ஜீப் காம்பஸ் 7 சீட்டர் எஸ்யூவியில் பவர்ஃபுல் டீசல் எஞ்சின் அறிமுகமாகிறது!

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலில் பவர்ஃபுல் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட உள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 ஜீப் காம்பஸ் 7 சீட்டர் எஸ்யூவியில் பவர்ஃபுல் டீசல் எஞ்சின் தேர்வு அறிமுகமாகிறது!

இந்தியாவின் மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் பிரிமீயம் மாடலாக ஜீப் காம்பஸ் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு நல்ல வரவேற்பும் இருந்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளிலும் ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு சிறப்பான வரவேற்பு உள்ளது.

 ஜீப் காம்பஸ் 7 சீட்டர் எஸ்யூவியில் பவர்ஃபுல் டீசல் எஞ்சின் தேர்வு அறிமுகமாகிறது!

இந்த நிலையில், ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்போது இந்த மாடல் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

 ஜீப் காம்பஸ் 7 சீட்டர் எஸ்யூவியில் பவர்ஃபுல் டீசல் எஞ்சின் தேர்வு அறிமுகமாகிறது!

இந்த புதிய மாடல் குறித்த அவ்வப்போது ஸ்பை படங்களும், முக்கியத் தகவல்களும் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், தற்போது ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலின் எஞ்சின் குறித்து முக்கிய விபரம் கசிந்துள்ளது.

 ஜீப் காம்பஸ் 7 சீட்டர் எஸ்யூவியில் பவர்ஃபுல் டீசல் எஞ்சின் தேர்வு அறிமுகமாகிறது!

அதாவது, ஜீப் காம்பஸ் 7 சீட்டர் மாடலில் அதிக சக்திவாய்ந்த 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட உள்ளதாக ஆட்டோகார் இந்தியா தள செய்தி தெரிவிக்கிறது. தற்போதைய மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

 ஜீப் காம்பஸ் 7 சீட்டர் எஸ்யூவியில் பவர்ஃபுல் டீசல் எஞ்சின் தேர்வு அறிமுகமாகிறது!

இந்த நிலையில், காம்பஸ் 7 சீட்டர் மாடலில் இடம்பெறும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் 197 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் படைத்தாக இருக்கும். அத்துடன் இந்த மாடலில் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

 ஜீப் காம்பஸ் 7 சீட்டர் எஸ்யூவியில் பவர்ஃபுல் டீசல் எஞ்சின் தேர்வு அறிமுகமாகிறது!

ஜீப் காம்பஸ் 5 சீட்டர் மாடலின் அடிப்படையில் அதிக நீளம் மற்றும் கூடுதல் வீல்பேஸ் நீளம் கொண்டதாக 7 சீட்டர் மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் மூன்று வரிசை இருககை அமைப்பு இடம்பெற்றிருக்கும். ஆட்டோமேட்டிக் எல்இடி ஹெட்லைட்டுகள், 18 அங்குல அலாய் வீல்கள், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

 ஜீப் காம்பஸ் 7 சீட்டர் எஸ்யூவியில் பவர்ஃபுல் டீசல் எஞ்சின் தேர்வு அறிமுகமாகிறது!

புதிய ஜீப் காம்பஸ் 7 சீட்டர் எஸ்யூவி மாடலானது டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி க்ளோஸ்ட்டர் மற்றும் ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவிகளுடன் போட்டி போடும். அடுத்த ஆண்டு இந்த புதிய ஜீப் காம்பஸ் 7 சீட்டர் மாடல் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பு: ஜீப் காம்பஸ் 5 சீட்டர் மாடலின் படங்கள் மாதிரிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
According to media report, Jeep compass 7 seat version will get a more powerful diesel engine option.
Story first published: Monday, November 30, 2020, 13:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X