இசுஸு நிறுவனத்திற்கு பெருமை தேடி கொடுத்த 2020 டி-மேக்ஸ்!! மோதல் சோதனையில் முழு 5-நட்சத்திரம்...

ஐரோப்பிய-என்சிஏபி மோதல் சோதனையில் 2020 இசுஸு டி-மேக்ஸ் முழு 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இசுஸு நிறுவனத்திற்கு பெருமை தேடி கொடுத்த 2020 டி-மேக்ஸ்!! மோதல் சோதனையில் முழு 5-நட்சத்திரம்...

வாழ்க்கை முறை பிக்-அப் டிரக் மாடலான இசுஸு டி-மேக்ஸ் இந்த சோதனையில் 64 கி.மீ வேகத்தில் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை முடிவில் இளம் வயதை தாண்டியவர்களுக்கான பாதுகாப்பிற்காக மொத்தம் 32.2 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

இசுஸு நிறுவனத்திற்கு பெருமை தேடி கொடுத்த 2020 டி-மேக்ஸ்!! மோதல் சோதனையில் முழு 5-நட்சத்திரம்...

இது மதிப்பீட்டில் 84 சதவீதமாகும். மேலும் குழந்தைகளின் பாதுகாப்பில் 42.2 புள்ளிகள் (அ) 86 சதவீத பாதுகாப்பைப் பெற்றுள்ளது. பாதசாரிகளின் பாதுகாப்பைப் பொருத்தவரை, டி-மேக்ஸ் 37.6 புள்ளிகளாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது மதிப்பீட்டில் 69 சதவீதமாகும்.

இசுஸு நிறுவனத்திற்கு பெருமை தேடி கொடுத்த 2020 டி-மேக்ஸ்!! மோதல் சோதனையில் முழு 5-நட்சத்திரம்...

டி-மேக்ஸ் டிரைவருக்கு தேவையான பல உதவி செயல்பாடுகளை கொண்டுள்ளது யூரோ என்சிஏபி இதற்கு 13.4 புள்ளிகளைக் கொடுத்துள்ளது, இது பாதுகாப்பு உதவி அம்சங்களுக்கான மதிப்பாய்வில் 83 சதவீதமாகும்.

ஆஃப்செட் முன்பக்க மோதல் சோதனையில் பயணிகள் பெட்டி நிலையானதாக உள்ளது என்று அறிக்கை கூறுகிறது. அப்போது சோதனை டம்மிகளின் ஒட்டுமொத்த உடலும் பாதுகாக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இசுஸு நிறுவனத்திற்கு பெருமை தேடி கொடுத்த 2020 டி-மேக்ஸ்!! மோதல் சோதனையில் முழு 5-நட்சத்திரம்...

இருப்பினும், ஓட்டுநரின் முழங்கால்களுக்கான பாதுகாப்பு பலவீனமாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதன் மேல் ஹார்ட்டில் உள்ள சில பகுதிகளும் அதிகளவில் சிதைவடைந்துள்ளன. மேலும் முன்பக்க மோதலில் எதிர் வாகனத்தை தடுப்பதிலும் டி-மேக்ஸ் சிறிது கோட்டைவிடுகிறது.

இசுஸு நிறுவனத்திற்கு பெருமை தேடி கொடுத்த 2020 டி-மேக்ஸ்!! மோதல் சோதனையில் முழு 5-நட்சத்திரம்...

முன் மற்றும் பக்க ஏர்பேக்குகளுடன், டி-மேக்ஸ் சென்டர் ஏர்பேக்குகளையும் பெறுகிறது. இது பயணிகள் விபத்தின்போது ஒருவருக்கு ஒருவர் மோதி கொள்வதை தடுப்பதில் சிறப்பாக செயல்பட்டது, மேலும் முன் இருவரின் தலைகளுக்கும் நல்ல பாதுகாப்பை அளிக்கிறது.

இசுஸு நிறுவனத்திற்கு பெருமை தேடி கொடுத்த 2020 டி-மேக்ஸ்!! மோதல் சோதனையில் முழு 5-நட்சத்திரம்...

2020 இசுஸு டி-மேக்ஸ் 2019ஆம் ஆண்டின் பின்பகுதியில் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து சில ஆசிய நாடுகளில் 2020ன் துவக்கத்தில் விற்பனை வந்த இந்த இசுஸு வாகனம் இதுவரை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #இசுஸு #isuzu
English summary
2020 Isuzu D Max 5 Star Rating
Story first published: Friday, December 11, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X