அடேங்கப்பா... ஒரு நிமிடத்திற்கு இத்தனை கார்களை இந்தியா உற்பத்தி செய்கிறதா? சீனாவின் நிலை என்ன தெரியுமா?

உலகில் அதிக கார்களை உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அடேங்கப்பா... ஒரு நிமிடத்திற்கு இத்தனை கார்களை இந்தியா உற்பத்தி செய்கிறதா? சீனாவின் நிலை என்ன தெரியுமா?

ஒரு காலத்தில் கார்களை ஆடம்பரம் என்றுதான் பலரும் கருதி வந்தனர். ஆனால் அவை தற்போது அத்தியாவசியமானவையாக மாறி விட்டன. குடும்பத்துடன் வெளியூர் சென்று வருவதற்கு பேருந்து மற்றும் ரயில் போன்ற போக்குவரத்து முறைகளை காட்டிலும், கார்களைதான் பலரும் சௌகரியமானதாக கருதுகின்றனர்.

அடேங்கப்பா... ஒரு நிமிடத்திற்கு இத்தனை கார்களை இந்தியா உற்பத்தி செய்கிறதா? சீனாவின் நிலை என்ன தெரியுமா?

எனவே ஒவ்வொரு ஆண்டும் கார்களுக்கான தேவை அதிகரித்து கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 மில்லியன் கார்கள் உற்பத்தி செய்யப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சூழலில், ஒவ்வொரு நிமிடமும் அதிக கார்களை உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

அடேங்கப்பா... ஒரு நிமிடத்திற்கு இத்தனை கார்களை இந்தியா உற்பத்தி செய்கிறதா? சீனாவின் நிலை என்ன தெரியுமா?

இங்கிலாந்தை சேர்ந்த முன்னணி ஆராய்ச்சி நிறுவனமான மணிஷேக் இந்த தரவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தரவுகளின் அடிப்படையில் பார்த்தால், உலகிலேயே அதிக கார்களை உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. அதே சமயம் சீனா முதல் இடத்தை பிடித்துள்ளது.

ராயல் என்பீல்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா புதிய மீட்டியோர் 350? வீடியோ!

ஒவ்வொரு நிமிடத்திற்கும் 48.9 கார்களை சீனா உற்பத்தி செய்து வருகிறது. கார் உற்பத்தி துறையில் சீனாதான் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25.7 மில்லியன் கார்களை சீனா உற்பத்தி செய்கிறது. அதாவது சீனாவில் ஒரு நிமிடத்திற்கு 48.9 கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

அடேங்கப்பா... ஒரு நிமிடத்திற்கு இத்தனை கார்களை இந்தியா உற்பத்தி செய்கிறதா? சீனாவின் நிலை என்ன தெரியுமா?

மிகப்பெரிய கார் நிறுவனங்கள் சீனாவில் அமைந்திருப்பதன் காரணமாகவே, கார் உற்பத்தி துறையில் சீனாவால் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்த முடிகிறது. இந்த பட்டியலில் அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் ஒரு நிமிடத்திற்கு 20.7 கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த பட்டியலில் ஜப்பான் மூன்றாவது இடத்தில் உள்ளது.

அடேங்கப்பா... ஒரு நிமிடத்திற்கு இத்தனை கார்களை இந்தியா உற்பத்தி செய்கிறதா? சீனாவின் நிலை என்ன தெரியுமா?

அங்கு ஒரு நிமிடத்திற்கு 18.4 கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. அதே சமயம் இந்த பட்டியலில் ஜெர்மனி நான்காவது இடத்தை பிடித்துள்ளது. ஜெர்மனியில் ஒரு நிமிடத்திற்கு 8.9 கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. அதிக கார்களை உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில், மற்றொரு சுவாரஸ்யமான விஷயமும் அடங்கியுள்ளது.

அடேங்கப்பா... ஒரு நிமிடத்திற்கு இத்தனை கார்களை இந்தியா உற்பத்தி செய்கிறதா? சீனாவின் நிலை என்ன தெரியுமா?

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய மூன்று நாடுகளும் ஒட்டுமொத்தமாக உற்பத்தி செய்யும் கார்களின் எண்ணிக்கையை விட சீனா தனி ஆளாக அதிக கார்களை உற்பத்தி செய்து வருகிறது. இதற்கிடையே இந்த பட்டியலில் இந்தியா 5வது இடத்தை பிடித்துள்ளது. இங்கு ஒரு நிமிடத்திற்கு 8.6 கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

அடேங்கப்பா... ஒரு நிமிடத்திற்கு இத்தனை கார்களை இந்தியா உற்பத்தி செய்கிறதா? சீனாவின் நிலை என்ன தெரியுமா?

இந்தியாவும் உலகின் மிகப்பெரிய கார் சந்தைகளில் ஒன்றாக உள்ளது. இந்தியாவின் உள்நாட்டு தேவைகளுக்கு கார்கள் உற்பத்தி செய்யப்படுவதுடன், இங்கிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காகவும் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட கார்களின் விற்பனை உலகின் பல்வேறு நாடுகளில் சிறப்பாக இருந்து வருகிறது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
English summary
India Is The 5th Largest Carmaker In The World - Details. Read in Tamil
Story first published: Tuesday, December 15, 2020, 17:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X