வாடிக்கையாளர்களையே வாயை பிளக்க வைத்த கோனா மின்சார கார்... பரிசோதனையில் கிடைத்த ஆச்சரிய பதில்!

கோனா எலெக்ட்ரிக் கார்குறித்த நம்ப முடியாத தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

வாடிக்கையாளர்களையே வாயை பிளக்க வைத்த கோனா மின்சார கார்... பரிசோதனையில் கிடைத்த ஆச்சரிய பதில்!

கோனா, ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் மின்சார காராகும். இந்த காரே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமான முதல் எஸ்யூவி ரக மின்சாரக் காரும்கூட. ஹூண்டாய் நிறுவனத்தின் மீதிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் இந்தியாவில் களமிறங்கிய முதல் மின்சார கார் என்பதாலும் இக்காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவற்புக் கிடைத்து வருகின்றது.

வாடிக்கையாளர்களையே வாயை பிளக்க வைத்த கோனா மின்சார கார்... பரிசோதனையில் கிடைத்த ஆச்சரிய பதில்!

இந்த நிலையிலேயே ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், ஜெர்மனியில் உள்ள லாசிட்ஸ்ரிங் சர்க்யூட் எனும் வாகன ஓடுதளத்தில் வைத்து கோனா மின்சார காரை பரிசோதித்துள்ளது. இதன் மூலம் கிடைத்திருக்கும் தகவல், ஹூண்டாயை மின்சார வாகன உலகின் தலைவன் என்பதைப் போல் சித்தரித்துள்ளது.

வாடிக்கையாளர்களையே வாயை பிளக்க வைத்த கோனா மின்சார கார்... பரிசோதனையில் கிடைத்த ஆச்சரிய பதில்!

ஆம், பரீட்சையில் கோனா மின்சார கார் ஆயிரத்திற்கும் அதிகமான கிமீ ரேஞ்ஜை வெளிப்படுத்தி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கின்றது. அதாவது, ஓடுதளத்தில் வைத்து பரிசோதித்து பார்த்ததில், ஒரு கார் 1,018.7 கிமீ என்ற ரேஞ்ஜையும், மற்றொரு கார் 1,024.1 கிமீ ரேஞ்ஜையும், கடைசி மற்றும் அதிகபட்சமாக 1,026 கிமீ ரேஞ்ஜையும் கோனா மின்சார கார்கள் வழங்கியிருக்கின்றன.

வாடிக்கையாளர்களையே வாயை பிளக்க வைத்த கோனா மின்சார கார்... பரிசோதனையில் கிடைத்த ஆச்சரிய பதில்!

இத்தனை கிமீ எப்படி ஒரே நாளில் சாத்தியம் என கேட்கத் தோன்றலாம்?, இதற்காக பல்வேறு யுக்திகளை சோதனை குழுவினர் கையாண்டிருக்கின்றனர். அதாவது அதிகம் மின்சார திறனைக் குடிக்கும் சாதனங்களை அவர்கள் ஆஃப் செய்திருக்கின்றனர். குறிப்பாக ஏசி, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்ட்ம் உள்ளிட்ட மின் சாதனங்கள் ஆஃப் செய்யப்பட்டிருக்கின்றன.

வாடிக்கையாளர்களையே வாயை பிளக்க வைத்த கோனா மின்சார கார்... பரிசோதனையில் கிடைத்த ஆச்சரிய பதில்!

அதிக ரேஞ்ஜைப் பெற வேண்டும் என்பதற்காகவே இதனை அக்குழுவினர் செய்திருக்கின்றனர். இதுமட்டுமின்றி, நெக்ஸென் என் ஃபெரா எஸ்யூ1 எனும் பிரத்யேக டயர்களும் இக்கார்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இது 215/55R17 எனும் அளவைக் கொண்டதாகும்.

வாடிக்கையாளர்களையே வாயை பிளக்க வைத்த கோனா மின்சார கார்... பரிசோதனையில் கிடைத்த ஆச்சரிய பதில்!

