முடக்கி போட்ட கொரோனா... கை கொடுத்த பண்டிகை காலம்... 2020ம் ஆண்டில் ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள்

2020ம் ஆண்டில் இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை சந்தித்த நேர்மறையான மற்றும் எதிர்மறையான விஷயங்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

முடக்கி போட்ட கொரோனா... கை கொடுத்த பண்டிகை காலம்... 2020ம் ஆண்டில் ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள்

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறைக்கு 2020ம் ஆண்டு மிகவும் சவால் நிறைந்த ஒன்றாகவே அமைந்தது. ஆட்டோ எக்ஸ்போவுடன் 2020ம் ஆண்டு மிக சிறப்பான தொடங்கினாலும், வெகு விரைவாகவே கோவிட்-19 வைரஸ் ஆட்டோமொபைல் துறையை அப்படியே முடக்கி போட்டது. இதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு வாகனம் கூட விற்பனையாகவில்லை.

முடக்கி போட்ட கொரோனா... கை கொடுத்த பண்டிகை காலம்... 2020ம் ஆண்டில் ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள்

எனினும் 2020ம் ஆண்டின் இரண்டாவது பாதியில் ஆட்டோமொபைல் துறை சரிவில் இருந்து வேகமாக மீண்டு வந்தது. இதற்கெல்லாம் இடையே பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கும் இந்தியா மாறியது. இதைதான் இந்த வருடத்தின் 'ஹைலைட்' என கூற வேண்டும். நடப்பாண்டு இந்திய ஆட்டோமொபைல் துறை சந்தித்த நேர்மறையான மற்றும் எதிர்மறையான விஷயங்களை இந்த செய்தியில் திரும்பி பார்க்கலாம்.

முடக்கி போட்ட கொரோனா... கை கொடுத்த பண்டிகை காலம்... 2020ம் ஆண்டில் ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள்

ஆட்டோ எக்ஸ்போ 2020

ஏற்கனவே குறிப்பிட்டபடி ஆட்டோ எக்ஸ்போவுடன் 2020ம் ஆண்டு மிக சிறப்பாகவே தொடங்கியது. கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் ஆட்டோ எக்ஸ்போ நடைபெற்றது. இதில், பல்வேறு புதிய நிறுவனங்கள் ஏராளமான வாகனங்களை காட்சிப்படுத்தின. ஆனால் ஹோண்டா, பிஎம்டபிள்யூ மற்றும் டொயோட்டா உள்ளிட்ட பிரபலமான நிறுவனங்கள் பங்கேற்கவில்லை என்பது வருத்தமான விஷயம்.

முடக்கி போட்ட கொரோனா... கை கொடுத்த பண்டிகை காலம்... 2020ம் ஆண்டில் ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள்

எனினும் ஏராளமான நிறுவனங்கள் தங்களின் எலெக்ட்ரிக் வாகனங்களை காட்சிக்கு வைத்திருந்தன. எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் எதிர்காலத்தில் சாலைகளை ஆளப்போகின்றன என்பதை இது தெளிவாக எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது. ஆட்டோ எக்ஸ்போ முடிந்து 10 மாதங்களுக்கு மேலாகி விட்ட நிலையில், இடைப்பட்ட நாட்களில் ஏராளமான எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

முடக்கி போட்ட கொரோனா... கை கொடுத்த பண்டிகை காலம்... 2020ம் ஆண்டில் ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள்

பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள்

பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தன. தற்போது வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களது அனைத்து தயாரிப்புகளையும் இந்த கடுமையான மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் மேம்படுத்தியுள்ளன. ஆனால் பிஎஸ்-6 விதிமுறைகள் காரணமாக வாகனங்களின் விலை உயர்ந்தது.

முடக்கி போட்ட கொரோனா... கை கொடுத்த பண்டிகை காலம்... 2020ம் ஆண்டில் ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள்

அதே சமயம் பிஎஸ்-6 விதிகள் காரணமாக இந்திய சந்தையில் டீசல் இன்ஜின் மாடல்களை முற்றிலுமாக கைவிடுவது என்ற முடிவையும் ஒரு சில நிறுவனங்கள் எடுத்துள்ளன. இதில், மாருதி சுஸுகி, ஸ்கோடா, ரெனால்ட், நிஸான் உள்ளிட்ட நிறுவனங்கள் குறிப்பிடத்தகுந்தவை. இதுதவிர பிஎஸ்-6 விதிமுறைகளால் ஒரு சில நிறுவனங்கள் தங்கள் பழைய மாடல்களை விற்பனையில் இருந்து விலக்கி கொள்ளவும் செய்தன.

