ஜீப் இந்தியா நிறுவனத்தில் இருந்து அடுத்து என்னென்ன எஸ்யூவி கார்களை எதிர்பார்க்கலாம்...?

ஜீப் இந்தியா நிறுவனம் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் காம்பஸ் மாடலின் புதிய அவதார கார்களை பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகிறது. இந்த வகையில் இந்நிறுவனத்தில் இருந்து அடுத்து வெளிவரவுள்ள கார் மாடல்களை பற்றி இந்த செய்தியில் காண்போம்.

ஜீப் இந்தியா நிறுவனத்தில் இருந்து அடுத்து என்னென்ன எஸ்யூவி கார்களை எதிர்பார்க்கலாம்...?

புனேக்கு அருகே உள்ள ஜீப் இந்தியா நிறுவனத்தின் இரஞ்சங்கவுன் தொழிற்சாலையில் தற்சமயம் காம்பஸ் எஸ்யூவி மாடல் மட்டும் தான் தயாரிக்கப்பட்டு வருகிறது. புனேவில் தயாரிக்கப்படுவதால் இந்திய சந்தைக்கும் மற்ற வெளிநாட்டு சந்தைகளுக்கும் இந்நிறுவனத்தால் தயாரிப்பு காம்பஸ் எஸ்யூவி மாடல்களை எளிதாக கொண்டுவர முடிகிறது.

ஜீப் இந்தியா நிறுவனத்தில் இருந்து அடுத்து என்னென்ன எஸ்யூவி கார்களை எதிர்பார்க்கலாம்...?

இந்த காம்பஸ் எஸ்யூவி மாடலில் முதலில் முரட்டுத்தனமான ட்ரைல்ஹாவ்க் வேரியண்ட்டை கொண்டு வந்த ஜீப் நிறுவனம் பிறகு நிலையான வேரியண்ட்களில் டீசல்-ஆட்டோமேட்டிக் ட்ரிம்-ஐயும், பிஎஸ்6 வெர்சனையும் அறிமுகப்படுத்தியது.

ஜீப் இந்தியா நிறுவனத்தில் இருந்து அடுத்து என்னென்ன எஸ்யூவி கார்களை எதிர்பார்க்கலாம்...?

இதனால் இந்நிறுவனம் தற்சமயம் காம்பஸ் மாடலின் 7 இருக்கை வெர்சன் காரை தயாரிக்கும் பணியில் தன்னை ஈடுப்படுத்தி கொண்டுள்ளது. காம்பஸ் மாடலின் ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய ஏழு இருக்கை வெர்சன் மாடலுக்கு டி-எஸ்யூவி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த 7 இருக்கை எஸ்யூவி கார் இந்திய சந்தைக்கு அடுத்த வருடத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீப் இந்தியா நிறுவனத்தில் இருந்து அடுத்து என்னென்ன எஸ்யூவி கார்களை எதிர்பார்க்கலாம்...?

ஒரே ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டதால் காம்பஸ் மாடலின் பெரும்பான்மையான பாகங்களை இந்த 7-இருக்கை எஸ்யூவி அப்படியே கொண்டுள்ளது. இதனால் வெளிப்புற உடற் அமைப்பு, என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகள் இரண்டு மாடல்களிலும் ஒத்து காணப்படும்.

ஜீப் இந்தியா நிறுவனத்தில் இருந்து அடுத்து என்னென்ன எஸ்யூவி கார்களை எதிர்பார்க்கலாம்...?

இவ்வளவு ஏன், உட்புறத்தில் உள்ள டேஸ்போர்டு மற்றும் இருக்கைகளின் டிசைன் கூட ஒரே மாதிரி இருந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. இருப்பினும் காம்பஸின் புதிய 7 இருக்கை வெர்சன் கார் உயர்ரகத்தில் விலையை பெறவுள்ளதால், உட்புறத்தில் ப்ரீமியம் தொழிற்நுட்பங்களாக வழங்க ஜீப் நிறுவனம் முயற்சிக்கும்.

ஜீப் இந்தியா நிறுவனத்தில் இருந்து அடுத்து என்னென்ன எஸ்யூவி கார்களை எதிர்பார்க்கலாம்...?

