ஹூண்டாய், கியா கார்களில் வரப்போகும் புதிய தொழிற்நுட்ப வசதி!! என்னவென்று தெரியுமா?

ஹூண்டாய் மோட்டார் க்ரூப், உலகளவில் கிராஃபிக்ஸ் மற்றும் கணினி செயல்பாடுகளில் முக்கிய நிறுவனமாக விளங்கும் என்விடியா உடன் கூட்டணி ஏற்படுத்தி கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹூண்டாய், கியா கார்களில் வரப்போகும் புதிய தொழிற்நுட்ப வசதி!! என்னவென்று தெரியுமா?

தயாரிப்புகளில் வழங்கப்படும் இணைப்பு கார் தொழிற்நுட்பங்களை மேம்படுத்தும் நோக்கில் தான் இந்த கூட்டணி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டணியின் மூலமாக என்விடியா ட்ரைவ் கனெக்டட் கார் ப்ளாட்ஃபாரத்தை அறிமுகப்படுத்தி அதனை 2022ஆம் ஆண்டு வரையில் ஹூண்டாய், கியா மற்றும் ஜெனெஸிஸ் பிராண்ட்களில் பயன்படுத்தவுள்ளதாக ஹூண்டாய் மோட்டார் க்ரூப் தெரிவித்துள்ளது.

ஹூண்டாய், கியா கார்களில் வரப்போகும் புதிய தொழிற்நுட்ப வசதி!! என்னவென்று தெரியுமா?

இதன் காரணமாக மேற்கூறப்பட்ட கார் பிராண்ட்களின் ஆரம்ப நிலையில் இருந்து ப்ரீமியம் தரம் வரையிலான அனைத்து மாடல்களிலும் என்விடியா ட்ரைவ் நிறுவனத்தின் இன்-வைக்கல் இன்ஃபோடெயின்மெண்ட் (IVI) சிஸ்டங்கள் பொருத்தப்படவுள்ளன.

ஹூண்டாய், கியா கார்களில் வரப்போகும் புதிய தொழிற்நுட்ப வசதி!! என்னவென்று தெரியுமா?

ஆடியோ, வீடியோ, நாவிகேஷன், இணைப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு கொண்ட இணைப்பு கார் சேவைகள் உள்ளிட்டவற்றை ஹூண்டாய் மோட்டார் க்ரூப்பின் ஐவிஐ சிஸ்டங்களில் கொண்டுவர அவற்றில் என்விடியா ட்ரைவ்-இன் வன்பொருள் மற்றும் மென்பொருள் அடுக்கை பொருத்தவுள்ளது.

ஹூண்டாய், கியா கார்களில் வரப்போகும் புதிய தொழிற்நுட்ப வசதி!! என்னவென்று தெரியுமா?

இந்த கூட்டணி குறித்து என்விடியா நிறுவனத்தின் தானியங்கி வாகனங்களின் துணை இயக்குனர் அலி கனி பேசுகையில், "என்விடியா ஒரு தசாப்தத்திற்கு முன்னர் நுகர்வோர் மின்னணு செயல்பாடு மற்றும் கிராபிக்ஸ் நிறைந்த பயனர் இடைமுகத்தை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்புகளுக்கு கொண்டு வந்தது.

ஹூண்டாய், கியா கார்களில் வரப்போகும் புதிய தொழிற்நுட்ப வசதி!! என்னவென்று தெரியுமா?

இப்போது, செயற்கை நுண்ணறிவுகளின் மூலம் இந்த அமைப்புகளை மீண்டும் மாற்றியமைத்து வருகிறோம். இது வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தவும், வாகனத்தின் வாழ்நாள் முழுவதும் தொடரும், ஹூண்டாய் மோட்டார் குழுமம் பாதுகாப்பையும் மதிப்பையும் அதிகரிக்கவும் உதவுயாக இருக்கும்" என கூறினார்.

ஹூண்டாய், கியா கார்களில் வரப்போகும் புதிய தொழிற்நுட்ப வசதி!! என்னவென்று தெரியுமா?

ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்ப பிரிவின் மூத்த துணைத் தலைவர் பால் சூ கூறுகையில், "ஹூண்டாய் மோட்டார் குழுமத்தில், காரின் வாழ்நாள் முழுவதும் அதிக மதிப்பு, பாதுகாப்பு, செயல்பாடு மற்றும் இன்பம் ஆகியவற்றை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

ஹூண்டாய், கியா கார்களில் வரப்போகும் புதிய தொழிற்நுட்ப வசதி!! என்னவென்று தெரியுமா?

இவை அளவிடக்கூடியவை, ஆற்றல் திறன் கொண்டவை மற்றும் எங்கள் அடுத்த தலைமுறை மென்பொருள் வரையறுக்கப்பட்ட வாகனங்களை ஆதரிக்கும் செயல்திறனைக் கொண்டுள்ளது என்பதை என்விடியா டிரைவ் இயங்குதளம் நிரூபித்துள்ளது" என தெரிவித்தார்.

ஹூண்டாய், கியா கார்களில் வரப்போகும் புதிய தொழிற்நுட்ப வசதி!! என்னவென்று தெரியுமா?

என்விடியாவுடனான ஹூண்டாயின் கூட்டணி அடுத்த (சி.சி.ஓ.எஸ்) கனெக்டட் கார் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கிறது. ஏனெனில் என்விடியாவின் சமீபத்திய தலைமுறை (ஜி.பீ.யூ) கிராபிக்ஸ் செயலி அலகுகளின் உதவியுடன் புதிய சி.சி.ஓ.எஸ் உயர்-செயல்திறனில் கணினி செயல்பாடுகளை இயக்கும்.

ஹூண்டாய், கியா கார்களில் வரப்போகும் புதிய தொழிற்நுட்ப வசதி!! என்னவென்று தெரியுமா?

புதிய சி.சி.ஓ.எஸ் ஆனது கார் ஆன்லைனில் இல்லாதபோது கூட தடையற்ற சேவைகளை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தில் வழங்கும். மேலும் வெளிப்புற சாதனங்களில் பயனர் அனுபவத்தை வாகன சூழல் உடன் பெற, வாகனம் சுற்றியுள்ள உள்கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் சாதனங்களுடன் இணையும்.

ஹூண்டாய், கியா கார்களில் வரப்போகும் புதிய தொழிற்நுட்ப வசதி!! என்னவென்று தெரியுமா?

புதிய சி.சி.ஒ.எஸ் ஆனது புத்திசாலித்தனமான மற்றும் பாதுகாப்பான கணினி செயல்பாடுகளை வழங்கும். இதன் வசதிகளை ஓட்டுனர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்றாற்போல் பெற்று கொள்ளலாம். கூடுதலாக, இது வாகனம் மற்றும் வெளிப்புற நெட்வொர்க்குகளை கண்காணிப்பதன் மூலமும், வாகன பாதுகாப்புடன் தொடர்புடைய தரவை தனிமைப்படுத்துவதன் மூலமும் கணினியைப் பாதுகாக்கிறது.

ஹூண்டாய், கியா கார்களில் வரப்போகும் புதிய தொழிற்நுட்ப வசதி!! என்னவென்று தெரியுமா?

உலகளவில் கனெக்டட் கார் தொழிற்நுட்பம் மிக வேகமாக முக்கியமான ஒன்றாக மாறிவருகிறது. இதன் வெளிப்பாடே தற்போது ஹூண்டாய் மற்றும் என்விடியா நிறுவனங்களுக்கு இடையே கூட்டணியாகும்.

Most Read Articles
English summary
Hyundai & Nvidia Partners To Develop New Connected Car Platform: Here Are All Details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X