ஜீப் காம்பஸ் ஏழு-இருக்கை கார் மீண்டும் இந்தியாவில் சோதனை! எம்ஜி ஹெக்டர் ப்ளஸுக்கு தயாராகும் போட்டி

ஜீப் காம்பஸின் ஏழு-இருக்கை வெர்சனின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜீப் காம்பஸ் ஏழு-இருக்கை கார் மீண்டும் இந்தியாவில் சோதனை! எம்ஜி ஹெக்டர் ப்ளஸுக்கு தயாராகும் போட்டி

ஜீப் இந்தியா நிறுவனம் காம்பஸின் 7-இருக்கை வெர்சனை அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த 2021 மாடல் இந்திய சாலைகளில் தீவிர சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.

ஜீப் காம்பஸ் ஏழு-இருக்கை கார் மீண்டும் இந்தியாவில் சோதனை! எம்ஜி ஹெக்டர் ப்ளஸுக்கு தயாராகும் போட்டி

ஜீப் காம்பஸ் ஏழு-இருக்கை வெர்சன் சமீபத்தில் அறிமுகமான எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்-ஐ போல் கிடையாது. எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் கூடுதலாக மூன்றாவது இருக்கை வரிசையை மட்டும்தான் ஏற்றுள்ளது. மற்றப்படி பெரிய அளவில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை

ஜீப் காம்பஸ் ஏழு-இருக்கை கார் மீண்டும் இந்தியாவில் சோதனை! எம்ஜி ஹெக்டர் ப்ளஸுக்கு தயாராகும் போட்டி

ஆனால் ஜீப் காம்பஸ் டாடா மோட்டார்ஸின் கிராவிட்டாஸை போல் ஐந்து-இருக்கை காம்பஸை காட்டிலும் உட்புறத்தில் கூடுதலான இட வசதியையும் நீளமான வீல்பேஸையும் பெற்றுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீப் காம்பஸ் ஏழு-இருக்கை கார் மீண்டும் இந்தியாவில் சோதனை! எம்ஜி ஹெக்டர் ப்ளஸுக்கு தயாராகும் போட்டி

இந்த நிலையில் தற்போது ஓவர்ட்ரைவ் செய்திதளம் மூலமாக இணையத்தில் வெளியாகியுள்ள ஸ்பை படங்களில் கார் முழுவதும் மறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நீளத்தை அதிகமாக கொண்டுள்ள சோதனை காரின் பின்பக்கம் மிகவும் வெளிப்படையாக காட்சியளிக்கிறது.

ஜீப் காம்பஸ் ஏழு-இருக்கை கார் மீண்டும் இந்தியாவில் சோதனை! எம்ஜி ஹெக்டர் ப்ளஸுக்கு தயாராகும் போட்டி

மிகைப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் புதிய D-பில்லர் உடன் திருத்தியமைக்கப்பட்டுள்ள பின்பக்கத்தை பெற்றுள்ள காம்பஸ் ஏழு-இருக்கை வெர்சனின் ஜன்னல் லைன் பின்பக்க விண்ட்ஸ்க்ரீன் வரையில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதேபோல் பின்புறத்தில் புதியதாக சிறிய ஜன்னல் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது.

ஜீப் காம்பஸ் ஏழு-இருக்கை கார் மீண்டும் இந்தியாவில் சோதனை! எம்ஜி ஹெக்டர் ப்ளஸுக்கு தயாராகும் போட்டி

இது மூன்றாவது இருக்கை வரிசைக்கு தேவையான சூரிய வெளிச்சத்திற்கு வழிவகுக்கும். இவை தவிர்த்து மற்ற பாகங்கள் அனைத்தும் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் காரை தான் ஒத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நேர்த்தியான எல்இடி ஹெட்லேப்கள், ஜீப்பின் புதிய அடையாளமான 7-ஸ்லாட் க்ரில் மற்றும் திருத்தியமைக்கப்பட்ட பம்பர்கள் உள்ளிட்டவற்றை இந்த ஏழு-இருக்கை வெர்சன் பெற்றிருக்கும்.

ஜீப் காம்பஸ் ஏழு-இருக்கை கார் மீண்டும் இந்தியாவில் சோதனை! எம்ஜி ஹெக்டர் ப்ளஸுக்கு தயாராகும் போட்டி

தற்போது விற்பனையில் இருப்பது ஃபேஸ்லிஃப்ட் அல்லாத காம்பஸ் என்பதால், இந்த மாற்றங்கள் தற்போதைய காம்பஸ் காரிலும் வழங்கப்படவுள்ளன. ஜீப் காம்பஸில் 2.0 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் மற்றும் 1.4 லிட்டர், 4-சிலிண்டர், டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன.

ஜீப் காம்பஸ் ஏழு-இருக்கை கார் மீண்டும் இந்தியாவில் சோதனை! எம்ஜி ஹெக்டர் ப்ளஸுக்கு தயாராகும் போட்டி

ஆனால் இதன் புதிய ஃபேஸ்லிஃப்ட் மற்றும் 7-இருக்கை வெர்சனில் 1.3 லிட்டர், டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட வாய்ப்புள்ளது. ஜீப் காம்பஸ் ஏழு-இருக்கை காருக்கு டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா, ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்-ஸ்பேஸ் மற்றும் விரைவில் அறிமுகமாகவுள்ள டாடா கிராவிட்டாஸ் போட்டியாக விளங்கவுள்ளன.

Most Read Articles

மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep Compass 7 Seater Spy Pics
Story first published: Thursday, October 22, 2020, 20:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X