வெனியூ கார் விலையை உயர்த்தி ஹூண்டாய் கொடுத்த 'தீபாவளி பரிசு'!

பண்டிகை காலத்தை முன்னிட்டு கார் நிறுவனங்கள் ஆஃபர்களை அள்ளி வீசி வரும் நிலையில், ஹூண்டாய் நிறுவனம் வெனியூ விலையை திடீரென உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

 வெனியூ கார் விலையை உயர்த்தி ஹூண்டாய் கொடுத்த 'தீபாவளி பரிசு'!

நவராத்திரி, தந்திராஸ் மற்றும் தீபாவளி பண்டிகைகளை் சேர்ந்து வரும் இந்த தருணத்தில் புதிய வாகனம் வாங்குவதற்கான திட்டத்தில் வாடிக்கையாளர்கள் மூழ்கி உள்ளனர். இவர்களை கவர்ந்து இழுப்பதற்காக பல்வேறு சிறப்பு தள்ளுபடி ஆஃபர்களை கார் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.

 வெனியூ கார் விலையை உயர்த்தி ஹூண்டாய் கொடுத்த 'தீபாவளி பரிசு'!

இந்த சூழலில், ஹூண்டாய் நிறுவனம் மாறாக வெனியூ காரின் விலையை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. ஆம், வெனியூ எஸ்யூவியின் விலையை ரூ.5,000 முதல் ரூ.12,000 வரை உயர்த்தி இருக்கிறது ஹூண்டாய்.

 வெனியூ கார் விலையை உயர்த்தி ஹூண்டாய் கொடுத்த 'தீபாவளி பரிசு'!

ஹூண்டாய் வெனியூ காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் மாடலின் இ என்ற விலை குறைவான வேரியண்ட்டின் விலை ரூ.5,000 அதிகரிக்கப்பட்டுள்ளது.

 வெனியூ கார் விலையை உயர்த்தி ஹூண்டாய் கொடுத்த 'தீபாவளி பரிசு'!

ஹூண்டாய் வெனியூ காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் மாடலின் எஸ் மற்றும் எஸ் ப்ளஸ், டர்போ பெட்ரோல் மாடலின் மேனுவல் எஸ், டிசிடி எஸ், எஸ்எக்ஸ், எஸ்எக்ஸ் ஸ்போர்ட், எஸ்எக்ஸ் ஆப்ஷனள் எஸ்எக்ஸ் ஆப்ஷனல் ஸ்போர்ட், டிசிடி எஸ்எக்ஸ் ப்ளஸ் ஸ்போர்ட் வேரியண்ட்டுகளின் விலை ரூ.7,000 விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, டீசல் மாடலின் இ, எஸ் மற்றும் எஸ்எக்ஸ் ஆப்ஷனல் ஆகிய வேரியண்ட்டுகளின் விலையும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

 வெனியூ கார் விலையை உயர்த்தி ஹூண்டாய் கொடுத்த 'தீபாவளி பரிசு'!

ஹூண்டாய் வெனியூ காரின் டர்போ பெட்ரோல் மாடலின் டிசிடி எஸ்எக்ஸ் ப்ளஸ் வேரியண்ட்டின் விலை ரூ.12,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. இனி ஹூண்டாய் வெனியூ கார் ரூ.6.74 லட்சம் முதல் ரூ.11.65 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

 வெனியூ கார் விலையை உயர்த்தி ஹூண்டாய் கொடுத்த 'தீபாவளி பரிசு'!

இந்த விலை உயர்வு மூலமாக கியா சொனெட் எஸ்யூவியின் பேஸ் வேரியண்ட்டைவிட வெனியூ பேஸ் வேரியண்ட் விலை ரூ.4,000 கூடுதலாகி உள்ளது. அதேநேரத்தில், கியா சொனெட் டாப் வேரியண்ட் ரூ.12.89 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும் நிலையில், வெனியூ டாப் வேரியண்ட் ரூ.11.65 லட்சத்தில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

 வெனியூ கார் விலையை உயர்த்தி ஹூண்டாய் கொடுத்த 'தீபாவளி பரிசு'!

விலை உயர்வுடன் சேர்த்து வேரியண்ட் தேர்வுகளிலும் சில மாறுதல்களை செய்துள்ளது. இதுவரை 24 வேரியண்ட்டுகளில் ஹூண்டாய் வெனியூ வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இனி 19 வேரியண்ட்டுகளில் மட்டுமே கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 5 வேரியண்ட்டுகள் நீக்கப்பட்டுவிட்டன.

 வெனியூ கார் விலையை உயர்த்தி ஹூண்டாய் கொடுத்த 'தீபாவளி பரிசு'!

ஹூண்டாய் வெனியூ கார் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. விற்பனையிலும் கலக்கி வருகிறது. இந்த காரில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 82 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடல் 118 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதன் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 98 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

 வெனியூ கார் விலையை உயர்த்தி ஹூண்டாய் கொடுத்த 'தீபாவளி பரிசு'!

ஹூண்டாய் வெனியூ காரில் இருக்கும் 8 அங்குல தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். அதேபோன்று, புளூலிங்க் செயலி மூலமாக கனெக்டெட் கார் தொழில்நுட்பத்தை பெறுவதற்கான வாய்ப்பையும் கொடுக்கிறது.

 வெனியூ கார் விலையை உயர்த்தி ஹூண்டாய் கொடுத்த 'தீபாவளி பரிசு'!

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

Most Read Articles

English summary
Hyundai India has increased the prices of the Venue compact-SUV in the Indian market. The Hyundai Venue price increase ranges between Rs 5000 to Rs 12,000 depending on the variant. The company has also removed a few variants of the compact-SUV along with the price increase.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X