ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் விபரங்கள் வெளியானது!

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலிலும் வர இருப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த புதிய மாடல் குறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் விபரங்கள் வெளியானது!

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் பல சூப்பர் ஹிட் மாடல்கள் அடுத்தடுத்து களமிறங்கி வருகின்றன. இந்த ரகத்தில் ஜீப் காம்பஸ், டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர், மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஹூண்டாய் டூஸான் உள்ளிட்ட பல மாடல்களுக்கு இடையே கடும் சந்தைப் போட்டி நிலவுகிறது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் விபரங்கள் வெளியானது!

எனினும், பெரும்பாலான மாடல்கள் 5 சீட்டர் மாடல்களாவே இருக்கின்றன. இந்த ரகத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி மட்டும் 7 சீட்டர் மாடலாக கூடுதல் மதிப்பை பெற்றிருக்கிறது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் விபரங்கள் வெளியானது!

இதனை மனதில் வைத்து, எம்ஜி மோட்டார் நிறுவனம் ஹெக்டர் ப்ளஸ் மாடலையும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹாரியர் அடிப்படையிலான க்ராவிட்டாஸ் எஸ்யூவியையும், ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் க்ரெட்டா 7 சீட்டர் மாடலையும் களமிறக்க ஆயத்தமாகி வருகின்றன.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் விபரங்கள் வெளியானது!

இதனால், இந்த ரகத்தில் அதிக மதிப்பை தக்க வைத்து வரும் ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு சற்றே கூடுதல் பட்ஜெட்டில் 7 சீட்டர் தேர்வு வழங்கப்படுவதால், வேறு பக்கம் வாடிக்கையாளர்கள் கவனம் திரும்பிவிடும்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் விபரங்கள் வெளியானது!

எனவே, ஜீப் நிறுவனமும் காம்பஸ் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலை அறிமுகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட ஜீப் காம்பஸ் எஸ்யூவி இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுகுறித்து நாம் ஏற்கனவே செய்திகளை வழங்கி இருக்கிறோம்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் விபரங்கள் வெளியானது!

இந்த நிலையில், பிரேசில் நாட்டு சந்தையில் ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஆட்டோமொபைல் தளம் ஒன்றில் தகவல் வெளியாகி இருக்கிறது. ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலானது க்ராண்ட் காம்பஸ் என்ற பெயரில் வர இருப்பதும் தெரிய வந்துள்ளது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் விபரங்கள் வெளியானது!

எனவே, இந்தியாவிலும் ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலானது 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் 5 சீட்டர் மாடலில் இருந்து சற்று வேறுபட்ட டிசைன் அம்சங்கள் கிராண்ட் காம்பