இந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார்! மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா? மிரட்டும் ஹூண்டாய்..!

ஹூண்டாய் நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த மாடலான வெனியூ காம்பேக்ட் எஸ்யூவி ரக காரில் 'கிளட்ச்' இல்லாத கியர்பாக்ஸ் அம்சத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார்! மலிவு விலை வெனியூ காரில் இப்படி ஒரு அம்சமா? மிரள வைக்கும் ஹூண்டாய்!

ஹூண்டாய் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மற்றும் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக வெனியூ எஸ்யூவி உருவாகியிருக்கின்றது. இந்த காரின் மலிவு விலை மற்றும் அதில் இடம் பெற்றிருக்கும் பிரமாண்ட தொழில்நுட்ப அம்சங்கள் அக்காருக்கு இந்த இடத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார்! மலிவு விலை வெனியூ காரில் இப்படி ஒரு அம்சமா? மிரள வைக்கும் ஹூண்டாய்!

இந்த வரவேற்பை தக்க வைத்துக் கொள்ள மற்றும் அதிகரிக்கச் செய்வதற்காக, ஹூண்டாய் நிறுவனம் தற்போது தனித்துவமான ஓர் அம்சத்தை இந்த மாடலில் வழங்க திட்டமிட்டுள்ளது.

அதாவது, க்ளட்ச் இல்லாத மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வை வெனியூ காரில் வழங்க அது திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த தகவலை ஹூண்டாய் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார்! மலிவு விலை வெனியூ காரில் இப்படி ஒரு அம்சமா? மிரள வைக்கும் ஹூண்டாய்!

ஐஎம்டி (Intelligent Manual Transmission) எனும் பெயரில் இந்த அம்சம் சர்வதேச சந்தையில் குறிப்பிடப்படுகின்றது. இது வெனியூவில் இடம்பெறுமானால், இந்திய சந்தையில் இதுமாதிரியான தொழில்நுட்ப அம்சத்துடன் விற்பனைக்கு வரும் முதல் காராக அது உருவெடுக்கும். மேலும், தற்போது கிடைத்து வரும் வரவேற்பை இரட்டிப்பாக்கவும் அது உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார்! மலிவு விலை வெனியூ காரில் இப்படி ஒரு அம்சமா? மிரள வைக்கும் ஹூண்டாய்!

இந்த புதிய அம்சத்துடன் வெனியூ மிக விரைவில் விற்பனைக்கு அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. குறிப்பிட்டு கூற வேண்டுமானால், இந்த மாதம் இறுதி அல்லது வரும் மாதத்திற்குள்ளாக இது எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார்! மலிவு விலை வெனியூ காரில் இப்படி ஒரு அம்சமா? மிரள வைக்கும் ஹூண்டாய்!

ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கின்ற இதே தொழில்நுட்ப அம்சத்துடன் புதிய சொனட் காரை அறிமுகம் செய்ய இருப்பதாக கியா நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரின் அறிமுகம் நடப்பாண்டின் ஏதோவொரு விழா காலத்தில் நிச்சயம் செய்யப்படும் என கூறப்பட்டு வருகின்றது.

இந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார்! மலிவு விலை வெனியூ காரில் இப்படி ஒரு அம்சமா? மிரள வைக்கும் ஹூண்டாய்!

இந்த நிலையில்தான் ஹூண்டாய் நிறுவனம் அதன் புகழ்மிக்க மாடலான வெனியூ காம்பேக்ட் எஸ்யூவியில் இந்த அம்சத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.

ஐஎம்டி (கிளட்லெஸ் மேனுவல் கியர்பாக்ஸ்), இது எஞ்ஜினில் அறிமுகம் செய்யப்படும் புதுமுக தொழில்நுட்பம் ஆகும். இதனைப் பெறும் கார்களில் இரு பெடல்கள் மட்டுமே இடம்பெறும். அதில் ஒன்று பிரேக்கிற்கும், மற்றொன்று ஆக்ஸசலரேட்டருக்குமானது ஆகும்.

இந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார்! மலிவு விலை வெனியூ காரில் இப்படி ஒரு அம்சமா? மிரள வைக்கும் ஹூண்டாய்!

அப்படியானால், கியரை மாற்றுவது எப்படி என்ற கேள்வி உங்களுக்கு எழும்பலாம். சந்தேகமே வேண்டாம், கிளட்சை பயன்படுத்தாமலே கியரை மாற்ற முடியும். இதற்கான தொழில்நுட்பமே ஐஎம்டி. இது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸைப் போன்று வேலை செய்யும். ஆனால், இதில் தேவையான கியரை நாம்தான் மாற்ற வேண்டும். ஆகையால், இதனை நடுத்தர ஆட்டோமேட்டிக் சிஸ்டம் என ஒரு சிலர் குறிப்பிடுகின்றனர்.

இந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார்! மலிவு விலை வெனியூ காரில் இப்படி ஒரு அம்சமா? மிரள வைக்கும் ஹூண்டாய்!

இந்த தொழில்நுட்பத்தில் எந்தவொரு காரும் இதுவரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. எனவே, இந்தியர்கள் மத்தியில் இந்த அம்சம் ஆவலைத் தூண்ட ஆரம்பித்துள்ளது. அதேசமயம், இந்த தொழில்நுட்ப அறிமுகமானது, ஹூண்டாய் காரின் விலையை பல மடங்கு உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார்! மலிவு விலை வெனியூ காரில் இப்படி ஒரு அம்சமா? மிரள வைக்கும் ஹூண்டாய்!

ஹூண்டாய் நிறுவனம் இந்த அம்சத்தை 1.0 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜினில் மட்டுமே வழங்க திட்டமிட்டிருக்கின்றது. இது வெனியூவின் மேனுவல் வெர்ஷனைப் போன்று 6 ஸ்பீடு கியர்பாக்ஸில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த புதிய தேர்வு, வெனியூ எஸ்யூவி காரில் பரந்தளவு ஆப்ஷனை வழங்குவதற்கு உதவும்.

இந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார்! மலிவு விலை வெனியூ காரில் இப்படி ஒரு அம்சமா? மிரள வைக்கும் ஹூண்டாய்!

மேலும், ஏற்கனவே அமோகமான வரவேற்பைப் பெற்று வரும் வெனியூவிற்கு இந்த புதிய தொழில்நுட்பம் கூடுதல் வரவேற்பு கிடைக்க வழிவகைச் செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஹூண்டாய் நிறுவனம், வெனியூ காரை அறிமுகம் செய்தபோது மிக மிக மலிவு விலையாக ரூ. 5 லட்சத்தை நிர்ணயித்திருந்தது. இது ஆரம்ப நிலை மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

Most Read Articles

English summary
Hyundai Venue Gets Clutchless Manual Gearbox Called IMT. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X