முடிவை மாற்றுகிறதா ஜீப்? புதிய 7-இருக்கை எஸ்யூவிக்கு காம்பஸ் அல்லாத புதிய பெயர்?!

தற்போதைய காம்பஸ் எஸ்யூவி மாடலின் சில அம்சங்களை பெற்றுவந்தாலும், ஜீப்பின் புதிய 7-இருக்கை எஸ்யூவி கார் தனக்கென தனி அடையாளத்துடன் காம்பஸ் அல்லாத ஒரு பெயரில் அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

முடிவை மாற்றுகிறதா ஜீப்? புதிய 7-இருக்கை எஸ்யூவிக்கு காம்பஸ் அல்லாத புதிய பெயர்?!

ஜீப் நிறுவனத்தால் புதிய 7-இருக்கை எஸ்யூவி மாடல் காம்பஸின் அதே மோனோகோக் ப்ளாட்ஃபாரத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கூடுதல் பின் இருக்கை வரிசைக்காக காரின் நீளத்தை அதிகப்படுத்தும் வகையில் ப்ளாட்ஃபாரம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

முடிவை மாற்றுகிறதா ஜீப்? புதிய 7-இருக்கை எஸ்யூவிக்கு காம்பஸ் அல்லாத புதிய பெயர்?!

காரின் நீளம் மட்டுமின்றி வீல்பேஸும் இந்த திருத்தியமைக்கப்பட்ட ப்ளாட்ஃபாரத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. இதன் காரணமாக உட்புறம் சற்று பெரியதாகும். குறிப்பாக இரண்டாவது இருக்கை பயணிகளுக்கு கால் வைக்க கூடுதல் இடம் கிடைக்கும்.

முடிவை மாற்றுகிறதா ஜீப்? புதிய 7-இருக்கை எஸ்யூவிக்கு காம்பஸ் அல்லாத புதிய பெயர்?!

அதேநேரம் தொழிற்நுட்ப அம்சங்கள் ஜீப்பின் புதிய 7-இருக்கை எஸ்யூவியில் காம்பஸை காட்டிலும் சில படிகள் அப்டேட்டாகவே வழங்கப்படவுள்ளன. இதனால் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் வழங்கப்படும் வசதிகளை இந்த 7 இருக்கைகள் கொண்ட காரிலும் எதிர்பார்க்கலாம்.

முடிவை மாற்றுகிறதா ஜீப்? புதிய 7-இருக்கை எஸ்யூவிக்கு காம்பஸ் அல்லாத புதிய பெயர்?!

காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட்டில் பெரிய தொடுத்திரை சிஸ்டம், பனோராமிக் சன்ரூஃப், 18 இன்ச்சில் சக்கரங்கள் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை எதிர்பார்க்கப்படுகின்றன. புதிய 7-இருக்கை எஸ்யூவி காரின் தோற்றத்தை ஜீப் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

முடிவை மாற்றுகிறதா ஜீப்? புதிய 7-இருக்கை எஸ்யூவிக்கு காம்பஸ் அல்லாத புதிய பெயர்?!

நமக்கு தெரிந்தவரை இந்த புதிய காரின் முன்பக்கமும் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் காரைதான் பெரும்பான்மையாக ஒத்திருக்கும். இருப்பினும் இரண்டும் வேறுபடுவதற்காக சில காஸ்மெட்டிக் மாற்றங்கள் கொண்டுவரப்படும்.

முடிவை மாற்றுகிறதா ஜீப்? புதிய 7-இருக்கை எஸ்யூவிக்கு காம்பஸ் அல்லாத புதிய பெயர்?!

புதிய 7-இருக்கை ஜீப் எஸ்யூவி காரின் பின்பக்கம் கூடுதல் இருக்கை வரிசையினால் காம்பஸ் மற்றும் அதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் உடன் ஒப்பிடுகையில் முற்றிலும் வேறுப்பட்டதாக இருக்கும். இத்தகைய மாற்றங்களினால் இந்த புதிய எஸ்யூவி காரை புதிய பெயரில் கொண்டுவர ஜீப் திட்டமிட்டுவருவதாக தகவல்கள் கூறுகின்றன.

முடிவை மாற்றுகிறதா ஜீப்? புதிய 7-இருக்கை எஸ்யூவிக்கு காம்பஸ் அல்லாத புதிய பெயர்?!

மற்றப்படி காம்பஸின் தற்போதைய 2.0 லிட்டர், 4-சிலிண்டர், மல்டிஜெட் டர்போ-டீசல் என்ஜினை தான் 7-இருக்கை எஸ்யூவியும் தொடரும் என தெரிகிறது. ஆனால் இந்த டர்போ டீசல் என்ஜின் 7-இருக்கை கார் மாடலுக்காக அதிகப்பட்சமாக 200எச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் திருத்தியமைக்கப்படும் என ஏற்கனவே நமது தளத்தில் கூறியிருந்தோம்.

முடிவை மாற்றுகிறதா ஜீப்? புதிய 7-இருக்கை எஸ்யூவிக்கு காம்பஸ் அல்லாத புதிய பெயர்?!

காம்பஸில் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 173எச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த என்ஜின் உடன் புதிய 7-இருக்கை எஸ்யூவி காரில் 9-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

முடிவை மாற்றுகிறதா ஜீப்? புதிய 7-இருக்கை எஸ்யூவிக்கு காம்பஸ் அல்லாத புதிய பெயர்?!

எம்ஜி க்ளோஸ்டர், டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டேவியர் உள்ளிட்ட பெரிய லேடார்-ஆன்-ஃப்ரேம், 3-வரிசை எஸ்யூவிகளை நேரடியாக மோதும் வகையில் இந்த 7-இருக்கை எஸ்யூவியை ஜீப் நிறுவனம் நிலைநிறுத்தவுள்ளது. இந்தியாவில் இதன் அறிமுகம் 2021ஆம் ஆண்டின் இறுதியில் இருக்கலாம்.

Most Read Articles

மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep 7-seater SUV will not be named Compass.
Story first published: Sunday, December 27, 2020, 13:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X