ஹூண்டாய் வென்யூவில் புதிய ஐஎம்டி கியர்பாக்ஸ்... டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம் இதோ...

ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் அதன் காம்பெக்ட் எஸ்யூவி ரக காரான வென்யூவில் புதியதாக ஐஎம்டி (இண்டெலிஜண்ட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன்)-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த புதிய ட்ரான்ஸ்மிஷன் உடன் நாங்கள் மேற்கொண்ட டெஸ்ட் ட்ரைவின் விமர்சனத்தை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹூண்டாய் வென்யூவில் புதிய ஐஎம்டி கியர்பாக்ஸ்... டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம் இதோ...

இந்தியாவில் க்ளட்ச் இல்லாமல் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனை பெறும் முதலாக காராக வென்யூ ஐஎம்டி விளங்குகிறது. மேலும் ஐஎம்டி கியர்பாக்ஸ் உடன் புத்தம் புதிய ஸ்போர்ட் ட்ரிம்-மும் வென்யூவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹூண்டாய் வென்யூவில் புதிய ஐஎம்டி கியர்பாக்ஸ்... டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம் இதோ...

வென்யூவில் எதற்காக மேனுவல் ட்ரான்ஸ்மிஷன்? விடை மிக எளிமையானது, ஆட்டோமேட்டிக் காரில் கிடைக்கும் சவுகரியத்தை மேனுவல் கார்களிலும் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்காக இந்த புதிய கியர்பாக்ஸ் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஹூண்டாய் வென்யூவில் புதிய ஐஎம்டி கியர்பாக்ஸ்... டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம் இதோ...

வெளிப்புறத்தில் மற்றும் உட்புறத்தில் சில காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ஸ்போர்ட் ட்ரிம் உடன் வென்யூவில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஐஎம்டி, க்ளட்ச் இல்லாத 6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் ஆகும்.

ஹூண்டாய் வென்யூவில் புதிய ஐஎம்டி கியர்பாக்ஸ்... டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம் இதோ...

டிசைன் & ஸ்டைலிங்

முன்புறத்தில் இருந்து ஆரம்பித்தோமேயானால், காரின் முன்பக்கத்தை வைத்து தான் புதிய ஸ்போர்ட் ட்ரிம்-ஐ அடையாளப்படுத்த முடியும். ஏனெனில் இந்த ட்ரிம்மில் வென்யூவின் கருப்பு நிற க்ரில் பகுதியின் இடதுபுறத்தில் சிவப்பு நிறத்தில் முத்திரை வழங்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் வென்யூவில் புதிய ஐஎம்டி கியர்பாக்ஸ்... டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம் இதோ...

முன்புற பம்பருக்கு அடிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ஹெட்லைட் அமைப்பானது, ஒளி பிரதிபலிப்பான் உடன் அடர்த்தி குறைந்த மற்றும் அடர்த்தி அதிகமான ஒளி பிரகாசத்திற்காக ஹலோஜன் ப்ரோஜெக்டர் செட்அப்-ஐ கொண்டுள்ளது. க்ளஸ்ட்டரை சுற்றியுள்ள எல்இடி டிஆர்எல்கள் ஹெட்லைட்டிற்கு கீழே ப்ரோஜெக்டர் ஃபாக் விளக்குகளாக ஹலோஜன் தரத்தில் உள்ளன.

ஹூண்டாய் வென்யூவில் புதிய ஐஎம்டி கியர்பாக்ஸ்... டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம் இதோ...

டர்ன் இண்டிகேட்டர்கள் ஹெட்லைட்டிற்கு மேற்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளன. பக்கவாட்டு பகுதிக்கு சென்றால், சக்கர ஆர்ச்கள், ரன்னிங் போர்டு மற்றும் மேற்கூரை ரெயில்களில் சிவப்பு நிற ஹைலைட் உடன் வென்யூ ஸ்போர்ட் ட்ரிம் வெளிவந்துள்ளது.

ஹூண்டாய் வென்யூவில் புதிய ஐஎம்டி கியர்பாக்ஸ்... டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம் இதோ...

C மற்றும் D பில்லர்களுக்கு இடையே உள்ள 'ஸ்போர்ட்' முத்திரைகளை தவிர்த்து காரின் ஹேண்டில்கள் க்ரோம்-ஆல் வடிவமைக்கப்பட்டுள்ளன. சிவப்பு நிற காலிபர்கள் உடன் முன்புற டிஸ்க் ப்ரேக் மற்றும் 16 இன்ச் அலாய் சக்கரங்கள் உண்மையில் அட்டகாசமான அம்சங்களாக காரில் உள்ளன.