முடக்கி போட்ட கொரோனா... கை கொடுத்த பண்டிகை காலம்... 2020ம் ஆண்டில் ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள்

கோவிட்-19 ஊரடங்கு

மார்ச் மாத இறுதியில் இருந்து மே மாத தொடக்கம் வரை இந்தியா முழுமையான ஊரடங்கின் கீழ் இருந்தது. இதன் காரணமாக கிட்டத்தட்ட அனைத்து தொழில்களும் முடங்கின. இதற்கு ஆட்டோமொபைல் துறையும் விதிவிலக்கு அல்ல. எனினும் அந்த இக்கட்டான நேரத்தில், கொரோனா வைரசுக்கு எதிரான போரில், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பலவும் அரசுக்கு உதவிகளை செய்தன.

முடக்கி போட்ட கொரோனா... கை கொடுத்த பண்டிகை காலம்... 2020ம் ஆண்டில் ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள்

பல நிறுவனங்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு பல கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கின. அத்துடன் நின்று விடாமல், பிபிஇ கிட்கள், முக கவசங்கள் மற்றும் வெண்டிலேட்டர்கள் ஆகியவற்றை தயாரிக்கும் பணிகளிலும் பல்வேறு முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் களமிறங்கின. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்புகளில் இருந்து மீண்டும் இந்தியா கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

முடக்கி போட்ட கொரோனா... கை கொடுத்த பண்டிகை காலம்... 2020ம் ஆண்டில் ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள்

ஏப்ரல் மாதத்தில் ஒட்டுமொத்தமாக முடங்கிய ஆட்டோமொபைல் துறை

இந்தியாவில் மார்ச் இறுதியில் ஊரடங்கு அமலுக்கு வந்த காரணத்தால், உற்பத்தி, விற்பனை மற்றும் சர்வீஸ் என தங்களின் அனைத்து செயல்பாடுகளையும் திடீரென நிறுத்தி கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தள்ளப்பட்டன. இதன் காரணமாக மார்ச் மாதத்தில் வாகனங்களின் விற்பனை சரிவடைந்தது.

முடக்கி போட்ட கொரோனா... கை கொடுத்த பண்டிகை காலம்... 2020ம் ஆண்டில் ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள்

ஆனால் அதன் பிறகுதான் மிக மோசமான நிலை வந்தது. கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் ஒரு வாகனம் கூட விற்பனை செய்யப்படவில்லை. ஒரு மாதத்தில் உள்நாட்டில் ஒரு வாகனம் கூட விற்பனையாகாமல் போனது இந்திய ஆட்டோமொபைல் துறையின் வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை. இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸால் ஆட்டோமொபைல் துறை பலத்த அடியை சந்தித்தது.

முடக்கி போட்ட கொரோனா... கை கொடுத்த பண்டிகை காலம்... 2020ம் ஆண்டில் ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள்

பண்டிகை காலத்தில் மீண்டும் எழுச்சி

ஊரடங்கில் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்ட பின் மே மாதத்தில் இருந்து உற்பத்தி உள்பட தங்களின் இயல்பான நடவடிக்கைகளை அனைத்து நிறுவனங்களும் மெல்ல மெல்ல தொடங்கின. எந்த கொரோனா வைரஸ் பிரச்னையால் வாகன விற்பனை சரிந்ததோ, அதே காரணத்தால் வாகன விற்பனை மீண்டும் உயர்ந்தது.

முடக்கி போட்ட கொரோனா... கை கொடுத்த பண்டிகை காலம்... 2020ம் ஆண்டில் ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள்

கொரோனா அச்சத்தால் பொது போக்குவரத்திற்கு பதிலாக சொந்த வாகனங்களில் பயணிப்பதை மக்கள் பாதுகாப்பானதாக கருத தொடங்கினர். இதனுடன் பண்டிகை காலமும் வந்ததால், வாகன விற்பனை மீண்டும் உச்சம் தொட்டது. இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டு, ஒரு சில நிறுவனங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக எண்ணிக்கையில் வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்தன.

முடக்கி போட்ட கொரோனா... கை கொடுத்த பண்டிகை காலம்... 2020ம் ஆண்டில் ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள்

டிரைவ்ஸ்பார்க் கருத்து

ஒட்டுமொத்தமாக பார்த்தால், மிகவும் சவாலான ஒரு ஆண்டை இந்திய ஆட்டோமொபைல் துறை கடந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் கொரோனா வைரஸ் பிரச்னை இன்னும் முழுவதுமாக முடிந்து விடவில்லை. எனவே விரைவில் வரப்போகும் 2021ம் ஆண்டு எப்படி இருக்க போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Most Read Articles
English summary
Indian Automotive Industry In 2020: A Look Back At The Highlights Of The Year. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X