ஜீப் நிறுவனத்தின் இந்த புதிய எஸ்யூவி கார் ஆப்-ரோடிற்கு ஏற்ற காம்பஸ் மாடலாக விளங்கவுள்ளது. சந்தையில் அறிமுகமான பிறகு இந்த எஸ்யூவி மாடலுக்கு ஹோண்டா சிஆர்-வி, ஃபோக்ஸ்வேகன் டைகுவான் ஆல்ஸ்பேஸ் மற்றும் ஸ்கோடா கோடியாக் மாடல்கள் மட்டுமில்லாமல் ஏணி வடிவிலான ஃப்ரேம்களை கொண்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டேவர் உள்ளிட்ட மாடல்களுக்கும் போட்டியாக நிலைநிறுத்தப்படவுள்ளன.

ஜீப் இந்தியா நிறுவனத்தில் இருந்து அடுத்து என்னென்ன எஸ்யூவி கார்களை எதிர்பார்க்கலாம்...?

7 இருக்கை எஸ்யூவி மாடலுடன் காம்பஸ் மாடலின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனையும் இந்திய சந்தைக்கு கொண்டுவர இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே காம்பஸ் மாடல் பிஎஸ்6 என்ஜின் தேர்வுகளை பெற்றுவிட்டதால் புதிய ஸ்டைலான வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்களை இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் காரில் எதிர்பார்க்கலாம்.

ஜீப் இந்தியா நிறுவனத்தில் இருந்து அடுத்து என்னென்ன எஸ்யூவி கார்களை எதிர்பார்க்கலாம்...?

கடந்த சில மாதங்களாக இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருவதால், ஃபேஸ்லிஃப்ட் மாற்றமாக வெறும் பிளாஸ்டிக் பேனல்களை மட்டும் பெறவில்லை என்பதை எங்களால் உறுதியாக கூற முடியும்.

ஜீப் இந்தியா நிறுவனத்தில் இருந்து அடுத்து என்னென்ன எஸ்யூவி கார்களை எதிர்பார்க்கலாம்...?

வெளிப்புற பேனல்களில் உலோக மாற்றங்களை ஏற்றுள்ள இந்த புதிய காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி மாடல் உட்புறத்திலும் சில திருத்தியமைக்கப்பட்ட பாகங்களை பெற்றுள்ளது. மேலும் இதன் டேஸ்போர்டின் டிசைனும் மாற்றப்பட்டுள்ளதாக ஏற்கனவே நமது தளத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

ஜீப் இந்தியா நிறுவனத்தில் இருந்து அடுத்து என்னென்ன எஸ்யூவி கார்களை எதிர்பார்க்கலாம்...?

ஜீப் நிறுவனத்தின் முன்னோடி நிறுவனமான எஃப்சிஏ-வின் லேட்டஸ்ட் யூ கனெக்ட் இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தையும் இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் கார் பெறவுள்ளது. இந்த இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் முதன்முதலாக கடந்த ஆண்டில் நடைபெற்ற நுகர்வோர் எலக்ட்ரானிக் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஜீப் இந்தியா நிறுவனத்தில் இருந்து அடுத்து என்னென்ன எஸ்யூவி கார்களை எதிர்பார்க்கலாம்...?

இந்த லேட்டஸ்ட் சிஸ்டம், 12.3 இன்ச்சில் திரையுடன் அதிகளவிலான வசதிகளை தன்னுள் கொண்டுள்ளது. புதுமையான தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ள ஜீப் நிறுவனத்தின் இந்த காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் இந்த வருட இறுதியிலோ அல்லது அடுத்த வருட துவக்கத்திலோ அறிமுகமாகலாம்.

ஜீப் இந்தியா நிறுவனத்தில் இருந்து அடுத்து என்னென்ன எஸ்யூவி கார்களை எதிர்பார்க்கலாம்...?

இவை இரண்டை தவிர்த்து மூன்றாவதாக சப்-4 மீட்டர் காம்பெக்ட் எஸ்யூவி மாடல் ஒன்றும் ஜீப் இந்தியா நிறுவனத்தில் இருந்து வெளியாகவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இந்த புதிய சப்-4 மீட்டர் எஸ்யூவியின் இந்திய அறிமுகம் எப்படியிருந்தாலும் 2021ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்கு பிறகு தான் இருக்கும்.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep India recently began rolling out newer derivatives of the Compass.
Story first published: Tuesday, February 25, 2020, 19:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X