ரூ.27,000 வரையில் விலை அதிகரிப்பை பெறும் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ பிஎஸ்6...

ஹூண்டாய் சான்ட்ரோ மாடலின் எக்ஸ்ஷோரூம் விலை பற்றிய தகவல் இணையத்தில் கசிந்துள்ளன. இதுகுறித்த தகவலினை இந்த செய்தியில் இனி பார்ப்போம்.

ரூ.27,000 வரையில் விலை அதிகரிப்பை பெறும் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ பிஎஸ்6...

தற்சமயம் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற ஹூண்டாய் சான்ட்ரோ மாடலின் ஆரம்ப விலை ரூ.4.29 லட்சமாக எக்ஸ்ஷோரூமில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் டாப் வேரியண்ட் ரூ.5.78 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.27,000 வரையில் விலை அதிகரிப்பை பெறும் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ பிஎஸ்6...

இந்த விலை ரூ.22,000- 27,000 வரையில் அதிகரிக்கப்பட்டு சான்ட்ரோ பிஎஸ்6 மாடல் ரூ.4.57 லட்சம் ஆரம்ப விலையுடன் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கசிந்துள்ள இந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. மேலும் சான்ட்ரோ மாடலின் டாப் வேரியண்ட்டான புதிய ஆஸ்டா ஏஎம்டி ட்ரீம் ரூ.6.25 லட்சத்தை விலையாக பெற்றுள்ளதாகவும் இந்த தகவல் கூறுகிறது.

ரூ.27,000 வரையில் விலை அதிகரிப்பை பெறும் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ பிஎஸ்6...

மற்றப்படி ஹூண்டாய் சான்ட்ரோ மாடலின் ஸ்பெஷல் எடிசன் ட்ரீம்களான எஸ்இ உள்ளிட்டவையும் சிஎன்ஜி ட்ரீம்களும் விலை அதிகரிப்பை பெறவில்லை. புதிய பிஎஸ்6 ஹூண்டாய் சான்ட்ரோ புதிய டிசைனுடன் உயரமான தோற்றத்தை கொண்டுள்ளது.

ரூ.27,000 வரையில் விலை அதிகரிப்பை பெறும் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ பிஎஸ்6...

முன்புறத்தில் இந்த கார் க்ரோம்-ஆல் சூழப்பட்ட அருவி வடிவிலான க்ரில், ஸ்விஃப்ட்பேக் ஹெட்லைட்ஸ், ஃபாக் விளக்குகள், க்ரில் மற்றும் ஃபாக் விளக்குகளை சுற்றிலும் கருப்பு நிறத்தில் பிளாஸ்டிக் பேனல்கள் மற்றும் புதிய டிசைனில் பம்பர் போன்றவற்றை பெற்றுள்ளது.

ரூ.27,000 வரையில் விலை அதிகரிப்பை பெறும் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ பிஎஸ்6...

பின்புறத்தில், பெரிய விண்ட்ஷீல்ட், புதியதாக டெயில்லைட் க்ளஸ்ட்டர், காரின் கூரைக்கு அருகே ஸ்டாப் விளக்குகள், பிளாஸ்டிக் மற்றும் வெளிச்சத்தை பிரதிப்பலிக்கும் பாகங்களுடன் புதிய டிசைனில் பம்பர் உள்ளிட்டவற்றை இந்த சான்ட்ரோ பிஎஸ்6 கார் கொண்டுள்ளது.

ரூ.27,000 வரையில் விலை அதிகரிப்பை பெறும் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ பிஎஸ்6...

காரின் உட்புறத்தில் கருப்பு மற்றும் பழுப்பு என இரு நிறங்களில் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தீம், டேஸ்போர்டு மற்றும் கதவுகளிலும் தொடர்ந்துள்ளது. கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ள சில்வர் நிறம், ஏசி வெண்ட்ஸ், கியர் லிவர் மற்றும் ஸ்டேரிங் சக்கரத்தில் மிளிர்கிறது.

