நிஸான் செய்த புத்திசாலித்தனமான காரியம்... மேக்னைட் வெற்றிக்கு பின்னால் உள்ள சுவாரஸ்யம்!

மேக்னைட் கார் அறிமுகத்தில் நிஸான் நிறுவனம் செயத புத்திசாலித்தனமான காரியம் வர்த்தக அளவில் அந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது.

 நிஸான் செய்த புத்திசாலித்தனமான காரியம்... மேக்னைட் வெற்றிக்கு பின்னால் உள்ள சுவாரஸ்யம்!

சப்-காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் இருக்கும் வர்த்தக வளத்தை பயன்படுத்திக் கொள்ள அனைத்து கார் நிறுவனங்களும் புத்தம் புதிய மாடல்களுடன் களமிறங்கி வருகின்றன. அந்த வகையில், நிஸான் நிறுவனம் மேக்னைட் என்ற புத்தம் புதிய எஸ்யூவி மாடலை கடந்த 2ந் தேதி விற்பனைக்கு கொண்டு வந்தது.

 நிஸான் செய்த புத்திசாலித்தனமான காரியம்... மேக்னைட் வெற்றிக்கு பின்னால் உள்ள சுவாரஸ்யம்!

மேலும், ரூ.4.99 லட்சம் என்ற மிக சவாலான விலையில் வந்து சந்தையை அதிர வைத்துள்ளது நிஸான் மேக்னைட். சப்-காம்பேக்ட் எஸ்யூவி மாடல்கள் மட்டுமின்றி, பிரிமீயம் ஹேட்ச்பேக் கார்களுக்கும் நெருக்கடியை கொடுத்துள்ளது. 5 நாட்களில் 5,000 முன்பதிவுகளை பெற்று அசத்தி உள்ளது.

 நிஸான் செய்த புத்திசாலித்தனமான காரியம்... மேக்னைட் வெற்றிக்கு பின்னால் உள்ள சுவாரஸ்யம்!

இந்த நிலையில், நிஸான் நிறுவனம் எடுத்த புத்திசாலித்தனமான முடிவால் மேக்னைட் கார் சிறப்பான வர்த்தகத்தை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 நிஸான் செய்த புத்திசாலித்தனமான காரியம்... மேக்னைட் வெற்றிக்கு பின்னால் உள்ள சுவாரஸ்யம்!

அதாவது, மேக்னைட் எஸ்யூவியின் முகப்பு டட்சன் க்ரில் போல இருப்பதை பலரும் கேள்வியாக முன் வைத்தனர். உண்மையில், மேக்னைட் எஸ்யூவி டட்சன் பிராண்டில்தான் வர இருந்தது. கடந்த ஜனவரியில் டட்சன் பிராண்டில் விற்பனை செய்வதற்குத்தான் மேக்னைட் எஸ்யூவியின் பெயர் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான செய்திகள் கூட வெளிவந்தன.

 நிஸான் செய்த புத்திசாலித்தனமான காரியம்... மேக்னைட் வெற்றிக்கு பின்னால் உள்ள சுவாரஸ்யம்!

ஆனால், க்ராஷ் டெஸ்ட் முடிவுகளால் டட்சன் பிராண்டுக்கு ஏற்பட்ட அவப்பெயர் மற்றும் வர்த்தக விஷயங்களால் மேக்னைட் எஸ்யூவியும் தோல்வியடையும் வாய்ப்பு இருப்பதாக நிஸான் கருதியது. இதையடுத்து, கடைசிக் கட்டத்தில் மேக்னைட் எஸ்யூவியை நேரடியாக தனது பிராண்டில் வெளியிட நிஸான் நிர்வாகம் முடிவு செய்தது.

 நிஸான் செய்த புத்திசாலித்தனமான காரியம்... மேக்னைட் வெற்றிக்கு பின்னால் உள்ள சுவாரஸ்யம்!

மேலும், கால அவகாசத்தை மனதில் வைத்து பெரிய அளவில் மாற்றங்கள் செய்யாமல், டட்சன் பிராண்டு கார்களின் முகப்பு க்ரில் அமைப்புடன் இந்த கார் நிஸான் பிராண்டு சின்னத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

 நிஸான் செய்த புத்திசாலித்தனமான காரியம்... மேக்னைட் வெற்றிக்கு பின்னால் உள்ள சுவாரஸ்யம்!

நிஸான் மேக்னைட் காரின் விலையை மிக சவாலாக நிர்ணயிப்பதற்கு, ரெனோ நிறுவனத்தின் கூட்டணியில் முதலீடுகளை பகிர்ந்து கொள்வதும் முக்கிய காரணமாக உள்ளது. இந்தியாவில் CMF-A என்ற கட்டமைப்புக் கொள்கையை பயன்படுத்தி புதிய கார் மாடல்களை நிஸான் மற்றும் ரெனோ நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன.

 நிஸான் செய்த புத்திசாலித்தனமான காரியம்... மேக்னைட் வெற்றிக்கு பின்னால் உள்ள சுவாரஸ்யம்!

இந்த பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட ரெனோ க்விட், டட்சன் ரெடிகோ மற்றும் ரெனோ ட்ரைபர் எம்பிவி கார்கள் குறிப்பிடத்தக்க வெற்றியை பதிவு செய்துள்ளன. இதைத்தொடர்ந்து, தற்போது நிஸான் மேக்னைட் எஸ்யூவியும் இந்த பிளாட்ஃபார்மில்தான் உருவாக்கப்பட்டுள்ளது.

 நிஸான் செய்த புத்திசாலித்தனமான காரியம்... மேக்னைட் வெற்றிக்கு பின்னால் உள்ள சுவாரஸ்யம்!

இதனால், விலையை மிக சவாலாக நிர்ணயிக்கும் வாய்ப்பை இரு நிறுவனங்களும் பெற்று வருகின்றன. நிஸான் மேக்னைட் கார் உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில் ரெனோ கார் நிறுவனம் கிகர் என்ற எஸ்யூவி மாடலை உருவாக்கி இருக்கிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் ரெனோ கிகர் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த புதிய மாடலும் மிக ஸ்டைலான டிசைனிலும், சவாலான விலையிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #நிஸான் #nissan
English summary
Here are some interesting facts about Nissan Magnite SUV.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X