ஹூண்டாய் வென்யூவில் புதிய ஐஎம்டி கியர்பாக்ஸ்... டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம் இதோ...

இதன் சக்கரங்களில் எம்ஆர்எஃப் நிறுவனத்தின் 215/60/ஆர்16 என்ற முகவரியை கொண்ட டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்புறத்தில் நிறுவனத்தின் லோகோ, காரின் பெயர் உள்ளிட்டவற்றுடன் பொருத்தப்பட்டிருப்பது டர்போ என்ஜின் என்பதை உணர்த்தும் விதமாக 'டர்போ' முத்திரையும் கொடுக்கப்படுகிறது.

ஹூண்டாய் வென்யூவில் புதிய ஐஎம்டி கியர்பாக்ஸ்... டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம் இதோ...

இந்த முத்திரையை பூட்டின் வலதுபுறத்திலும் பார்க்கலாம். காரில் பின்பக்க பார்க்கிங் கேமிரா மற்றும் சென்சார்கள் உடன் போக்குவரத்து மிகுந்த பகுதியிலும் பின்பக்கமாக சென்று காரை நிறுத்துவதற்கு உதவியாக அடாப்டிவ் வழிகாட்டுதலும் உள்ளது.

ஹூண்டாய் வென்யூவில் புதிய ஐஎம்டி கியர்பாக்ஸ்... டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம் இதோ...

உட்புற கேபின்

காரின் உட்புறத்தில் எதிர்பார்க்கும் அளவிற்கு விசாலான கேபின் கொடுக்கப்பட்டுள்ளது. சன்ரூஃப் உடன் வெளிவரும் இதன் கேபினில் ஏசி துவாரங்கள் மற்றும் க்ளைமேட் கண்ட்ரோல் டயல்களை சுற்றிலும் புதிய ஸ்போர்ட் ட்ரிமிற்காக சிவப்பு நிறம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஹூண்டாய் வென்யூவில் புதிய ஐஎம்டி கியர்பாக்ஸ்... டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம் இதோ...

இதே சிவப்பு நிற ஹைலைட் உடன் லெதரால் மூடப்பட்டு இருக்கும் இதன் ஸ்டேரிங் சக்கரம் இயக்குவதற்கு உண்மையில் நமக்கு நல்ல பிடிமானத்தை தருகிறது. மேலும் தாழ்வாக கொடுக்கப்பட்டுள்ளதால், ஸ்டேரிங் தான் மொத்த கேபினிற்கும் ஸ்போர்ட்டியான தோற்றத்தை வழங்குகிறது.

ஹூண்டாய் வென்யூவில் புதிய ஐஎம்டி கியர்பாக்ஸ்... டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம் இதோ...

இந்த ஸ்டேரிங் சக்கரத்தின் வலதுபுறத்தில் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கான கண்ட்ரோல்களும், இடதுபுறத்தில் ஓட்டுனருக்கு தேவையான கண்ட்ரோல்களை வழங்கக்கூடிய திரை கண்ட்ரோல் பொத்தான்களும் க்ரூஸ் கண்ட்ரோலும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் வென்யூவில் புதிய ஐஎம்டி கியர்பாக்ஸ்... டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம் இதோ...

இரட்டை நிறத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ள இதன் இருக்கைகளில் முன்புறத்தில் உள்ளவை, அட்ஜெஸ்ட் செய்யும் விதத்தில் உள்ளன. ஓட்டுனருக்கு காரை வளைவுகளில் திரும்பும்போது தேவையான சவுகரியத்தை வழங்கக்கூடியதாக உள்ள இந்த முன்புற இருக்கைகளில் இருந்து அப்படியே இரண்டாவது வரிசை இருக்கைகளுக்கு சென்றால், அங்கு அதிகப்பட்சமாக மூன்று நபர்களும், சவுகரியமாக இரண்டு நபர்களும் அமரலாம்.

ஹூண்டாய் வென்யூவில் புதிய ஐஎம்டி கியர்பாக்ஸ்... டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம் இதோ...

மைய ஆர்ம்ரெஸ்ட் மற்றும் கப் ஹோல்டர்கள் மட்டுமின்றி பின் இருக்கை பயணிகளுக்காகவும் ஏசி வென்யூ ஸ்போர்ட் ட்ரிம்மில் வழங்கப்பட்டுள்ளது. இதன் 350 லிட்டர் கொள்ளவு சேமிப்பிடத்தில் பயணம் செய்யும் நான்கு நபர்களது பொருட்களை எந்த பிரச்சனையுமின்றி அடுக்கி வைக்கலாம்.

ஹூண்டாய் வென்யூவில் புதிய ஐஎம்டி கியர்பாக்ஸ்... டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம் இதோ...