ரூ.27,000 வரையில் விலை அதிகரிப்பை பெறும் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ பிஎஸ்6...

மேலும் உட்புறத்தில், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே மற்றும் மிரர்லிங்க் உள்ளிட்டவற்றுடன் இணைக்கக்கூடிய 7-இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், மின்சாரம் மூலமாகவும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓஆர்விஎம்கள், பின்புறத்திலும் ஏசி வெண்ட்ஸ், ஆடியோ கண்ட்ரோலுடன் உள்ள ஸ்டேரிங்,(அடுத்த ஸ்லைடை பார்க்க)

ரூ.27,000 வரையில் விலை அதிகரிப்பை பெறும் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ பிஎஸ்6...

யுஎஸ்பி வசதி, பல தகவல்களை தரக்கூடிய திரையுடன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான பின்புற இருக்கைகள், பவர் விண்டோஸ் மற்றும் பின்புற கண்ணாடியையும் சுத்த செய்ய வைபர் மற்றும் வாஷ்ஷர் உள்ளிட்ட தொழிற்நுட்பங்களையும் இந்த பிஎஸ்6 கார் பெற்றுள்ளது.

ரூ.27,000 வரையில் விலை அதிகரிப்பை பெறும் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ பிஎஸ்6...

பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்பட்டுள்ள இந்த காரின் என்ஜின் தேர்வுகளிலும் வெளியிடும் ஆற்றல் அளவுகளிலும் எந்த மாற்றமும் ஏற்படுத்தவில்லை. வழக்கமான 1.1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தான் பிஎஸ்6-க்கு மாற்றப்பட்டுள்ளது.

ரூ.27,000 வரையில் விலை அதிகரிப்பை பெறும் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ பிஎஸ்6...

இந்த பெட்ரோல் என்ஜின் தற்சமயம் பிஎஸ்4 தரத்தில் அதிகப்பட்சமாக 5,500 ஆர்பிஎம்-ல் 68 பிஎச்பி பவரையும் 4,500 ஆர்பிஎம்-ல் 99 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதே ஆற்றலை தான் பிஎஸ்6 தரத்திலும் இந்த என்ஜின் காருக்கு வழங்கவுள்ளது.

ரூ.27,000 வரையில் விலை அதிகரிப்பை பெறும் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ பிஎஸ்6...

இந்த என்ஜினுடன் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் நிலையாகவும், ஏஎம்டி கியர்பாக்ஸ் கூடுதல் தேர்வாகவும் வழங்கப்படுகிறது. ஹூண்டாய் சான்ட்ரோ மாடலின் மற்றொரு சிஎன்ஜி வேரியண்ட் அதே பெட்ரோல் என்ஜினுடன் 5,500 ஆர்பிஎம்-ல் 58 பிஎச்பி பவர் மற்றும் 4,500 ஆர்பிஎம்-ல் 84 என்எம் டார்க் திறனை காருக்கு அதிகப்பட்சமாக வழங்குகிறது.

ரூ.27,000 வரையில் விலை அதிகரிப்பை பெறும் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ பிஎஸ்6...

வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் புதிய மாசு உமிழ்வு விதி அமல்படுத்தப்படவுள்ளதால், அனைத்து நிறுவனங்கள் பிஎஸ்6 வாகனங்களின் தயாரிப்பில் மும்முரமாக இறங்கியுள்ளன. அந்த வகையில் ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து அறிமுகமாகவுள்ள மாடல் தான் சான்ட்ரோ பிஎஸ்6.

ரூ.27,000 வரையில் விலை அதிகரிப்பை பெறும் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ பிஎஸ்6...

ஹூண்டாய் நிறுவனம் இந்த விலை அதிகரிப்பை ஈடுக்கட்ட கூடுதலாக சில அம்சங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கினாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை.

Source: Carwale

Most Read Articles

English summary
Hyundai Santro BS6 Prices Revealed Ahead Of Launch: Prices Increased By Upto Rs 27,000
Story first published: Thursday, January 9, 2020, 19:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X