ஜீப் காம்பஸ் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

ஜீப் காம்பஸ் பிஎஸ்6 மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வரும் இந்த எஸ்யூவியின் பிஎஸ்6 மாடலின் விலை உள்ளிட்ட முக்கிய விபரங்களை தொடர்ந்து படிக்கலாம்.

ஜீப் காம்பஸ் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

இந்தியாவின் மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் ஜீப் நிறுவனத்தின் காம்பஸ் எஸ்யூவி மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் தனித்துவமான, மதிப்புமிக்க தேர்வாகவும் கருதப்படுகிறது. இந்த நிலையில், பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஒப்பான அம்சத்துடன் கூடிய எஞ்சினுடன் ஜீப் காம்பஸ் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

ஜீப் காம்பஸ் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் பிஎஸ்6 மாடலுக்கு ரூ.16.49 லட்சம் முதல் ரூ.24.99 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் நிலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பிஎஸ்4 மாடலைவிட ரூ.89,000 கூடுதல் விலையில் வந்துள்ளது.

MOST READ: தனியார் வாகனங்கள் இயங்க அனுமதி... விதிகளை தளர்த்திய கேரளா!

ஜீப் காம்பஸ் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

புதிய ஜீப் காம்பஸ் பிஎஸ்6 மாடலின் வேரியண்ட் தேர்வுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிஎஸ்6 மாடலில் ஸ்போர்ட், லான்ஜிடியூட் ஆப்ஷனல் மற்றும் லிமிடேட் ஆகிய வேரியண்ட்டுகள் நீக்கப்பட்டுவிட்டுள்ளன.

ஜீப் காம்பஸ் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

தற்போது ஸ்போர்ட் ப்ளஸ், லான்ஜிடியூட் ப்ளஸ், லிமிடேட் ப்ளஸ் ஆகிய வேரியண்ட் பெயர்களில் கிடைக்கும். ஆரம்ப விலையில் கிடைக்கும் ஸ்போர்ட் ப்ளஸ் வேரியண்ட்டில் அலாய் வீல்கள், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டியூவல் ஸோன் ஏசி ஆகியவை வழங்கப்படுகின்றன.

MOST READ: அத்தியாவசியப் பணியாளர் நலனில் அக்கறையுடன் ஹோண்டா எடுத்த சூப்பர் முடிவு!

ஜீப் காம்பஸ் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

விலை உயர்ந்த வேரியண்ட்டுகளில் எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், பனோரமிக் சன்ரூஃப், 8.4 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இரட்டை வண்ணத் தேர்வு ஆகியவை வழங்கப்படுகின்றன.

ஜீப் காம்பஸ் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

ஜீப் காம்பஸ் பிஎஸ்6 மாடலில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டர்போ எஞ்சின் தேர்வுகள் மேம்படுத்தப்பட்டு வந்துள்ளன.

MOST READ: இந்தியாவில் அறிமுகமாகும் சுஸுகியின் முதல் பிஎஸ்6 பிரிமீயம் பைக் மாடல்!

ஜீப் காம்பஸ் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

பெட்ரோல் எஞ்சின் 160 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டீசல் மாடல் 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

ஜீப் காம்பஸ் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

பெட்ரோல், டீசல் மாடல்களில் மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. குறிப்பிட்ட வேரியண்ட்டுகளில் 4 வீல் டிரைவ் சிஸ்டமும் கொடுக்கப்படுகின்றன.

MOST READ: வேகமாக பரவும் கொரோனா வைரஸ்... அதிரடி முடிவை எடுத்த பெட்ரோல் பங்க் டீலர்கள்... என்னனு தெரியுமா?

ஜீப் காம்பஸ் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஜீப் நிறுவனம் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்யும் ஒரே மாடலாக காம்பஸ் எஸ்யூவி உள்ளது. எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர், ஹூண்டாய் டூஸான் என பல்வேறு போட்டியாளர்களுக்கு மத்தியில் மதிப்புமிக்க தேர்வுகளில் ஒன்றாக ஜீப் காம்பஸ் இருந்து வருகிறது.

Most Read Articles

மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep India has launched Compass with BS6 compliant engine options in India and prices starting at Rs 16.49 lakh (Ex-Showroom).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X