ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு ரூ.1.50 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகள்... விபரம் உள்ளே!

பண்டிகை காலத்தை முன்னிட்டு, ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு ரூ.1.50 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு ரூ.1.50 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகள்... விபரம் உள்ளே!

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகவும் பிரிமீயம் எஸ்யூவி மாடலாக ஜீப் காம்பஸ் இருந்து வருகிறது. பாரம்பரியம் மிக்க எஸயூவி தயாரிப்பு நிறுவனத்தின் முத்திரையுடன் கிடைப்பதால், இந்த எஸ்யூவி மீது வாடிக்கையாளர்களுக்கு தனி பிரியம் உள்ளது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு ரூ.1.50 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகள்... விபரம் உள்ளே!

எனினும், எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர், ஹூண்டாய் டூஸான், ஃபோக்ஸ்வேகன் டி ராக், ஸ்கோடா கரோக் என பல புதிய மாடல்களால் ஜீப் காம்பஸ் எஸ்யூவி பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த நெருக்கடியை போக்கிக் கொள்ளும் விதத்தில், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சிறப்பு சேமிப்புச் சலுகைகளை ஜீப் நிறுவனம் வழங்குகிறது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு ரூ.1.50 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகள்... விபரம் உள்ளே!

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் வேரியண்ட்டை பொறுத்து இந்த சிறப்பு சேமிப்புச் சலுகைகள் வேறுபடுகிறது. அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை சேமிப்பு பெறும் வாய்ப்பு இருக்கிறது. மேலும், டீலர்களை பொறுத்து கூடுதல் சலுகைகளையும் பெறும் வாய்ப்பு இருக்கிறது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு ரூ.1.50 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகள்... விபரம் உள்ளே!

ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு சிறப்பு மாதத் தவணைகள் கொண்ட கடன் திட்டங்களும் உள்ளன. ரூ.22.823 மாதத் தவணையிலிருந்து கடன் திட்டங்கள் உள்ளன. ஹைப்ரிட் மாதத் தவணை திட்டங்களும் உள்ளன. ஒரு லட்ச ரூபாய் கடன் தொகைக்கு ரூ.1,111 மாதத் தவணை என்ற அடிப்படையிலான கடன் திட்டங்களும் லட்சத்திற்கு ரூ.899 என்ற மாதத் தவணை கொண்ட கடன் திட்டங்களும் உள்ளன.

ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு ரூ.1.50 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகள்... விபரம் உள்ளே!

முதல் மூன்று மாதங்களுக்கு 50 சதவீதம் வரை மாதத் தவணையில் குறைவாக கட்டுவதற்கான வாய்ப்பை வழங்கும் திட்டங்களும் உள்ளன. இதனால், தற்காலிக பொருளாதார நெருக்கடியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாக அமையும். பெண் வாடிக்கையாளர்களுக்கு ஆன்ரோடு விலையில் 100 சதவீதம் கடன் வழங்கும் திட்டமும் உள்ளது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு ரூ.1.50 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகள்... விபரம் உள்ளே!

கடந்த 2017ம் ஆண்டு ஜீப் காம்பஸ் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், 3 ஆண்டுகளில் இதுவரை எந்தவொரு பெரிய அளவிலான மாற்றங்களும் இல்லாமல் தொடர்ந்து விற்பனை செய்ப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு ரூ.1.50 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகள்... விபரம் உள்ளே!

ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. ஜீப் காம்பஸ் எஸ்யூவி ரூ.16.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இருந்து கிடைக்கிறது.

Most Read Articles

மேலும்... #ஜீப் #jeep #diwali 2020
English summary
Jeep has announced special festive discounts & benefits on its popular Compass SUV in the Indian market. The Jeep Compass SUV in India will be getting diwali discounts up to Rs 1.5 lakh, along with a bunch of other benefits, EMI schemes and other finance offers.
Story first published: Friday, November 13, 2020, 11:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X