Just In
- 12 hrs ago
மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25!! நம்மூர் ஆர்15 போல இருக்கு!
- 18 hrs ago
ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் உடன் பிரபலமான கியா செல்டோஸ் கார் எப்படி இருக்கும்?! க்ரெட்டாவின் ஆதிக்கத்தை உடைக்குமா?
- 20 hrs ago
மஹிந்திரா தாருக்கு போட்டியாக பிஎஸ்6 குர்கா வாகனத்தை கொண்டுவரும் ஃபோர்ஸ்!! உட்பக்க சிறப்பம்சங்கள் வெளியீடு
- 23 hrs ago
தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்.. எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!
Don't Miss!
- Movies
ரசிகர்கள் கேட்ட அந்த கேள்வி.. கவர்ச்சி போட்டோக்களை அதிரடியாய் டெலிட் செய்த ஷிவானி நாராயணன்!
- Lifestyle
நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க காலை வேளையில் செய்வதற்கு ஏற்ற எளிமையான 5 உடற்பயிற்சிகள்!
- News
'சோனியா காந்தி ஒப்புதலுக்கும் மதிப்பில்லை' - சபையில் போட்டுடைத்த அமைச்சர் நமச்சிவாயம்
- Sports
குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக தவறான பேச்சு.. சர்ச்சையில் இந்திய வீரர் அஸ்வின்..போலீசில் புகார்!
- Finance
அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய வெளியீட்டு தேதி வெளியானது!
புதிய மாற்றங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ள ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் இந்திய வெளியீட்டு தேதி விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் முழுமையாக பார்க்கலாம்.

மிட்சைஸ் பிரிமீயம் எஸ்யூவி மார்க்கெட்டில் ஜீப் காம்பஸ் எஸ்யூவி மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இருப்பினும், எம்ஜி ஹெக்டர், ஸ்கோடா கரோக், ஃபோக்ஸ்வேகன் டி ராக், டாடா ஹாரியர் உள்ளிட்ட மாடல்களால் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கூடுதல் அம்சங்கள் மற்றும் வடிவமைப்பில் சிறிய மாற்றங்களுடன் ஜீப் காம்பஸ் மேம்படுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் சீனாவில் நடந்த ஆட்டோ எக்ஸ்போ மூலமாக பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்ட இந்த மாடல் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

அதற்கு முன்னதாக, வரும் ஜனவரி 7ந் தேதி புதிய காம்பஸ் எஸ்யூவி இந்தியாவில் வெளியிடப்பட உள்ளதாக ஜீப் நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் வடிவமைப்பிலும், வசதிகளிலும் சிறிய மாற்றங்களுடன் வருகிறது.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் முகப்பு க்ரில் அமைப்பிலும், பம்பரிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் புதிய அலாய் வீல்கள் வழங்கப்படும். உட்புறத்தில் புதிய டேஷ்போர்டு இடம்பெறுகிறது.

மேலும், 10.1 அங்குல தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கும். ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் கிடைக்கும். அதேபோன்று, அமேஸான் அலெக்ஸா வாய்ஸ் கமான்ட் வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கும்.
இந்த புதிய மாடலில் இன்டர்நெட் மூலமாக நேரடி அப்டேட்டுகளை கொடுக்கும் வகையில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற உள்ளது.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் தக்க வைக்கப்படும். பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 161 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் எஞ்சின் 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.
இந்த காரில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படும். பெட்ரோல் மாடலில் 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வும், டீசல் மாடலில் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் ஆப்ஷனலாக இருக்கும்.

இதனிடையே, வரும் ஜனவரி 23ந் தேதி புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி இந்தியாவில் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தற்போதைய மாடலைவிட சற்றே கூடுதல் விலையில் புதிய மாடல் எதிர்பார்க்கப்படுகிறது.