விரைவில் வருகிறது 2020 காம்பஸ் நைட் ஈகிள் ஸ்பெஷல் எடிசன்... டீசர் மூலம் உறுதிப்படுத்திய ஜீப்...

ஜீப் ப்ராண்ட் காம்பஸ் மாடலின் உலகளாவிய லிமிடேட் எடிசனை வெளியிடுவது இதுவே முதன்முறையாகும். இதன் காரணமாக புதிய ஈகிள் ஸ்பெஷல் எடிசன் கார் சில வெளிநாட்டு சந்தைகளுக்கும் செல்லவுள்ளது.

கூடுதலாக வழங்கப்படும் அம்சங்களில் ஜீப் காம்பஸ் நைட் எடிசன் ஆனது காம்பஸ் மாடலுக்கு இதற்கு முன்னர் வழங்கப்பட்ட ஸ்பெஷல் எடிசனை தான் பெருமளவில் ஒத்து காணப்படவுள்ளது. காம்பஸின் முந்தைய ஸ்பெஷல் எடிசன் பெரும்பான்மையாக பேனல்களை கருப்பு நிறத்தில் பெற்றிருந்தது.

விரைவில் வருகிறது 2020 காம்பஸ் நைட் ஈகிள் ஸ்பெஷல் எடிசன்... டீசர் மூலம் உறுதிப்படுத்திய ஜீப்...

இதில் 18 இன்ச்சில் பளபளப்பான கருப்பு நிற அலாய் சக்கரங்களும் அடங்கும். இவற்றுடன் 8.4 இன்ச்சில் யு-கனெக்ட் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் (ஃபேஸ்லிஃப்ட் காம்பஸ் மாடல் இதனை விடவும் அப்டேட்டான சிஸ்டத்தை பெற்றுள்ளது), பளிச்சிடும் தையல்களுடன் ஸ்பெஷல் டெக்னோ லெதர் உள்ளமைவையும் முந்தைய காம்பஸ் ஸ்பெஷல் எடிசன் கார் கொண்டிருந்தது.

விரைவில் வருகிறது 2020 காம்பஸ் நைட் ஈகிள் ஸ்பெஷல் எடிசன்... டீசர் மூலம் உறுதிப்படுத்திய ஜீப்...

இதனால் 2020 காம்பஸ் நைட் ஈகிள் லிமிடேட் எடிசனும் இதே பளபளப்பான கருப்பு நிற ஹைலைட்களுடன் ஸ்பெஷல் வழங்கல்களை பெற்றிருக்கும். தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் காரின் பின்புற டெயில்கேட்டில் பொருத்தப்பட்டுள்ள நைட் ஈகிள் எடிசனிற்கான முத்திரையை மட்டுமே வெளிக்காட்டுகிறது.

விரைவில் வருகிறது 2020 காம்பஸ் நைட் ஈகிள் ஸ்பெஷல் எடிசன்... டீசர் மூலம் உறுதிப்படுத்திய ஜீப்...

ட்ரைவிங் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் போன்ற கூடுதல் வசதிகளையும் இந்த 2020 ஸ்பெஷல் எடிசன் காரில் எதிர்பார்க்கலாம். ஜீப் ப்ராண்ட்டின் பிரபலமான எஸ்யூவி மாடலாக விளங்கும் காம்பஸ், இந்த வருட துவக்கத்தில் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை பெற்றிருந்தது. இந்த வகையில் இதன் முன்புற பகுதி மிகவும் நுட்பமான மாற்றங்களை ஏற்றுள்ளது.

விரைவில் வருகிறது 2020 காம்பஸ் நைட் ஈகிள் ஸ்பெஷல் எடிசன்... டீசர் மூலம் உறுதிப்படுத்திய ஜீப்...

மேலும் புதிய 1.3 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினையும் 1.4 லிட்டர் யூனிட்டிற்கு மாற்றாக பெற்று வந்துள்ளது. இந்த புதிய டர்போசார்ஜ்டு என்ஜின் அதிகப்பட்சமாக 120 பிஎச்பி மற்றும் 150 பிஎச்பி என இரு விதமான ஆற்றல் நிலைகளில் கிடைக்கிறது. இவற்றில் என்ஜினின் டார்க் திறன் 270 என்எம் ஆக உள்ளது.

விரைவில் வருகிறது 2020 காம்பஸ் நைட் ஈகிள் ஸ்பெஷல் எடிசன்... டீசர் மூலம் உறுதிப்படுத்திய ஜீப்...

மிகவும் சிறியதாக அளவு குறைக்கப்பட்டுள்ள இந்த என்ஜின் அமைப்பு, தற்சமயம் விற்பனையாகி கொண்டிருக்கும் யூனிட்டை காட்டிலும் 30 சதவீதம் வரையில் கூடுதலான எரிபொருள் திறனை வழங்கும் ஆற்றல் கொண்டது. இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு ட்யூல்-க்ளட்ச் என இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன.

Most Read Articles

மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep Compass Night Eagle Limited Edition Teaser
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X