Just In
- 4 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 5 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 6 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 7 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுக தேதி விபரம் வெளியானது!
ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த புதிய மாடலுக்கு சில டீலர்களில் ரகசிய முன்பதிவும் துவங்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் பிரிமீயம் ரக மாடலாக ஜீப் காம்பஸ் விற்பனையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பாரம்பரியம் மிக்க ஜீப் நிறுவனத்தின் கெத்தான டிசைன் அம்சங்கள் காம்பஸ் எஸ்யூவிக்கு சிறப்பான வர்த்தகத்தை பெற்று தந்து வருகிறது. ஆனால், பெரிய மாற்றங்கள் இல்லாமல் தொடர்ந்து விற்பனை செய்யப்படுவதால், வாடிக்கையாளர்களிடம் மவுசு குறைந்து வருகிறது.

இந்த நிலையில், மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் அதிகரித்துள்ள போட்டியை மனதில் வைத்து, வடிவமைப்பிலும், வசதிகளிலும் ஜீப் காம்பஸ் எஸ்யூவி மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

அண்மையில் சீனாவில் நடந்த குவாங்ஸோ ஆட்டோ எக்ஸ்போவில் வைத்து ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், அடுத்த மாதம் 23ந் தேதி இந்தியாவில் புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக டீம் பிஎச்பி தள செய்தி தெரிவிக்கிறது.

புதிய ஜீப் காம்ப்ஸ எஸ்யூவியில் புதிய க்ரில் அமைப்பு, பம்பர் இடம்பெற்றுள்ளது. எல்இடி ஹெட்லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, உட்புறத்தில் டேஷ்போர்டு டிசைனில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் 10.1 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, அமேஸான் அலெக்ஸா செயலியை சப்போர்ட் செய்யும் வாய்ப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.

இந்த புதிய மாடலில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் ஆகியவை கொடுக்கப்பட்டு இருக்கும். இதன்மூலமாக, வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்வதற்கான வாய்ப்பு உள்ளது.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் தக்க வைக்கப்படும். டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பெட்ரோல் எஞ்சின் 161 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் பெற்றிருக்கும்.

பெட்ரோல், டீசல் எஞ்சின் தே்வுகளில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும். அதேபோன்று, பெட்ரோல் மாடலில் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும், டீசல் மாடலில் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் ஆப்ஷனலாக கிடைக்கும்.