இந்திய சந்தையை ஒரு காலத்தில் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த 5 கார்கள்... ஒரு சிறிய அலசல்...

இந்திய மக்கள் நாட்டின் 73வது சுதந்திர தினத்தை இந்தாண்டு கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். இந்த சமயத்தில் கடந்த வரலாற்றில் இந்திய சாலையில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய சில தனித்துவமான கார்களை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

இந்திய சந்தையை ஒரு காலத்தில் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த 5 கார்கள்... ஒரு சிறிய அலசல்...

மாருதி 800

இவ்வாறு தனித்துவமான கார்களை பார்க்கும்போது இதில் மாருதியின் 800 மாடலுக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. இன்றளவும் வாடிக்கையாளர்களின் மத்தியில் பிரசித்தி பெற்ற காராக இருப்பதாலேயே முதல் காராக இதனை பார்க்கிறோம். 1983ல் முதன்முதலாக வெளியான 800 மாடல் மாருதி சுஸுகி நிறுவனத்தின் தற்போதைய வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் என்றால் அது மிகையில்லை.

இந்திய சந்தையை ஒரு காலத்தில் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த 5 கார்கள்... ஒரு சிறிய அலசல்...

மிகவும் மலிவான காராக விற்பனையான சமயத்தில் பார்க்கப்பட்ட இந்த காரை தான் வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோர் தங்களது முதல் சொந்த காராக வாங்க விரும்பினர். சுமார் 30 வருடமாக தயாரிப்பில் பணியில் இருந்த மாருதி 800-ன் விற்பனை 2014ல் நிறுத்தி கொள்ளப்பட்டது.

இந்திய சந்தையை ஒரு காலத்தில் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த 5 கார்கள்... ஒரு சிறிய அலசல்...

ஹிந்துஸ்தான் அம்பாசடார்

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸின் அம்பாசடார் இந்திய சந்தையில் நீண்ட வருடம் விற்பனையில் இருந்த கார்களில் ஒன்றாகும். 1958ல் இருந்து இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட்டு வந்த இந்த கார் முதலில் இங்கிலாந்தில் உள்ள மோரிஸ் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எதிர்கால கார் மாடலாகவே பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்திய சந்தையை ஒரு காலத்தில் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த 5 கார்கள்... ஒரு சிறிய அலசல்...

இதன் பெயரில் உள்ள ‘அம்பே' என்ற வார்த்தையே வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்தது. இந்த வகையில் முன்னாள் ஜனாதிபதிகளாலும் பயன்படுத்தப்பட்ட இந்த கார் உட்புறத்தில் பெரிய அளவிலான மற்றும் தரமான கேபினை கொண்டிருந்தது.

இந்திய சந்தையை ஒரு காலத்தில் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த 5 கார்கள்... ஒரு சிறிய அலசல்...

இத்தகைய சிறப்பு தன்மைகளை தன்னுள் கொண்டிருந்த அம்பாசடார் மாடலின் விற்பனை மாருதி 800 போல் 2014ல் நிறுத்தப்பட்டது. இருப்பினும் தற்போதும் பல கஸ்டமைஸ்ட் நிறுவனங்களின் கை வண்ணத்தில் மாற்றியமைக்கப்பட்டு வெளிவரும் அம்பாசடார் கார்களை அவ்வப்போது பார்த்து கொண்டு தான் இருக்கிறோம்.

இந்திய சந்தையை ஒரு காலத்தில் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த 5 கார்கள்... ஒரு சிறிய அலசல்...

டாடா நானோ

இந்த வரிசையில் டாடா மோட்டார்ஸின் நானோ மாடலை பார்ப்பதற்கு ஒரே ஒரு காரணம் தான், அதன் விலை. வெறும் 1 லட்ச ரூபாய் என்ற அடையாளத்துடன் வெளிவந்த இந்த மாடல் டாடா நிறுவனத்தின் மிக பெரிய சாதனை என்று தான் சொல்ல வேண்டும். இந்த காரை ஒருவழியாக விற்பனைக்கு கொண்டுவருவதற்குள் பல இன்னல்களை சந்தித்ததாக கூறி டாடா நிறுவனத்தின் சிஇஒ, நம் அனைவரது மனதையும் கரைத்திருந்தார்.

