Just In
- 5 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 6 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 7 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 8 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இங்கதான் ஃபேமஸ் இல்ல, வெளிநாடுகளில் செம ஃபேமஸ்!! ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட்டில் 2021 ஹூண்டாய் டக்ஸன்...
தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் புதிய தலைமுறை டக்ஸனின் ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட்டை பற்றிய விபரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஐரோப்பிய சந்தையில் அடுத்த வருடத்தில் அறிமுகமாகவுள்ள புதிய தலைமுறை ஹூண்டாய் டக்ஸன் வாடிக்கையாளர்களை ஆச்சிரியப்படுத்தும் விதமாக வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் முக்கிய அப்கிரேட்களை பெற்று வரவுள்ளது.

சர்வதேச சந்தையில் ப்ரீமியம் எஸ்யூவி காருக்கு சற்று பெரியதாகவே வெற்றிடம் உள்ளது. இதனை மனதில் வைத்துதான் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் டக்ஸன் ப்ரீமியம் எஸ்யூவி காருக்கு பெரிய பெரிய அப்கிரேட்களை வழங்கியுள்ளது.

இந்த நிலையில் தற்போது தயாரிப்பு நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள தகவல்களின்படி, டக்ஸன் ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட் காரில் 1.6 லிட்டர் 4-சிலிண்டர் ஸ்மார்ட்ஸ்ட்ரீம் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படவுள்ளது.

இந்த பெட்ரோல் என்ஜின் 90 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் 13.8 kWh லித்தியம்-பாலிமர் பேட்டரி தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது. இந்த ப்ளக்-இன் ஹைப்ரீட் என்ஜின் அமைப்பின் மூலமாக 261 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக பெற முடியும்.

டக்ஸன் ஹைப்ரீட் காரை எலக்ட்ரிக் மோடிலேயே 50 கிமீ தூரத்திற்கு இயக்கி செல்ல முடியும் என ஹூண்டாய் தெரிவித்துள்ளது. இந்த ஹைப்ரீட் சிஸ்டத்துடன் ஷிஃப்ட்-பை-வயர் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.

இது என்ஜினின் ஆற்றலை எச்ட்ராக் 4-சக்கர ட்ரைவ் சிஸ்டத்தின் மூலமாக அனைத்து சக்கரங்களுக்கும் வழங்கும். இதன் பேட்டரியை சார்ஜ் செய்ய 7.2 கிலோவாட்ஸ் ஆன்போர்டு சார்ஜர் வழங்கப்படவுள்ளது. இதன் அதிக மின்னழுத்தம் கொண்ட பேட்டரி காரில் கணக்கச்சிதமாக பொருத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பின் இருக்கை பயணிகளுக்கு போதுமான இடவசதி கிடைத்துள்ளது. இதுமட்டுமின்றி, வெளியே நிலவும் வெப்பநிலையை பொறுத்து கார் உட்கொள்ளும் காற்றை சரி செய்து கொள்ளும் விதமாக ஆக்டிவ் ஏர் ஃப்ளாப் 2021 டக்ஸன் ப்ளக்-இன் ஹைப்ரீட் காரின் முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது.

எரிபொருள் திறனை மேம்படுத்தும் வகையிலும், காற்றினால் ஏற்படும் தடையினை குறைக்கும் விதத்திலும் 2021 டக்ஸனை வடிவமைத்துள்ளதாக கூறும் ஹூண்டாய், இந்த ஹைப்ரீட் காரில் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன் அமைப்பை வழங்கியுள்ளது.

இவற்றுடன் ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் மோட்களில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய அடாப்டிவ் டேம்பர் தொழிற்நுட்பம் மற்றும் ஆஃப்-ரோடு திறனிற்காக பாதைக்கு ஏற்ற மோட்-ஐ தேர்வு செய்யும் வசதி உள்ளிட்டவை புதிய டக்ஸனில் வழங்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் டக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் கார் 2020ஆம் வருட துவக்கத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் டக்ஸன் ப்ளக்-இன் ஹைப்ரீட் நம் நாட்டு சந்தையில் அறிமுகமாக குறைந்தது ஒரு வருடமாவது ஆகும்.