2021 காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் அப்டேட்டான டெக்னாலஜிகளை வாரி வழங்கும் ஜீப்...

ஜீப் காம்பஸ் மாடலின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் அடுத்த 2021ஆம் ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகவுள்ளது. அப்டேட்டான வெளிப்புற மற்றும் உட்புறத்தை பெற்றுள்ள இந்த ஃபேஸ்லிஃப்ட் காருக்கு பெரிய அளவில் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

2021 காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் அப்டேட்டான டெக்னாலஜிகளை வாரி வழங்கும் ஜீப்...

எஃப்சிஏ நிறுவனம் இந்திய உள்நாட்டு சந்தையில் முழுவதும் ஜீப் ப்ராண்ட் மாடல்களை தான் நம்பி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இதனை நிவர்த்தி செய்ய ஜீப் நிறுவனமும் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் உள்பட ஏகப்பட்ட புதிய மாடல்களை எதிர்காலத்திற்காக ஒதுக்கி வைத்துள்ளது.

2021 காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் அப்டேட்டான டெக்னாலஜிகளை வாரி வழங்கும் ஜீப்...

காம்பஸ் எஸ்யூவி மாடலுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைப்பதால் 25,000 யூனிட் விற்பனையை இந்த கார் மிக விரைவாக அடைந்திருந்தது. இருப்பினும் இதன் விற்பனை கடந்த சில மாதங்களாக பெரிய அளவில் இல்லை. ஜீப் இந்தியா நிறுவனம் பெரிய அளவில் சந்தைப்படுத்தி வரும் ஒரே மாடலாக காம்பஸ் எஸ்யூவி மாடல் உள்ளதால், இதன் புதிய வேரியண்ட்கள் மற்றும் ட்ரிம்களை அவ்வப்போது அறிமுகம் செய்ய இந்நிறுவனம் மறப்பதில்லை.

2021 காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் அப்டேட்டான டெக்னாலஜிகளை வாரி வழங்கும் ஜீப்...

புதிய வேரியண்ட்கள் மட்டுமின்றி ஜீப் நிறுவனம் காம்பஸ் மாடலின் ஸ்பெஷல் எடிசனையும் டாப் ட்ரைல்ஹாவ்க் வேரியண்ட் சந்தையில் நுழைவதற்கு முன்பாக அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஃபியட் நிறுவனமோ தனது தயாரிப்புகளை புத்துயிர் பெற வைக்காமல், இந்தியாவில் தனது தயாரிப்பு மாடல்களின் லைன்அப்-ஐ விரிவுப்படுத்தவே முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

2021 காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் அப்டேட்டான டெக்னாலஜிகளை வாரி வழங்கும் ஜீப்...

ஆனால் ஃபியட்டின் இத்தகைய முயற்சிகள் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனுக்கு காம்பஸ் அப்டேட் செய்யப்பட்டது மற்றும் சமூகவலைத்தள ஈடுப்பாடு உள்ளிட்டவற்றின் மூலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை நம்மால் அறிய முடிகிறது. இதனை ஃபியட் க்றைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பார்த்தா தத்தாவும், இந்த சப்-4 மீட்டர் எஸ்யூவி (காம்பஸ்), மூன்று வரிசைகளை கொண்ட எஸ்யூவியாகவும் விற்பனைக்கு வரவுள்ளதாக கூறி உறுதி செய்துள்ளார்.

2021 காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் அப்டேட்டான டெக்னாலஜிகளை வாரி வழங்கும் ஜீப்...

ஜீப் நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட புதிய காம்பஸ் மாடலின் மூலமாக எஸ்யூவி பிரிவில் குறைந்தது இரண்டு வருடங்களுக்காவது நிலையான இடத்தை பிடிக்க முடியும் என கணித்து வைத்துள்ளது. தற்போதைய காம்பஸ் மாடலின் பெரும்பான்மையான டிசைன்களை அப்படியே பெற்று வரவுள்ள இதன் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் கார் 5-இருக்கையில் இருந்து 7-இருக்கை எஸ்யூவி மாடலாக மாற்றப்பட்டுள்ளது.

2021 காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் அப்டேட்டான டெக்னாலஜிகளை வாரி வழங்கும் ஜீப்...

சிபியூ முறையில் இந்தியாவில் சந்தைப்படுத்தப்படவுள்ள காம்பஸ் மாடலின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் ஏற்கனவே கூறியதுபோல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவிற்கு வரவுள்ளது. வெளிப்புறத்தில் ரீ-டிசைனில் ஹெட்லைட்டை பெற்றுள்ள இந்த 2021 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் முன்புற க்ரில்லும், பம்பரும் கூட புதிய வடிவத்தை பெற்றுள்ளன.

2021 காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் அப்டேட்டான டெக்னாலஜிகளை வாரி வழங்கும் ஜீப்...

உட்புற கேபினில் திருத்தியமைக்கப்பட்ட தோற்றத்தில் டேஸ்போர்டு மற்றும் ஓட்டுனருக்கு தேவையான வசதிகளுடன் அதிக எண்ணிக்கையில் பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை எல்லாம் விட மிகவும் கவனிக்கத்தக்க விஷயமாக இதன் டேஸ்போர்டில் பெரிய அளவிலான தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தை ஜீப் நிறுவனம் வழங்கியுள்ளது.

2021 காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் அப்டேட்டான டெக்னாலஜிகளை வாரி வழங்கும் ஜீப்...

என்ஜின் தேர்வாக தற்போதைய காம்பஸ் மாடலில் வழங்கப்படும் அதே 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின்கள் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனுக்கும் கொடுக்கப்படவுள்ளன. பார்த்தா தத்தா இந்திய ஆட்டோமொபைல் மார்க்கெட் அடுத்த வருடத்தில் தான் இயல்பு நிலைக்கு திரும்பும் என கணித்து வைத்துள்ளார்.

2021 காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் அப்டேட்டான டெக்னாலஜிகளை வாரி வழங்கும் ஜீப்...

இதனால் தான் புதிய காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அடுத்த ஆண்டில் விற்பனை கொண்டுவர திட்டமிட்டுள்ளார். ஜீப் காம்பஸ் மாடலுக்கு சந்தையில் போட்டி மாடல்களாக டொயோட்டா ஃபார்ச்சூனர். ஃபோர்டு எண்டேவர், இசுஸு எம்யு-எக்ஸ் மற்றும் மஹிந்திரா அல்ட்ராஸ் ஜி4 உள்ளிட்ட மாடல்கள் உள்ளன.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep Compass Facelift With Bigger Touchscreen Coming
Story first published: Saturday, April 18, 2020, 16:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X