ஜீப் காம்பஸ் டீசல் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டீசல் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு கொணடு வரப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஜீப் காம்பஸ் டீசல் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

இந்தியாவில் ஜீப் நிறுவனத்தின் மிக குறைவான மாடலாக காம்பஸ் எஸ்யூவி விற்பனையில் இருக்கிறது. மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகவும் பிரிமீயமான மாடலாகவும் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர், கியா செல்டோஸ் போன்ற சரியான பட்ஜெட்டில் வந்த எஸ்யூவி கார்கள், ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளன.

ஜீப் காம்பஸ் டீசல் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

இதையடுத்து, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வுகளை வழங்குவதற்கு ஜீப் நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டீசல் மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஜீப் காம்பஸ் டீசல் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 173 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது.

ஜீப் காம்பஸ் டீசல் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

இந்த டீசல் எஞ்சின் இனி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கும். மேலும், இந்த டீசல் எஞ்சின் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு நிகரானதாகவும் தெரிவிக்கப்படடு இருக்கிறது.

ஜீப் காம்பஸ் டீசல் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டீசல் ஆட்டோமேட்டிக் மாடலானது லான்ஜிடியூட் மற்றும் லிமிடேட் ப்ளஸ் என்ற இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும்.

ஜீப் காம்பஸ் டீசல் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

லான்ஜிடியூட் வேரியண்ட்டில் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா, டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

ஜீப் காம்பஸ் டீசல் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

லான்ஜிடியூட் வேரியண்ட்டில் செல்க்ட் டெர்ரெயின் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் ஆட்டோ, சேண்ட், மட் மற்றும் ஸ்னோ ஆகிய நான்கு டிரைவிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஜீப் காம்பஸ் டீசல் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

லிமிடேட் ப்ளஸ் வேரியண்ட்டில் கூடுதலாக பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. லான்ஜிடியூட் வேரியண்ட்டில் இருக்கும் 7 அங்குல தொடுதிரை சாதனத்திற்கு பதிலாக, 8.4 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

ஜீப் காம்பஸ் டீசல் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

தவிரவும், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், டியூவல் பேன் பனோரமிக் சன்ரூஃப், லெதர் இன்டீரியர், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன.

ஜீப் காம்பஸ் டீசல் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

ஜீப் காம்பஸ் டீசல் ஆட்டோமேட்டிக் மாடலின் லான்ஜிடியூட் வேரியண்ட்டிற்கு ரூ.21,96 லட்சம் விலையும், லிமிடேட் ப்ளஸ் வேரியண்ட் ரூ.24.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep has launched Compass diesel engine with automatic gearbox in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X