Just In
- 2 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 3 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 4 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 5 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2020ல் புதிய வழியை தேர்வு செய்த வாகன நிறுவனங்கள்... இது இல்லன கதையே வேற மாதிரி ஆகியிருக்கும்...
2020ஆம் ஆண்டில் இந்த உலகம் என்ன மாதிரியான கசப்பான அனுபவத்தைப் பெற்றது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்தநிலையில் இருந்து வாகன உற்பத்தி நிறுவனங்கள் மீளுவதற்கு உதவியாக இருந்த ஒன்றைப் பற்றிதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

2020ம் ஆண்டு மக்களுக்கு மட்டுமின்றி அனைத்து துறைகளுக்குமே மிக மோசமான ஆண்டாகவே அமைந்திருக்கின்றது. இதனால், வாகனத்துறை சந்தித்த இன்னல்கள் ஏராளம். குறிப்பாக, பூட்டுதல் (லாக்டவுண்) காலம் முழுமையாக செயல்பாட்டில் இருந்த காலத்தில் ஒரு அலகு (யூனிட்) வாகனத்தைக்கூட வாகன நிறுவனங்களால் விற்பனைச் செய்ய முடியவில்லை.

லாக்டவுண் தளர்வுகள் நடைமுறைக்கு வந்த பின்னரும் புதிய வாகன விற்பனை லேசான மந்த நிலையிலேயே காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான வாங்கும் அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஆன்லைன் விற்பனையை ஊக்குவிக்கத் தொடங்கின.

ஆன்லைன் விற்பனை பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்தாலும், கொரோனா காலத்திலேயே இது மிக அதிகளவில் மக்கள் மத்தியில் பிரமலாகியது. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் அதலபாதாளத்தில் வீழ்ந்திருந்த வாகன விற்பனையை ஆன்லைன் வாகன விற்பனைப் பிரிவே தற்போது தூக்கி நிறுத்தியுள்ளது.

கொரோனா அச்சத்தில் மூழ்கியிருந்த மக்களுக்கு இது ஓர் விடிவு காலத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது என்றே கூறலாம். ஆமாங்க, இப்போதைய சூழ்நிலையில் பொது போக்குவரத்து வாகனங்களைப் பயன்படுத்தினால் எப்படி வேண்டுமானாலும் தொற்று ஏற்படலாம் என்ற அச்சமான சூழ்நிலை நிலவுகின்றது. இதனால், மக்கள் தனி வாகனத்தில் பயணிக்க தொடங்கியிருக்கின்றனர்.

பலர் இதற்காக புதிய வாகனங்களை வாங்கத் தொடங்கியிருக்கின்றனர். அத்தகையோருக்கு ஆன்லைன் விற்பனைத் தளம் பெருமளவில் உதவத் தொடங்கியிருக்கின்றது. பலர் நேரடியாக விற்பனையகங்களுக்குச் சென்று வாகனங்களைக் காட்டுவதிலும், ஆன்லைனில் வாங்குவதே மிக சுலபமாக இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். மேலும், இதனை பாதுகாப்பானதாகவும் அவர்கள் உணர்கின்றனர்.

அதேசமயம், வாகன உற்பத்தி நிறுவனங்களும் வாடிக்கையாளர்களின் மனத்தைக் கவர வேண்டும் என்பதற்காக ஆன்லைனில் சிறப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. அந்தவகையில், அவர்கள் தேடி வரும் வாகனத்தை 360 டிகிரி சுற்றிப் பார்க்கின்ற வகையில் 3டி தொழில்நுட்பம் அடங்கிய சிறப்பு விர்ச்சுவல் (மெய்நிகர்) ஷோரூமை ஆன்லைனிலேயே ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன.

