ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸிற்கு போட்டியாக நிஸானின் 2021 எக்ஸ்-ட்ரைல்... புதிய படங்கள் வெளிவந்தன

இந்திய சந்தையில் அறிமுகமாக வாய்ப்புள்ள 2021 நிஸான் ரோக் எனப்படும் எக்ஸ்-ட்ரைல் எஸ்யூவி காரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. நிஸானின் இந்த புதிய எஸ்யூவி கார் ஃபோக்ஸ்வேகனின் டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடலை விற்பனையில் எதிர்க்கும் நான்காம் தலைமுறை மாடலாக விளங்கவுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸிற்கு போட்டியாக நிஸானின் 2021 எக்ஸ்-ட்ரைல்... புதிய படங்கள் வெளிவந்தன

இந்த புகைப்படங்களின் மூலம் பார்க்கும்போது இதன் முன்னோடி மாடல்களுடன் ஒத்த வடிவத்தை இந்த 2021 நிஸான் எக்ஸ்-ட்ரைல் மாடல் கொண்டிருந்தாலும், நிச்சயம் கம்பீரமான தோற்றத்தை இந்த காரில் எதிர்பார்க்கலாம். இந்த 2021 மாடலின் முன்பகுதி புதியதாக மிகவும் முரட்டுத்தனமான டிசைனில் உள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸிற்கு போட்டியாக நிஸானின் 2021 எக்ஸ்-ட்ரைல்... புதிய படங்கள் வெளிவந்தன

பெரிய அளவிலான வி-மோஷன் க்ரில்லை கொண்டுள்ள புதிய தலைமுறை நிஸான் எக்ஸ்-ட்ரைல் மாடல், நிஸான் விமோஷன் 2.0 கான்செப்ட்டில் இருந்து தனித்துவமான டிசைனை ஏற்றுள்ளது. இதே கான்செப்ட் மாடலின் டிசைனை அடிப்படையாக கொண்டு இந்நிறுவவனத்தில் இருந்து ஜூக், லிவினா மற்றும் ஷில்பி உள்ளிட்ட தயாரிப்பு கார்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

MOST READ: ஊரடங்கு உத்தரவை சீர்குலைத்த நீதிபதியின் மனைவி.. என்ன செய்தார் என தெரிஞ்சா ஷாக் ஆயிருவீங்க...

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸிற்கு போட்டியாக நிஸானின் 2021 எக்ஸ்-ட்ரைல்... புதிய படங்கள் வெளிவந்தன

க்ரில் உடன் இரண்டாக பிளவுப்பட்டதாக ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய பம்பர் காருக்கு மஸ்குலர் டிசைனை கொடுக்கிறது. இந்த பம்பருக்கு மேற்புறத்தில் சைடு ஏர் இன்லெட்ஸ் உள்ளன. புதிய ஸ்கிட் ப்ளேட் பெரியதாகவும், கூடுதலாக முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்கும் விதத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸிற்கு போட்டியாக நிஸானின் 2021 எக்ஸ்-ட்ரைல்... புதிய படங்கள் வெளிவந்தன

பின்புறம் நிஸானின் வழக்கமான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. உட்புறத்தில் நிஸான் எக்ஸ்-ட்ரைல் மாடல் வெளிப்புறத்தை காட்டிலும் அதிகமான மாற்றங்களை ஏற்றுள்ளது. இந்த வகையில் ரீ-டிசைன் செய்யப்பட்ட கேபின் புத்துணர்ச்சியாகவும், தெளிவாகவும் காட்சியளிக்கிறது. இவை தவிர்த்து ஸ்டேரிங் சக்கரம் உள்பட அனைத்து பாகங்களும் புதியதாக வழங்கப்பட்டுள்ளன.

MOST READ: 2.0 ஊரடங்கு உத்தரவு: எட்டி பார்த்தாலே தடியடி நடத்தும் போலீஸ்.. வெளியே செல்ல என்ன வழி?

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸிற்கு போட்டியாக நிஸானின் 2021 எக்ஸ்-ட்ரைல்... புதிய படங்கள் வெளிவந்தன

நேர்த்தியாகவும், பளபளப்பாகவும் காட்சியளிக்கும் டேஸ்போர்டு, ஃப்லோட்டிங் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், தனிப்பயனாக்கக்கூடிய விர்டியுவல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், கூடுதல் காம்பெக்ட் க்ளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம், சிறிய அளவிலான கியர்ஷிஃப்ட் லிவர் மற்றும் முழு-நீள ஃப்ளோர் கன்சோல் உள்ளிட்டவை இதன் உட்புற கேபினில் வழங்கப்பட்டுள்ள கவனிக்கத்தக்க சிறப்பம்சங்களாகும்.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸிற்கு போட்டியாக நிஸானின் 2021 எக்ஸ்-ட்ரைல்... புதிய படங்கள் வெளிவந்தன

2021 நிஸான் எக்ஸ்-ட்ரைல், நிஸான் ரோக் என்ற பெயரில் இன்னும் சில மாதங்களில் அமெரிக்காவில் முதன்முறையாக அறிமுகமாகவுள்ளது. இதன் மூன்றாம் தலைமுறை கார் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான அனைத்து வேலைகளும் நடைபெற்றன. ஆனால் கடைசி நேரத்தில் இந்த புதிய மாடலின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டது.

MOST READ: இந்த விஷயம் தெரியுமா? லாக் டவுன் முடிஞ்ச பிறகு உங்க வீட்டிற்கு புது கார் வர சான்ஸ் இருக்கு...

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸிற்கு போட்டியாக நிஸானின் 2021 எக்ஸ்-ட்ரைல்... புதிய படங்கள் வெளிவந்தன

நிஸான் இந்திய சந்தையில் எல்லா வருடங்களையும் போல இந்த வருடத்திற்கும் புதிய தயாரிப்பு மாடல் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில் எஸ்யூவி ரக கார்களுக்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு கிடைப்பதால் நான்காம் தலைமுறை நிஸான் எக்ஸ்-ட்ரைல் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம். ஒருவேளை இந்தியாவிற்கு வந்தாலும், 2021ஆம் ஆண்டின் முதற்பாதிக்கு பின்பே அறிமுகமாகும்.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
2021 Nissan X-Trail Rogue (VW Tiguan Allspace rival) leaked
Story first published: Saturday, April 18, 2020, 11:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X