முதன்முறையாக ஸ்பெஷல் எடிசனை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் ஜீப்... அதுவும் காம்பஸ் மாடலில் இருந்து...

ஜீப் இந்தியா நிறுவனம் சந்தையில் பிரபலமான காம்பஸ் எஸ்யூவி மாடலின் புதிய நைட் ஈகிள் எடிசனை விரைவில் அறிமுகப்படுத்த ஆயத்தமாகி வருகிறது. இதற்கிடையில் இந்த ஸ்பெஷல் எடிசனின் டீசர் வீடியோவை இந்நிறுவனம் அதன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளது.

முதன்முறையாக ஸ்பெஷல் எடிசனை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் ஜீப்... அதுவும் காம்பஸ் மாடலில் இருந்து...

குறிப்பிட்ட எண்ணிக்கையில் சந்தைப்படுத்தப்படவுள்ள காம்பஸ் மாடலின் இந்த நைட் எடிசன் காரின் தற்போதைய டீசர் வீடியோ காரின் முன்பகுதியை மட்டுமே வெளிக்காட்டுகிறது. எஃப்சிஏ க்ரூப்பின் முதல் உலகளாவிய லிமிடேட் எடிசன் கார் இந்தியாவில் அறிமுகமாகுவது இதுவே முதன்முறையாகும்.

முதன்முறையாக ஸ்பெஷல் எடிசனை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் ஜீப்... அதுவும் காம்பஸ் மாடலில் இருந்து...

இந்தியாவில் விரைவில் களம் காணவுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் கார் மற்ற நாட்டு சந்தைகளில் சில மாதங்களுக்கு பின்னரே அனுப்பி வைக்கப்படவுள்ளது. இருப்பினும் இதுவரை காம்பஸ் நைட் ஈகிள் எடிசனின் இந்திய அறிமுகம் குறித்த எந்த தகவலையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை.

முதன்முறையாக ஸ்பெஷல் எடிசனை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் ஜீப்... அதுவும் காம்பஸ் மாடலில் இருந்து...

இந்த ஸ்பெஷல் எடிசன் கார் வழக்கமான காம்பஸ் மாடலில் இருந்து டிசைன் அடிப்படையில் எந்தவொரு மாற்றத்தை ஏற்கவில்லை. அப்போ என்ன தான் இரண்டிற்கு வித்தியாசம் என்று நீங்கள் கேட்பது எங்களுக்கு புரிகிறது. இரண்டும் ஸ்டைல் பாகங்களில் தான் வேறுபடுகின்றன.

முதன்முறையாக ஸ்பெஷல் எடிசனை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் ஜீப்... அதுவும் காம்பஸ் மாடலில் இருந்து...

அதாவது விரைவில் அறிமுகமாகவுள்ள ஸ்பெஷல் எடிசன் கார் பளபளப்பான கருப்பு நிறத்தில் ஸ்போர்ட்டியான க்ரில், அதே கருப்பு நிறத்தில் மேற்கூரை & ரூஃப் ரெயில்கள் மற்றும் 18 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் உள்ளிட்ட பாகங்களை கண்கவரும் கருப்பு நிறத்தில் பெற்றுள்ளது. இவற்றுடன் உட்புறமும் கருப்பு நிறத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக ஸ்பெஷல் எடிசனை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் ஜீப்... அதுவும் காம்பஸ் மாடலில் இருந்து...

இதன் கருப்பு கேபினில் இருக்கை உள்பட மற்றவை அனைத்தும் கருப்பு பெசல்ஸ் உடன் டச்னோ லெதரால் வடிவமைக்கப்பட்டுள்ளன. இரு-நிலை க்ளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம், கீலெஸ் எண்ட்ரீ, புஷ்-பொத்தான் ஸ்டார்ட்-ஸ்டாப், தொடுத்திரை சிஸ்டம் மற்றும் யுகனெக்டட் இணைப்பு சிஸ்டம் உள்ளிட்டவை இந்த ஸ்பெஷல் எடிசன் காரில் எதிர்பார்க்கப்படும் வசதிகளாகும்.

முதன்முறையாக ஸ்பெஷல் எடிசனை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் ஜீப்... அதுவும் காம்பஸ் மாடலில் இருந்து...

இவற்றுடன் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் நிச்சயம் எதிர்பார்க்கலாம். ஸ்பெஷல் எடிசன் என்பதை காட்டும் விதமாக நைட் ஈகிள் முத்திரை காரின் பின்புற பூட் லிட் மற்றும் பக்கவாட்டு ஃபெண்டர்களில் பொருத்தப்பட்டுள்ளன. மற்றப்படி என்ஜின் அமைப்பில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.

முதன்முறையாக ஸ்பெஷல் எடிசனை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் ஜீப்... அதுவும் காம்பஸ் மாடலில் இருந்து...

இதனால் காம்பஸ் மாடலில் ஜீப் நிறுவனம் வழங்கிவரும் 1.4 லிட்டர் டர்போசார்டு பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வுகள் தான் இந்த லிமிடேட் எடிசன் காரிலும் தொடரவுள்ளன. இதில் பெட்ரொல் என்ஜின் 160 பிஎச்பி பவரையும், டீசல் என்ஜின் 171 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளது.

முதன்முறையாக ஸ்பெஷல் எடிசனை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் ஜீப்... அதுவும் காம்பஸ் மாடலில் இருந்து...

இந்த இரு என்ஜின்களுடனும் ட்ரான்ஸ்மிஷனிற்கு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. பெட்ரோல் என்ஜினிற்கு 7-ஸ்பீடு ட்யூல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும், டீசல் என்ஜினிற்கு 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் கூடுதல் தேர்வாக கொடுக்கப்பட்டு வருகின்றன.

Most Read Articles

மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep Night Eagle Limited Edition Teased
Story first published: Wednesday, July 29, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X