இது நேரில் சென்று ஓர் வாகனத்தை பார்ப்பதற்கு இணையான அனுபவத்தை வழங்கும். இத்துடன், வாகனம் பற்றி அனைத்து தகவல்களும் ஆன்லைன் தளத்திலேயே கிடைப்பதால், அனைத்தையும் நொடிப்பொழுதில் வீட்டில் இருந்தபடியே பெற முடிகின்றது. எனவே பெரும்பாலானோர் வீட்டில் இருந்தபடியே நேரத்தை மிச்சப்படுத்தி ஆன்லைனில் புதிய வாகனங்களை வாங்கத் தொடங்கியிருக்கின்றனர்.

இதற்கேற்ப இந்தியாவின் பெரும்பாலான வாகன நிறுவனங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தின் தரத்தை உயர்த்தியிருக்கின்றன. எனவேதான் எந்த ஆண்டும் இல்லாத அளவில் 2020ல் மக்கள் அதிகளவில் ஆன்லைன மூலமாக கார்களைப் புக் செய்வது, வாங்குவது, டெஸ்ட் டிரைவிற்கு விண்ணப்பிப்பது, விசாரணைச் செய்வது உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

சில நிறுவனங்கள் ஆன்லைனிலேயே புதிய வாகனங்களுக்கான புக்கிங்கை வழங்குவதுடன், நிதி திட்டம் உள்ளிட்ட கூடுதல் சிறப்பு சேவைகளை வழங்க ஆரம்பித்திருக்கின்றன. அதாவது, இஎம்ஐ-க்கான காலத்தைத் தேர்வு செய்வது, இஎம்ஐ தொகையைத் தேர்வு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை வழங்க ஆரம்பித்துள்ளன. இத்துடன், தனிப்பயனாக்கம் (கஸ்டமைஸ்) செய்து கொள்ளும் தேர்வையும் அவை வழங்குகின்றன.

இதுபோன்ற பன்முக சேவையை ஆன்லைனிலேயே வாகன நிறுவனங்கள் வழங்கி வருவதால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்களின் தேவையை ஆன்லைன் மூலமாகவே பூர்த்திச் செய்துக் கொள்ள தொடங்கியிருக்கின்றனர். இதன் விளைவாக எந்த ஆண்டிலும் இல்லாத அளவில் நடப்பு 2020 ஆண்டில் அதிகளவில் வாகனங்கள் ஆன்லைனில் விற்பனையாகியிருக்கின்றன.

இதனை உறுதிப்படுத்துகின்ற வகையிலான ஓர் தகவலை மாருதி சுசுகி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. அது, ஏப்ரல் 2019ம் ஆண்டிற்கு பின்னரிலிருந்து சுமார் 2 லட்சம் அலகு வாகனங்களுக்கான புக்கிங்கை ஆன்லைன் தளத்தில் இருந்தே பெற்றிருப்பதாக கூறியிருந்தது. இது கொரோனா காலத்தில் சற்று அதிகமாக இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இதேபோன்று, மிக சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகமான நிஸான் மேக்னைட் கார் ஒட்டுமொத்தமாக 5 ஆயிரம் யூனிட்டுகளுக்கான புக்கிங்கைப் பெற்றது. இதில், 40 சதவீத புக்கிங் ஆன்லைன் ஊடாக பெற்றதாக அந்த நிறுவனம் தகவல் வெளியிட்டிருக்கின்றது. இதேபோன்று, ஆன்லனை தளத்தின் வாயிலாக டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா, ஹூண்டாய், ஹோண்டா, கியா மோட்டார்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் நல்ல விற்பனையைப் பெறத் தொடங்கியிருக்கின்றன.

தற்போதைய கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் முன்பெப்போதும் இல்லாத வகையில் வாகனங்களை அதிக பாதுகாப்பானதாக டெலிவரி கொடுத்து வருகின்றன. குறிப்பாக, டெலிவரிக்குக் கொடுக்கும் முன்பு கிருமி நாசினிகளால் சுத்தம் செய்யப்பட்டு, நேரடியாக வீட்டிற்கே சென்று வாகனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. டெஸ்ட் டிரைவிற்காக காரை வாடிக்கையாளர்களிடத்தில் கொடுக்கும்போதும் இதே முறையை கையாளுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.