மேலும் கூடுதலான பொருட்களை வைப்பதற்கு பின் இருக்கை வரிசை 60:40 என்ற விகிதத்தில் பிரிக்கும் விதத்தில் வழங்கப்பட்டுள்ளது. அனலாக் டயல்களுடன் உள்ள டச்சோமீட்டர் மற்றும் வேகமானிகளுக்கு இடையே கொடுக்கப்பட்டுள்ள 4.5 இன்ச் எல்சிடி திரை ஆனது பயண தூரம், டிஜிட்டல் வேகமானி, எரிபொருள் அளவு மற்றும் நேரம் உள்ளிட்ட தகவல்களை ஓட்டுனருக்கு வழங்குகிறது.

ஹூண்டாய் வென்யூவில் புதிய ஐஎம்டி கியர்பாக்ஸ்... டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம் இதோ...

செங்குத்தான வடிவில் சூரிய ஒளியினால் பிரதிபலிக்காத இதன் 7-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கும் விதத்தில் உள்ளது. இந்த இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தின் கீழ்பகுதியில் க்ளைமேட் கண்ட்ரோலுக்கான டயல்களும், மையத்தில் வெப்பநிலை அமைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் வென்யூவில் புதிய ஐஎம்டி கியர்பாக்ஸ்... டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம் இதோ...

என்ஜின் & ஹேண்ட்லிங்

வென்யூ ஐஎம்டி காரில் வழக்கமான 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் பிஎஸ்6 என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 120 பிஎச்பி மற்றும் 170 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் இந்த டர்போ என்ஜின் உடன் 6-ஸ்பீடு ஐஎம்டி கியர்பாக்ஸ் ஆனது 2-பெடல் ட்ரான்ஸ்மிஷன் உடன் செயல்படுகிறது.

ஹூண்டாய் வென்யூவில் புதிய ஐஎம்டி கியர்பாக்ஸ்... டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம் இதோ...

6-ஸ்பீடு ஐஎம்டி கியர்பாக்ஸில் மின்-இயந்திரவியல் க்ளட்ச் உள்ளது. நீங்கள் ஒரு கியரை மாற்றப் போகிற போதெல்லாம் அல்லது கியர் நெம்புகோலை ஒரு சுற்றுக்கு 10 சதவிகிதம் நகர்த்தியவுடன், நீங்கள் கிளட்ச் திறப்பைக் காலில் வைப்பீர்கள், இது, கியரை நீங்கள் மேல் அல்லது கீழ்நோக்கி மாற்றத் தயாராக இருப்பதாக காருக்கு சொல்வதை போன்றது.

ஹூண்டாய் வென்யூவில் புதிய ஐஎம்டி கியர்பாக்ஸ்... டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம் இதோ...

இந்த கியர் மாற்றங்களுக்கு இடையில், ஆற்றலில் ஒரு சிறிய வீழ்ச்சி இருக்கும், அதை உங்களால் உணர முடியும், ஆனால் அது உண்மையில் மிகக் குறைவு. ஏனெனில், கியர்களை மாற்றும் போது தலை தள்ளாக்கும் விளைவு முற்றிலும் இல்லாமல் போய்விடுகிறது.

ஹூண்டாய் வென்யூவில் புதிய ஐஎம்டி கியர்பாக்ஸ்... டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம் இதோ...

இந்த கியர்பாக்ஸில் கியரை மாற்றுவது ஒன்றும் அவ்வளவு சிரமமான காரியமாக இல்லை. ஆக்ஸலரேட்டரில் கால் வைக்காமல் கியரை மாற்றும்போது தான் கியர்பாக்ஸ் சற்று வலிமையாக இருப்பதுபோல் எங்களுக்கு தோன்றியது. இதற்கு காரணம், கியர்பாக்ஸ் அப்போதும் சில அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கும்.

ஹூண்டாய் வென்யூவில் புதிய ஐஎம்டி கியர்பாக்ஸ்... டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம் இதோ...

அதேநேரம் வழக்கமான மேனுவல் கியர்பாக்ஸில் செயல்படுவதை போன்று ஐஎம்டி-லும் மென்மையாக செயல்பட முடியும். ஆனால் மேனுவல் கியர்பாக்ஸ் சில சமயங்களில் காரை நிறுத்திவிடுகிறது. ஆனால் ஐஎம்டி கியர்பாக்ஸில் கார் அவ்வாறு நின்று போக வாய்ப்பில்லை.

ஹூண்டாய் வென்யூவில் புதிய ஐஎம்டி கியர்பாக்ஸ்... டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம் இதோ...

