையில் ஐ30 ஃபாஸ்ட்பேக் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டால், இந்த நடவடிக்கை மேலும் சில என் வரிசை மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய ஹூண்டாய் நிறுவனத்திற்கு உந்துக்கோலாக அமையும் என்பது உறுதி.

Most Read Articles
English summary
Hyundai i30 Fastback N Unveiled At Auto Expo
Story first published: Thursday, February 6, 2020, 21:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X