ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் காரிலும் வழக்கமான ‘கிட்னி’ க்ரில்லை வழங்கியுள்ள பிஎம்டபிள்யூ... படங்கள் லீக்கானது

பிஎம்டபிள்யூ நிறுவனத்தால் எடுக்கப்பட்ட முழு-எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலான ஐஎக்ஸ்3 காரின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. இன்ஸ்டாகிராமில் வெளிவந்துள்ள இந்த புகைப்படங்களின் மூலமாக வெளிவந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் காரிலும் வழக்கமான ‘கிட்னி’ க்ரில்லை வழங்கியுள்ள பிஎம்டபிள்யூ... படங்கள் லீக்கானது...!

இணையத்தில் தற்போது கசிந்துள்ள படங்கள் போட்டி மாடல்களான ஜாகுவார் ஐ-பேஸ் மற்றும் மெர்சிடிஸ் இக்யூசி உள்ளிட்டவற்றுடன் ஒத்த வெளிப்புறத்தை தான் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி காரும் பெற்றுள்ளதை வெளிக்காட்டுகின்றன.

ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் காரிலும் வழக்கமான ‘கிட்னி’ க்ரில்லை வழங்கியுள்ள பிஎம்டபிள்யூ... படங்கள் லீக்கானது...!

மேலும் இந்த படங்களின் மூலமாக பிஎம்டபிள்யூவின் ஐஎக்ஸ்3 மாடல் முதன்முறையாக வெளிப்புறத்தில் க்ளாடிங்கை பெற்வில்லை என்பதையும் நம்மால் அறிய முடிகிறது. எலக்ட்ரிக் கார்களுக்கு பெரிய அளவில் ஏர் கூலிங் தேவையில்லை என்றாலும், வழக்கமான கிட்னி வடிவிலான க்ரில் அமைப்பை பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த புதிய எஸ்யூவி காரில் வழங்கியுள்ளது.

ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் காரிலும் வழக்கமான ‘கிட்னி’ க்ரில்லை வழங்கியுள்ள பிஎம்டபிள்யூ... படங்கள் லீக்கானது...!

முன்புற பம்பரின் இரு முனைகளிலும் உள்ள செங்குத்து வடிவிலான குழாய்கள் ப்ரேக்கை எதிர்வரும் காற்று மூலமாக குளிர்விப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது. நீல நிற லைட்டிங் க்ரில்லை சுற்றிலும், சில்ஸிற்கு அடியிலும் வழங்கப்பட்டுள்ளது. வழக்கத்திற்கு மாறான காற்றியக்கியலை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சக்கர டிசைன் ஐஎக்ஸ்3 கான்செப்ட்டில் இருந்து பெறப்பட்டுள்ளது.

ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் காரிலும் வழக்கமான ‘கிட்னி’ க்ரில்லை வழங்கியுள்ள பிஎம்டபிள்யூ... படங்கள் லீக்கானது...!

எலக்ட்ரிக் வெர்சனிற்கு பிஎம்டபிள்யூ நிறுவனம் மிகவும் சிறிய அளவிலான மாற்றங்களை மட்டும் தான் கொண்டு வந்துள்ளது. மற்றப்படி இந்த புதிய கார் விற்பனையில் உள்ள தற்போதைய எக்ஸ்3 மாடலை தான் ஒத்து காணப்படுகிறது. நீல நிற அவுட்லெட்கள் பின்புறத்திலும் இரட்டை எக்ஸாஸ்ட் அவுட்லெட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் காரிலும் வழக்கமான ‘கிட்னி’ க்ரில்லை வழங்கியுள்ள பிஎம்டபிள்யூ... படங்கள் லீக்கானது...!

காரின் உட்புறத்தை இந்த லீக் புகைப்படங்களின் மூலமாக அறிய முடியவில்லை. இருப்பினும் இந்த கார் உட்புறத்தில் புதிய செயல்பாடுகளுடன் இன்ஸ்ட்ரூமெண்ட் மற்றும் இவி கார்களுக்கு உண்டான தகவல்களை வழங்கக்கூடிய விதத்திலான இன்போடெயின்மெண்ட் மற்றும் கூடுதல் ட்ரைவ் மோட்களுக்கு பொத்தான் உள்ளிட்டவற்றை பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் காரிலும் வழக்கமான ‘கிட்னி’ க்ரில்லை வழங்கியுள்ள பிஎம்டபிள்யூ... படங்கள் லீக்கானது...!

இதனால் வெளிப்புறத்தை காட்டிலும் உட்புறத்தில் தான் வழக்கமான எக்ஸ்3 மாடலில் இருந்து இந்த புதிய எலக்ட்ரிக் கார் வேறுபடும் என கூறப்படுகிறது. இதன் என்ஜின் அமைப்பு குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 2018ல் காட்சிப்படுத்தப்பட்ட ஐஎக்ஸ்3 கான்செப்ட்டில் 70 kWh ஆற்றல் கொண்ட பேட்டரி, சிங்கிள் சார்ஜில் 400கிமீ வரையில் காரை இயக்கக்கூடிய எலக்ட்ரிக் மோட்டாருடன் உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் காரிலும் வழக்கமான ‘கிட்னி’ க்ரில்லை வழங்கியுள்ள பிஎம்டபிள்யூ... படங்கள் லீக்கானது...!

இந்த எலக்ட்ரிக் மோட்டார் செட்அப் அதிகப்பட்சமாக 274 பிஎச்பி பவரை காருக்கு வழங்கக்கூடியது. ஆனால் இதன் டாப் வேரியண்ட்களில் இரட்டை மோட்டார் அமைப்பு வழங்கப்பட்டால் இதனை விட இரு மடங்கு அதிகமான ஆற்றலை அந்த மாடல்கள் பெறும்.

ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் காரிலும் வழக்கமான ‘கிட்னி’ க்ரில்லை வழங்கியுள்ள பிஎம்டபிள்யூ... படங்கள் லீக்கானது...!

இந்த புதிய எலக்ட்ரிக் காரை பற்றிய தகவல்களை பிஎம்டபிள்யூ நிறுவனம் வெளியிட திட்டமிட்டு வந்தது. ஆனால் அதற்குள்ளாக கொரோனா வைரஸினால் உலகளவில் பொருளாதாரம் நின்று போனது. இருப்பினும் 2020ஆம் ஆண்டு முடிவதற்குள்ளாக புதிய பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்3 இவி எஸ்யூவி கார் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வந்துவிடும்.

ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் காரிலும் வழக்கமான ‘கிட்னி’ க்ரில்லை வழங்கியுள்ள பிஎம்டபிள்யூ... படங்கள் லீக்கானது...!

இந்த எலக்ட்ரிக் கார் இப்போதைக்கு இந்திய சந்தைக்கு வராது. ஏனெனில் 8-சீரீஸ் க்ரான் கூபே, எம்8, 2 சீரீஸ் க்ரான் கூபே, எக்ஸ்2 மற்றும் எக்ஸ்6 எஸ்யூவி உள்பட இந்நிறுவனத்தின் சில எம் வரிசை கார்கள் இந்தியாவில் அறிமுகமாகுவதற்கு வரிசை கட்டி நிற்கின்றன.

Most Read Articles
English summary
BMW iX3 EV SUV images leaked
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X