அதேபோல் ஒரிடத்தில் நின்று கொண்டிருக்கும்போது அதிகப்பட்ச கியரில் காரை எடுக்க நினைத்தாலும், அது முடியாது. உடனடியாக திரையில் 'குறைந்தப்பட்ச கியரை தேர்தெடுங்கள்' என்ற குறுந்தகவல் வந்து நிற்கும். ஹில் ஸ்டார்ட் வசதியையும் வென்யூ கொண்டுள்ளதால் மலை பாதைகளில் வாகன நிறுத்துவது கடினமானதாக இருக்காது.

ஹூண்டாய் வென்யூவில் புதிய ஐஎம்டி கியர்பாக்ஸ்... டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம் இதோ...

சஸ்பென்ஷன் வென்யூ ஐஎம்டி காரில் சற்று விரைப்பானதாக கொடுக்கபட்டுள்ளதால் குழிகள் மற்றும் வேகத்தடைகளை தெளிவாக உணர முடிந்தது. 215 பிரிவு டயர்கள் காருக்கு நல்ல பிடிமானத்தை வழங்குகின்றன. இவற்றுடன் ஏபிஎஸ் மற்றும் ஸ்விட்ச் செய்யக்கூடிய ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் உள்ளிட்டவையும் உள்ளன. இதற்கு மேல் வேறென்ன வேண்டும்.

ஹூண்டாய் வென்யூவில் புதிய ஐஎம்டி கியர்பாக்ஸ்... டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம் இதோ...

இதன் சஸ்பென்ஷன் அமைப்பால் இயக்கத்தின்போது கார் பெரிய அளவில் குலுங்கவில்லை. ஸ்டேரிங் சக்கரத்தின் செயல்பாடு அதிவேகத்தின்போது மிகவும் சிறப்பாக உள்ளது. இவற்றுடன் தரமான மின்காப்பு மற்றும் என்விஎச் நிலைகளையும் வென்யூ கார் பெற்று வருவதால், என்ஜினினாலும், வெளிப்புறத்தில் இருந்தும் பெரிய அளவில் எந்த இரைச்சலும் உட்புற கேபினுக்கு வருவதற்கு வாய்ப்பில்லை.

ஹூண்டாய் வென்யூவில் புதிய ஐஎம்டி கியர்பாக்ஸ்... டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம் இதோ...

வென்யூ ஐஎம்டி, மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இவற்றின் ஆரம்ப விலை ரூ.9.99 லட்சம் என்று இருக்க, இதன் புதிய ஸ்போர்ட் ட்ரிம் வேரியண்ட் அதிகப்பட்சமாக ரூ.11.58 லட்சத்தை விலையாக பெற்றுள்ளது.

ஹூண்டாய் வென்யூவில் புதிய ஐஎம்டி கியர்பாக்ஸ்... டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம் இதோ...

வென்யூவிற்கு விற்பனையில் போட்டியளிக்க தற்சமயம் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மஹிந்திரா எக்ஸ்யூவி300, டாடா நெக்ஸான் மற்றும் கியா செல்டோஸ் போன்ற பிற காம்பெக்ட் எஸ்யூவி கார்களும் சந்தையில் உள்ளன.

ஹூண்டாய் வென்யூவில் புதிய ஐஎம்டி கியர்பாக்ஸ்... டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம் இதோ...

ட்ரைவ்ஸ்பார்க்கின் கருத்து

ஹூண்டாய் வென்யூ, இந்தியாவில் பிரபலமான காம்பெக்ட் எஸ்யூவிகளுள் ஒன்று. கடந்த ஆண்டு அறிமுகத்தின்போது இந்த ஹூண்டாய் கார் மீது ஏற்பட்ட கவனம் தற்போது மீண்டும் புதிய ஐஎம்டி ஸ்போர்ட் ட்ரிம் மூலமாக உருவாகியுள்ளது. இது வாடிக்கையாளர்களின் வரவேற்பை நிச்சயம் அதிகரிக்கும் என்பதால், இது ஹூண்டாயின் நல்ல முடிவே ஆகும்.

ஹூண்டாய் வென்யூவில் புதிய ஐஎம்டி கியர்பாக்ஸ்... டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம் இதோ...

அதுமட்டுமில்லாமல், வென்யூ மேனுவல் காரின் விலையில் இருந்து, புதிய ஐஎம்டி-ன் விலை வெறும் ரூ.25,000 மட்டுமே அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் முதல் காரை வாங்க விரும்புவோருக்கு ஏற்றதாக விளங்கும் வென்யூவை ஐஎம்டி ஸ்போர்ட் ட்ரிம்மில் வாங்கினால் இன்னும் ஸ்டைலிஷான ஆளாக விளங்குவீர்கள்.

Most Read Articles
English summary
Hyundai Venue iMT Sport Review
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X