புதிய ஜீப் காம்பஸ் 7-இருக்கை காருக்கு டீசல் என்ஜின் தேர்வு மட்டும் தான்... உறுதிசெய்த பிரேசில் ஊடகம்

இந்தியாவில் அடுத்த ஆண்டு இறுதியில் அறிமுகமாகலாம் என கூறப்படும் ஜீப் காம்பஸ் மாடலின் 7-இருக்கை வெர்சன் ஆரம்பத்தில் வெறும் டீசல் என்ஜின் தேர்வுடன் மட்டும் தான் அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதிய ஜீப் காம்பஸ் 7-இருக்கை காருக்கு டீசல் என்ஜின் தேர்வு மட்டும் தான்... உறுதிசெய்த பிரேசில் ஊடகம்

இந்த தகவலை ஆட்டோசெக்ரெடோஸ் என்ற பிரேசிலியன் செய்தி தளம் ஒன்று வெளியிட்டுள்ளது. இதில் பிரேசில் நாட்டு சந்தைக்கு என்று தான் குறிப்பிடப்பட்டிருந்தாலும், காம்பஸ் 7-இருக்கை மாடலின் இந்திய வெர்சனும் டீசல் என்ஜினை மட்டுமே கொண்டிருக்கும்.

புதிய ஜீப் காம்பஸ் 7-இருக்கை காருக்கு டீசல் என்ஜின் தேர்வு மட்டும் தான்... உறுதிசெய்த பிரேசில் ஊடகம்

பிரேசில் நாட்டில் சோதனையில் உட்படுத்தப்பட்டு வரும் இந்த 7-இருக்கை டீசல் மாடல் இந்தியா உள்பட மற்ற அனைத்து நாட்டு சந்தைக்களுக்கும் முன்பாக பிரேசிலில் அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே அறிமுகமாகவுள்ளது. காம்பெக்ட் எஸ்யூவி மாடலாக இருந்தாலும் இந்தியா சந்தைக்காக இந்த கார் ஆஃப்-ரோடு டிஎன்ஏ-வையும் கொண்டிருக்கும்.

புதிய ஜீப் காம்பஸ் 7-இருக்கை காருக்கு டீசல் என்ஜின் தேர்வு மட்டும் தான்... உறுதிசெய்த பிரேசில் ஊடகம்

க்ராண்ட் காம்பஸ் என அழைக்கப்படும் இந்த 7-இருக்கை வெர்சன் காரானது பெரும்பான்மையான டிசைன் அமைப்புகளை தனது 5-இருக்கை வெர்சனில் இருந்து தான் பெற்றுள்ளது. காம்பஸ் 5-இருக்கை மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் சமீபத்தில் தான் வெளிப்புறத்தில் மிகவும் குறைவான அளவில் அப்டேட்களுடன் உலகளவில் அறிமுகமானது.

புதிய ஜீப் காம்பஸ் 7-இருக்கை காருக்கு டீசல் என்ஜின் தேர்வு மட்டும் தான்... உறுதிசெய்த பிரேசில் ஊடகம்

புதிய 7-இருக்கை மாடலின் மூன்றாவது இருக்கை வரிசையானது D-பில்லர் வரையில் 120மிமி-ல் பெரிய பின்புற குவார்டர் கண்ணாடியை பெறவுள்ளது. இதன் காரணமாக டெயில்கேட் மற்றும் டெயில்லேம்ப்களின் வடிவமும் திருத்தியமைக்கப்படவுள்ளது.

புதிய ஜீப் காம்பஸ் 7-இருக்கை காருக்கு டீசல் என்ஜின் தேர்வு மட்டும் தான்... உறுதிசெய்த பிரேசில் ஊடகம்

காம்பஸ் 5-இருக்கை மாடலுக்கு வழங்கப்பட்டுள்ள ஃபேஸ்லிஃப்ட் தோற்றம் மூன்று-இருக்கை வரிசை க்ராண்ட் காம்பஸ் மற்றும் அடுத்த ஆண்டு இறுதியில் உலக சந்தையில் களமிறங்கவுள்ள ஜீப்பின் புதிய சப்-4 மீட்டர் எஸ்யூவி உள்ளிட்டவற்றிற்கும் தொடரவுள்ளது.

புதிய ஜீப் காம்பஸ் 7-இருக்கை காருக்கு டீசல் என்ஜின் தேர்வு மட்டும் தான்... உறுதிசெய்த பிரேசில் ஊடகம்

இந்திய வாடிக்கையாளர்களை கவர ஜீப் நிறுவனத்திற்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் காம்பஸ் 7-இருக்கை வெர்சன் காருக்கு எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் கிராவிட்டாஸ் போன்ற இந்தியாவின் வருங்கால அறிமுக மாடல்கள் போட்டியாக இருக்கும்.

புதிய ஜீப் காம்பஸ் 7-இருக்கை காருக்கு டீசல் என்ஜின் தேர்வு மட்டும் தான்... உறுதிசெய்த பிரேசில் ஊடகம்

காம்பஸ் 7-இருக்கை வெர்சன் காரில் 2.0 லிட்டர் மல்டிஜெட் II 4-சிலிண்டர் டீசல் என்ஜின் பிஎஸ்6 தரத்தில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 170 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் இந்த கார் ஆல்-வீல்-ட்ரைவ் சிஸ்டத்தையும் தேர்வாக பெறவுள்ளது.

புதிய ஜீப் காம்பஸ் 7-இருக்கை காருக்கு டீசல் என்ஜின் தேர்வு மட்டும் தான்... உறுதிசெய்த பிரேசில் ஊடகம்

வழக்கமான காம்பஸ் மாடலுடன் ஒப்பிடும்போது கூடுதல் பாகங்களை பெறவுள்ள புதிய 7-இருக்கை வெர்சனின் விலை டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டேவியர் மாடல்களுக்கு இணையாக ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.26 லட்சம் வரையிலான விலையினை பெறலாம்.

Note: Images are representative purpose

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
Seven-Seater Jeep Compass To Only Carry Diesel Engine.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X