2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்டின் உட்புற வசதிகள் என்னென்ன..? முதன்முறையாக வெளிவந்த ஸ்பை படங்கள்

2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உட்புற ஸ்பை படங்கள் முதன்முறையாக வெளியாகியுள்ளன. அவற்றின் மூலம் தெரிய வந்துள்ள விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்டின் உட்புற வசதிகள் என்னென்ன..? முதன்முறையாக வெளிவந்த ஸ்பை படங்கள்

2017ல் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஜீப் காம்பஸ் எஸ்யூவி 2021ஆம் ஆண்டிற்காக ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை ஏற்றுள்ளது. இந்த நிலையில் இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் பிரேசில், சீனா உள்பட இந்தியாவிலும் தீவிரமாக சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.

2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்டின் உட்புற வசதிகள் என்னென்ன..? முதன்முறையாக வெளிவந்த ஸ்பை படங்கள்

ஆனால் இதுவரை முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் காரின் வெளிப்புற ஸ்பை படங்கள் மட்டுமே வெளிவந்துள்ள நிலையில் தற்போது முதன்முறையாக காரின் உட்புற படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்களில் ஓரளவு மறைக்கப்பட்டதாக உள்ள கேபின் வலது கை ட்ரைவிங் உடன் சில மாற்றங்களை பெற்றுள்ளது.

2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்டின் உட்புற வசதிகள் என்னென்ன..? முதன்முறையாக வெளிவந்த ஸ்பை படங்கள்

இந்த மாற்றங்களில் முக்கியமானதாக மைய கன்சோல், புதிய மற்றும் பெரிய இன்ஃபோடெயின்மெண்ட் திரையுடன் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. எஃப்சிஏ க்ரூப்பின் யுகனெக்டட்5 இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கான இந்த திரை 10.1 இன்ச் அளவில் வழங்கப்பட்டிருக்கலாம்.

2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்டின் உட்புற வசதிகள் என்னென்ன..? முதன்முறையாக வெளிவந்த ஸ்பை படங்கள்

2019 நுகர்வோர் எலக்ட்ரானிக் கண்காட்சியில் வெளியிடப்பட்ட யுகனெக்ட் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆனது இந்த 10.1 இன்ச் திரை மட்டுமில்லால் நீட்டமான ஸ்டைலை கொண்ட 12.3 இன்ச் திரை தேர்விலும் வழங்கப்படவுள்ளது. தற்சமயம் விற்பனையில் உள்ள காம்பஸ் காரில் இந்த திரை 8.4 இன்ச்சில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்டின் உட்புற வசதிகள் என்னென்ன..? முதன்முறையாக வெளிவந்த ஸ்பை படங்கள்

எஃப்சிஏ க்ரூப்பின் இந்த புதிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், அமேசான் அலெக்ஸா ஆதரவு, வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உதவி உள்ளிட்டவற்றுடன் காற்று அப்டேட்களை வழங்கும் என கூறப்படுகிறது. இந்த பெரிய திரையை தவிர்த்து பார்த்தோமேயானால், கண்ட்ரோல் பொத்தான்கள் பளபளப்பான கருப்பு நிறத்தில் மின்னுகின்றன.

2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்டின் உட்புற வசதிகள் என்னென்ன..? முதன்முறையாக வெளிவந்த ஸ்பை படங்கள்

டேஸ்போர்டில் க்ளைமேட் கண்ட்ரோல் பொத்தான்கள் வேறுப்பட்டு இடங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் புதிய ஸ்டேரிங் சக்கரத்தையும் 2021 காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் பெற்றுள்ளது. இந்த ஸ்டேரிங்கை ஏழு இருக்கை ‘டி-எஸ்யூவி' உள்ளிட்ட வருங்கால ஜீப் மாடல்களிலும் எதிர்பார்க்கலாம்.

2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்டின் உட்புற வசதிகள் என்னென்ன..? முதன்முறையாக வெளிவந்த ஸ்பை படங்கள்

இந்த சோதனை மாதிரி காரில் இல்லாவிட்டாலும் முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 360-டிகிரி கேமிரா, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் முழு எல்இடி லைட்டிங் உள்ளிட்டவற்றை இந்த 2021 மாடலின் டாப் வேரியண்ட்களில் எதிர்பார்க்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.

2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்டின் உட்புற வசதிகள் என்னென்ன..? முதன்முறையாக வெளிவந்த ஸ்பை படங்கள்

உட்புறத்தை போல் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனினால் வெளிப்புறத்திலும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை கார் ஏற்றுள்ளது. இதில் புதிய டிசைனில் முன் மற்றும் பின்புற பம்பர்கள், க்ரில் மற்றும் ஹெட்லேம்ப்கள் அடங்கும். பின்புறத்தில் டெயில்லேம்பில் சற்று மாற்று வேலை மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் டெயில்கேட்டின் டிசைனில் எந்த மாற்றமும் இல்லை.

2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்டின் உட்புற வசதிகள் என்னென்ன..? முதன்முறையாக வெளிவந்த ஸ்பை படங்கள்

இயக்கத்திற்கு சர்வதேச சந்தையில் புதிய 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினை இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் பெற்று வரவுள்ளது. இந்திய சந்தைக்கு சமீபத்தில் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்ட 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வுகள் அப்படியே வழங்கப்படவுள்ளன. இந்த இரு என்ஜின்களுடனும் ட்ரான்ஸ்மிஷனிற்கு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படவுள்ளன.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep Compass facelift interior spied for the first time
Story first published: Thursday, July 23, 2020, 1:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X