புது ஹோண்டா சிட்டி கார் வாங்க காத்திருக்கீங்களா?- முழு விபரத்தையும் கையில பிடிங்க!

ஏராளமான சிறப்பம்சங்களுடன் வரும் புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் வெளியிடப்பட்டு இருக்கிறது. படங்கள், விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் வெளியீடு... முழு விபரத்தையும் கையில பிடிங்க!

இந்தியாவின் மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் மிக முக்கிய மாடலாக ஹோண்டா சிட்டி கார் உள்ளது. சந்தைப் போட்டி கடுமையாக உள்ளதால், அனைத்து விதத்திலும் மேம்படுத்தப்பட்டு ஐந்தாம் தலைமுறை மாடலாக இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது ஹோண்டா சிட்டி கார்.

புதிய ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் வெளியீடு... முழு விபரத்தையும் கையில பிடிங்க!

அதற்கு முன்னதாக காரில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்களை ஹோண்டா கார் நிறுவனம் இன்று வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, பழைய மாடலிலிருந்து முற்றிலும் வேறுபட்ட மாடலாக புதிய ஹோண்டா சிட்டி கார் வர இருப்பது தெரிய வந்துள்ளது.

புதிய ஹோண்டா சிட்டி கார் 4,549 மிமீ நீளமும், 1,748 மிமீ அகலமும், 1,489 மிமீ உயரும் கொண்டதாக வருகிறது. இந்த காரின் வீல் பேஸ் நீளம் 2,600 மிமீ ஆக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நிச்சயம் சிறப்பான இடவசதியை அளிக்கும். இந்த காரில் 506 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடம்பெற்றிருக்கிறது.

புதிய ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் வெளியீடு... முழு விபரத்தையும் கையில பிடிங்க!

புதிய ஹோண்டா சிட்டி காரில் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட உள்ளது. புதிய மாடலில் கொடுக்கப்பட இருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 121 எச்பி பவரையும், 145 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

புதிய ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் வெளியீடு... முழு விபரத்தையும் கையில பிடிங்க!

இந்த புதிய பெட்ரோல் எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும் என்று தெரிகிறது. மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 17.8 கிமீ மைலேஜையும், சிவிடி கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 18.4 கிமீ மைலேஜையும் வழங்கும்.

புதிய ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் வெளியீடு... முழு விபரத்தையும் கையில பிடிங்க!

டீசல் மாடலில் இடம்பெறும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 100 எச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் இருக்கும். மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும். டீசல் மாடலானது லிட்டருக்கு 24.1 கிமீ மைலேஜை வழங்கும் திறனை பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

புதிய ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் வெளியீடு... முழு விபரத்தையும் கையில பிடிங்க!

புதிய ஹோண்டா சிட்டி காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், டெயில் லைட்டுகள், 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், ஆட்டோ டிம் ரியர் வியூ மிரர்கள், பேடில் ஷிஃப்ட் வசதி, ரியர் ஷன்சேடு, ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட், கீ லெஸ் என்ட்ரி, ரிமோட் எஞ்சின் ஸ்டார்ட் வசதிகள் இடம்பெற இருக்கின்றன.

புதிய ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் வெளியீடு... முழு விபரத்தையும் கையில பிடிங்க!

மேலும், ஹோண்டா கனெக்ட் என்ற தொழில்நுட்பமும் வழங்கப்பட உள்ளது. இதன்மூலமாக பல்வேறு கட்டுப்பாட்டு வசதிகளை மொபைல் செயலி மூலமாக செய்ய முடியும். அத்துடன் , அலெக்ஸா வாய்ஸ் கமாண்ட் வசதியும் இடம்பெற உள்ளது.

புதிய ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் வெளியீடு... முழு விபரத்தையும் கையில பிடிங்க!

புதிய ஹோண்டா சிட்டி காரில் 6 ஏர்பேக்குகள், இபிடி, பிரேக் அசிஸ்ட் தொழில்நுட்பங்களுடன் இணைந்து இயங்கும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஹோண்டா லேன் வாட்ச் கேமரா உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.

புதிய ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் வெளியீடு... முழு விபரத்தையும் கையில பிடிங்க!

புதிய ஹோண்டா சிட்டி கார் மிகவும் பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்பட உள்ளது. எனவே, விலையும் கணிசமாக அதிகரிக்கப்படும் வாய்ப்புள்ளது. மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா, ஸ்கோடா ரேபிட், டொயோட்டா யாரிஸ் உள்ளிட்ட கார் மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
English summary
Japanese car maker, Honda has revealed the new-gen City car details in India today.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X