இதுமட்டுமின்றி, கார்கள் அனைத்தும் அதிகபட்ச மணிக்கு 30 கிமீ எனும் வேகத்தில் மட்டுமே இயக்கப்பட்டிருக்கின்றன. இந்த வேகத்திலேயே 3 நாட்கள், 36 ஓட்டுநர்கள் கோனா மின்சார காரைப் பரிசோதித்திருக்கின்றனர். இந்த மூன்று நாட்கள் பல பரீட்சையிலேயே அக்காரின் உச்ச ரேஞ்ஜ் விவரம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.

வாடிக்கையாளர்களையே வாயை பிளக்க வைத்த கோனா மின்சார கார்... பரிசோதனையில் கிடைத்த ஆச்சரிய பதில்!

அதாவது, கோனா மின்சார காரின் தேவையில்லாத கருவிகளை ஆஃப் செய்துவிட்டு மிகக் குறைந்த வேகத்தில் இயக்கும்போது அதிக ரேஞ்ஜைப் பெற முடியும் என்பது தெரியவந்துள்ளது. இந்த புதிய தகவல் ஏற்கனவே கோனா மின்சார காரை வாங்கியிருக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளர்களையே வாயை பிளக்க வைத்த கோனா மின்சார கார்... பரிசோதனையில் கிடைத்த ஆச்சரிய பதில்!

இந்த பரிசோதனையை ஜெர்மன் நாட்டின் பிரபல வார இதழ் நிறுவனமான 'ஆட்டோ பில்ட்' மற்றும் டெக்ரா ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்தே செய்திருக்கின்றன. டெக்ரா, இது ஓர் ஐரோப்பியா நாட்டைச் சார்ந்த வாகனங்களை ஆய்வுச் செய்யும் நிறுவனம் ஆகும்.

வாடிக்கையாளர்களையே வாயை பிளக்க வைத்த கோனா மின்சார கார்... பரிசோதனையில் கிடைத்த ஆச்சரிய பதில்!

இவ்விரு நிறுவனங்களைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஓட்டுநர்கள் ஆகியோர் இணைந்தே கோனா மின்சார காரைப் பரிசோதித்திருக்கின்றனர். இந்த பரிசோதனையின்போது பகல்நேர மின் விளக்குகள் மட்டும் வழக்கம்போல் ஆன் செய்யப்பட்ட நிலையிலேயே இருந்துள்ளன.

வாடிக்கையாளர்களையே வாயை பிளக்க வைத்த கோனா மின்சார கார்... பரிசோதனையில் கிடைத்த ஆச்சரிய பதில்!

பெரும்பாலான நாடுகள் பகல்நேர மின்விளக்கு எப்போதுமே ஆன் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கியிருக்கின்றன. எனவேதான், அக்குழுவினர் பகல்நேர மின் விளக்கைத் தவிர்த்து பெரும்பாலான சாதனங்களை ஆஃப் செய்திருக்கின்றனர். இதுகுறித்து நியூகார்2020 எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டிருக்கும் வீடியோவைக் கீழே காணலாம்.

இந்த நிலையிலேயே எப்போதும் இல்லாத வகையில் கோனா மின்சார கார்கள் அதன் ரேஞ்ஜை வழங்கியிருக்கின்றன. ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் இந்திய மதிப்பில் ரூ. 25.30 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். ஆன்-ரோடில் இது கூடுதல் விலையைக் கொண்டிருக்கும்.

வாடிக்கையாளர்களையே வாயை பிளக்க வைத்த கோனா மின்சார கார்... பரிசோதனையில் கிடைத்த ஆச்சரிய பதில்!

கோனா மின்சார காரில் 39.2kWh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 452 கிமீ தூரம் வரை பயணிக்க உதவும். மேலும், கோனா மின்சார காரில் இருக்கும் மின் மோட்டார் அதிகபட்சமாக 134 பிஎச்பி மற்றும் 395 என்எம் -ஐ வெளிப்படுத்தும். இதேகார் உலக சந்தையில் கூடுதல் திறனில் விற்பனைச் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Hyundai Kona EV Clocks 1,026 KMs On Single Charge. Read In Tamil.
Story first published: Monday, August 17, 2020, 19:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X