இந்திய சந்தையை ஒரு காலத்தில் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த 5 கார்கள்... ஒரு சிறிய அலசல்...

2009ல் அறிமுகமான டாடா நானோ தான் தற்போது வரை உலகளவில் மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்ட கார் மாடலாக உள்ளது. இருப்பினும் காரில் அடிக்கடி ஏற்பட்ட பழுதுகளினாலும், சில மாதிரி கார்கள் சாலையிலேயே தீ பிடித்து எரிந்ததினாலும், டாடா நானோ மாடலின் விற்பனை நீண்ட வருடத்திற்கு இந்தியாவில் இல்லை.

இந்திய சந்தையை ஒரு காலத்தில் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த 5 கார்கள்... ஒரு சிறிய அலசல்...

ஹூண்டாய் சாண்ட்ரோ

சாண்ட்ரோ இந்திய வாடிக்கையாளர்களை கவர்ந்ததற்கு பல காரணங்கள் உள்ளன. முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் அதன் ‘சாண்ட்ரோ' என்ற பெயர் தான். ஏனெனில் இந்த பெயர் இந்தியர்களுக்கு மிகவும் பரீட்சையமான வார்த்தையாக எளிதில் மாறிவிட்டது.

இந்திய சந்தையை ஒரு காலத்தில் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த 5 கார்கள்... ஒரு சிறிய அலசல்...

இதன் அறிமுகத்திற்கு முன்பு பெரிய அளவில் இந்திய சந்தையில் அறியப்படாத நிறுவனமாக இருந்த தென் கொரிய நாட்டை சேர்ந்த ஹூண்டாய், சாண்ட்ரோ கார்களுக்கு கிடைத்த வரவேற்பினால் தான் தற்போது முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்குகிறது.

இந்திய சந்தையை ஒரு காலத்தில் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த 5 கார்கள்... ஒரு சிறிய அலசல்...

1997ல் அறிமுகமான இந்த காருக்கு பாலிவுட் நடிகர் ஷாருகான் தான் ப்ராண்ட் தூதராக அப்போது இருந்தார். இதன் விற்பனை 2014ல் நிறுத்தப்பட்டுவிட்டாலும், குறிப்பிடத்தக்க அப்டேட்களுடன் புதிய தலைமுறை சாண்ட்ரோ மாடலை கடந்த 2019ஆம் ஆண்டு ஹூண்டாய் நிறுவனம் மீண்டும் விற்பனைக்கு கொண்டுவந்தது.

இந்திய சந்தையை ஒரு காலத்தில் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த 5 கார்கள்... ஒரு சிறிய அலசல்...

டாடா இண்டிகா

பயணிகள் வாகன பிரிவில் டாடா நிறுவனம் நுழைந்த போது முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட மாடல் தான் இண்டிகா. அதுமட்டுமில்லாமல் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் பயணிகள் வாகனமும் இதுதான். 1998ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டாடா கார் அந்த சமயத்தில் வளர்ந்துவந்த இந்திய ஆட்டோமொபைல் சந்தையை சரியாக பயன்படுத்தி கொண்டது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்திய சந்தையை ஒரு காலத்தில் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த 5 கார்கள்... ஒரு சிறிய அலசல்...

இதனால் தான் இண்டிகாவை விஸ்டா, மோன்ஸா, இண்டிகா வி2 மற்றும் இண்டிகா சிஎஸ் என பல்வேறு வெர்சன்களில் டாடா நிறுவனம் சந்தைப்படுத்தியது. ஆனால் அதன்பின் மாடர்ன் கார்களின் ஆதிக்கம் ஓங்கவே இண்டிகா மாடல் விற்பனையில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டது.

Most Read Articles
English summary
Independence Day: India’s Five Most Iconic Cars Which Changed The Landscape Of The Auto Industry
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X