செயல்திறன்மிக்க ஹூண்டாய் டக்ஸன் என் லைன் காரின் படங்கள் முதன்முறையாக வெளியீடு!

ஹூண்டாய் மோட்டார்ஸின் புதிய அறிமுகமாக உலகளவில் வெளியாகவுள்ள டக்ஸன் என் லைன் காரின் டீசர் படங்கள் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

செயல்திறன்மிக்க ஹூண்டாய் டக்ஸன் என் லைன் காரின் படங்கள் முதன்முறையாக வெளியீடு!

ஹூண்டாய் நிறுவனம் ரீடிசைன் செய்யப்பட்ட டக்ஸன் எஸ்யூவி காரை உலகளவில் கடந்த 2020 செப்டம்பர் மாதத்தில் வெளியிட்டிருந்தது. இதனை தொடர்ந்து டக்ஸனின் என் லைன் வேரியண்ட் காரும் விரைவில் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ளது.

செயல்திறன்மிக்க ஹூண்டாய் டக்ஸன் என் லைன் காரின் படங்கள் முதன்முறையாக வெளியீடு!

இந்த நிலையில் 2020 டக்ஸனின் என் லைன் வேரியண்ட்டின் டீசர் படங்கள் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளன. முக்கியமான லைன்கள் மற்றும் பரந்த மல்டி-லேயர் லைட்டிங் க்ரில் உள்ளிட்டவற்றை கொண்ட கூர்மையான முன்பகுதியின் மூலமாக டக்ஸன் மற்ற அனைத்து ஹூண்டாய் கார்களை காட்டிலும் தனித்து நிற்கிறது.

செயல்திறன்மிக்க ஹூண்டாய் டக்ஸன் என் லைன் காரின் படங்கள் முதன்முறையாக வெளியீடு!

அதிலும் விரைவில் இந்த எஸ்யூவி காரில் கொண்டுவரப்படவுள்ள என் லைன் வேரியண்ட், வெளிப்புறத்தை மற்ற வழக்கமான வேரியண்ட்களில் இருந்து வேறுபடுவதற்காக அப்டேட்டாக பெற்றுள்ளது. இத்தகைய அப்டேட்களை தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் படங்கள் சிறிது வெளிப்படுத்துகின்றன.

செயல்திறன்மிக்க ஹூண்டாய் டக்ஸன் என் லைன் காரின் படங்கள் முதன்முறையாக வெளியீடு!

இந்த படங்களில், க்ரில் அமைப்பின் அடிப்பகுதியை சற்று அகலமாகவும், அப்டேட் செய்யப்பட்ட விளக்குகளும் டக்ஸன் என் லைன் காரில் வழங்கப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. ஒட்டு மொத்தமாக ஸ்போர்டியான தோற்றத்தில் உள்ள இந்த என் வரிசை கார் நிச்சயம் அதிகளவில் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும்.

செயல்திறன்மிக்க ஹூண்டாய் டக்ஸன் என் லைன் காரின் படங்கள் முதன்முறையாக வெளியீடு!

பின்பக்கத்திலும் பம்பர் மறுவேலை செய்யப்பட்டுள்ளது. மேலும் டிஃப்யூஸர் மற்றும் முட்டை வடிவத்தில் எக்ஸாஸ்ட் குழாய்களையும் காரின் பின்பக்கத்தில் பார்க்க முடிகிறது. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு அதிகப்பட்சமாக 230 எச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய ஹைப்ரீட் என்ஜினை டக்ஸனின் புதிய என் லைன் வேரியண்ட் பெற்று வரலாம்.

செயல்திறன்மிக்க ஹூண்டாய் டக்ஸன் என் லைன் காரின் படங்கள் முதன்முறையாக வெளியீடு!

ஆனால் இந்த ஹைப்ரீட் என்ஜின் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. அதேநேரம் அதிகப்பட்சமாக 290 எச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 2.5 லிட்டர் யூனிட்டும் இந்த என் லைன் காரில் பயன்படுத்தப்படலாம்.

செயல்திறன்மிக்க ஹூண்டாய் டக்ஸன் என் லைன் காரின் படங்கள் முதன்முறையாக வெளியீடு!

தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் எலண்ட்ரா என் போன்ற என் லைன் கார்களை அதிகளவில் அடுத்த இரண்டு வருடங்களில் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கோனா என் கார் சமீபத்தில் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செயல்திறன்மிக்க ஹூண்டாய் டக்ஸன் என் லைன் காரின் படங்கள் முதன்முறையாக வெளியீடு!

இந்திய சந்தையை பொறுத்தவரையில், டக்ஸன் காரே முதலில் இங்கு விற்பனையில் இல்லை. இதனால் இதன் புதிய என் லைன் வேரியண்ட்டும் நம் நாட்டிற்கு வர வாய்ப்பே இல்லை. ஏனெனில் ஹூண்டாய் நிறுவனம் அதன் செயல்திறன்மிக்க என் லைன் கார்களை இந்தியாவில் விற்பனை செய்வது இல்லை.

Most Read Articles

English summary
Hyundai Tucson N Line Officially Teased For The First Time
Story first published: Wednesday, November 11, 2020, 15:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X