க்ளைமேட் குளிர்ச்சியா இருக்கு ஓகே, கண்ணுக்கு!! இந்த கார் உங்களின் கண்களுக்கு இதமான அனுபவத்தை வழங்கும்...

ஹூண்டாய் வெர்னா கார் அரிய வகை மாடலாக உருமாறியுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

க்ளைமேட் குளிர்ச்சியா இருக்கு ஓகே, கண்ணுக்கு!! இது உங்களின் கண்களுக்கு இதமான அனுபவத்தை வழங்கும்...

ஹூண்டாய் பிரபலமான கார் மாடல்களில் வெர்னா-வும் ஒன்று. இந்த காரையே கேரளத்து இளைஞர்கள் நம்ப முடியாத ஸ்டைலுக்கு மாடிஃபிகேஷன் வாயிலாக மாற்றியமைத்துள்ளனர். இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி வாகன மாடிஃபிகேஷன் என்பது அங்கீகரிக்கப்படாத ஓர் செயலாகும். இது வாகனத்தின் உண்மை தோற்றத்தை அடியோடு அழித்துவிடும் என்கிற காரணத்தினால் இந்த செயலை விதிகள் அங்கீகரிக்கவில்லை.

க்ளைமேட் குளிர்ச்சியா இருக்கு ஓகே, கண்ணுக்கு!! இது உங்களின் கண்களுக்கு இதமான அனுபவத்தை வழங்கும்...

இருப்பினும், இந்திய வாகன ஆர்வலர்கள் தங்களுக்கு பிடித்தமான ஸ்டைலுக்கு வாகனங்களை அப்கிரேட் செய்த வண்ணம் இருக்கின்றனர். அவ்வாறு மாடிஃபிகேஷன் செய்யப்படும் வாகனங்கள் பொதுமக்களின் மனம் கவர்ந்த வாகனமாக மாறுவதுண்டு. அந்தவகையிலான ஓர் காராகவே இப்போது மாடிஃபை செய்யப்பட்டிருக்கும் ஹூண்டாய் வெர்னா கார் உள்ளது.

க்ளைமேட் குளிர்ச்சியா இருக்கு ஓகே, கண்ணுக்கு!! இது உங்களின் கண்களுக்கு இதமான அனுபவத்தை வழங்கும்...

கவர்ச்சிான தோற்றத்திற்காக காரின் உள் மற்றும் வெளிப்புறத் தோற்றத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், மிக முக்கியமான மாற்றமாக நிற மாற்றம் இருக்கின்றது. காரின் பெரும்பாலான பாகங்களை நீல நிறமே ஆக்கிரமிப்பு செய்கின்றது. இத்துடன், கருப்பு நிறமும் ஆங்காங்கே தனது முகத்தைக் காட்டுகின்றது. இருப்பினும் நீல நிறத்தின் ஆதிக்கமே பெருமளவில் இருக்கின்றது.

க்ளைமேட் குளிர்ச்சியா இருக்கு ஓகே, கண்ணுக்கு!! இது உங்களின் கண்களுக்கு இதமான அனுபவத்தை வழங்கும்...

எனவே இக்காரை சிலர் 'நீல தேனி' என அழைக்கத் தொடங்கியிருக்கின்றனர். நிறத்தைப் போலவே காரின் பானட், பம்பர், வீல், மின் விளக்குகள் உள்ளிட்டவையும் மாற்றப்பட்டிருக்கின்றன. நீக்கப்பட்ட கூறுகளுக்கு பதிலாக மிகவும் ஸ்டைலான எல்இடி மின் விளக்கு, கருப்பு நிற பம்பர் மற்றும் கட்டுமஸ்தான பானட் பொருத்தப்பட்டிருக்கின்றது. இவை வெர்னா காருக்கு ஸ்போர்ட் கார்களுக்கு இணையான தோற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

க்ளைமேட் குளிர்ச்சியா இருக்கு ஓகே, கண்ணுக்கு!! இது உங்களின் கண்களுக்கு இதமான அனுபவத்தை வழங்கும்...

இதேபோன்று பின்பகுதியிலும் வெர்னா ஸ்போர்ட்ஸ் கார் தோற்றத்தை வழங்கும் வகையில் புதிய லோகோக்கள், இயக்கத்தின்போது பின் வீலுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய வளைவு (ஸ்பாய்லர்), எல்இடி ஸ்டாப் லைட்டுகள் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றுடன் மிகவும் ஸ்பெஷலான வசதியாக சிசர் மாடலிலான டூர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

க்ளைமேட் குளிர்ச்சியா இருக்கு ஓகே, கண்ணுக்கு!! இது உங்களின் கண்களுக்கு இதமான அனுபவத்தை வழங்கும்...

இத்துடன், நீளமான எல்இடி லைட் காரின் முன்பக்க மேற்கூரையிலும், காலிபர் டிஸ்க் பிரேக்குகளும் இக்காரில் பொருத்தப்பட்டிருக்கின்றது. இதுபோலவே எக்கசக்க அம்சங்கள் காரை படுகவர்ச்சியானதாக மாற்றும் நோக்கில் மாடிஃபிகேஷன் குழுவினர் சேர்த்திருக்கின்றனர். ஆகையால், இது பழைய தலைமுறை வெர்னா கார் என்பதையே மழுங்கடிக்கப்பட்டுள்ளது.

க்ளைமேட் குளிர்ச்சியா இருக்கு ஓகே, கண்ணுக்கு!! இது உங்களின் கண்களுக்கு இதமான அனுபவத்தை வழங்கும்...

Image Courtesy: Vineeth Vijayan

ஆமாங்க, இது 2014 மாடல் ஹூண்டாய் வெர்னா காராகும். இது, 1.4 பெட்ரோல் எஞ்ஜினைக் கொண்டதாகும். இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 105 எச்பி மற்றும் 135 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இக்கார் 5 ஸ்பீடு வேகக்கட்டுப்பாட்டு கருவியில் இயங்கும்.

Most Read Articles
English summary
Hyundai Verna Modified With Scissor Doors. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X