முதல் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ கார் வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

இந்தியாவின் முதல் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ சொகுசு எஸ்யூவி கார் கொச்சி வாடிக்கையாளருக்கு டெலிவிரி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

முதல் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ கார் வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் முதன்மையான நிறுவனமாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் விளங்குகிறது. தனது முதன்மை இடத்தை தக்க வைக்கும் விதத்தில், பல புதிய சொகுசு கார் மாடல்களை இந்தியாவில் வரிசையாக அறிமுகப்படுத்தி வருகிறது.

முதல் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ கார் வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

இந்த வரிசையில், இந்த ஆண்டில் தனது முதல் மாடலாக ஜிஎல்இ சொகுசு எஸ்யூவி கார் மாடலை ஆட்டோ எக்ஸ்போவிற்கு முன்னதாக விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த நிலையில், இந்தியாவின் முதல் புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ சொகுசு எஸ்யூவி கார் கேரள மாநிலம் கொச்சியில் டெலிவிரி கொடுக்கப்பட்டது.

முதல் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ கார் வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

அங்குள்ள மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலரான ராஜஸ்ரீ மோட்டார் ஷோரூமில் நடந்த நிகழ்ச்சியில் முதல் காரை புக்கிங் செய்த பேஸ்லியஸ் மைனிங் அண்ட் கிரானைட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராய் குரிக்கிற்கு டெலிவிரி கொடுக்கப்பட்டது.

முதல் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ கார் வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

பழைய மாடலைவிட புதிய தலைமுறை ஜிஎல்இ சொகுசு எஸ்யூவி கார் பல்வேறு விதத்திலும் மேம்பட்டதாக வந்துள்ளது. குறிப்பாக, இந்த புதிய தலைமுறை ஜிஎல்இ கார் பழைய மாடலைவிட 80 மிமீ கூடுதல் வீல்பேஸ் நீளம் கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது.

முதல் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ கார் வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

இந்த கார் 300டீ மற்றும் 400டீ ஹிப் ஹாப் என்ற இரண்டு வேரியண்ட்டுகளில்வந்துள்ளது. இதில், 300டீ மாடலில் 2.0 லிட்டர் பிஎஸ்6 டீசல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 245 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த மாடல் 0 - 100 கிமீ வேகத்தை 7.2 வினாடிகளில் எட்டிவிடும். இந்த வேரியண்ட்டையே ராய் குரிக் வாங்கி இருக்கிறார்.

முதல் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ கார் வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

மற்றொரு ஜிஎல்இ 400டீ ஹிப் ஹாப் எடிசன் மாடலில் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டீசல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 300 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 0 - 100 கிமீ வேகத்தை 5.7 வினாடிகளில் எட்டிவிடும்.

முதல் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ கார் வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

இந்த புதிய ஜிஎல்இ காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், 20 அங்குல அலாய் சக்கரங்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டேஷ்போர்டை ஆக்கிரமித்துள்ளது. இந்த காரில் எம்பியூஎக்ஸ் என்ற மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவன்ததின் பிரத்யேக கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பமும் உள்ளது.

முதல் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ கார் வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

இதன் இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். பர்ம்ஸ்டெர் ஆடியோ சிஸ்டம், 4 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஏர் சஸ்பென்ஷன் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை உள்ளன.

முதல் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ கார் வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

பாதுகாப்பு தொழில்நுட்பங்களிலும் மிகச் சிறப்பான மாடலாக இருக்கிறது. இந்த காரில் 360 டிகிரி கேமரா கண்காணிப்பு, 9 ஏர்பேக்குகள், பிளைண்ட் ஸ்பாட் அசிஸ்ட் வசதி, க்ரூஸ் கன்ட்ரோல், ஆக்டிவ் பார்க்கிங் அசிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள், பிரேக் அசிஸ்ட் உள்ளிட்ட வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

முதல் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ கார் வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

கேரள மாநிலம் கொச்சியில் ரூ.73.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த கார் விற்பனைக்கு வந்தது. ரூ.93.50 லட்சம் ஆன்ரோடு விலையில் ராய் குரிக் வாங்கி இருக்கிறார்.

Most Read Articles

English summary
India's first Mercedes Benz GLE LWB luxury SUV has delivered in Kochi.
Story first published: Tuesday, February 11, 2020, 18:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X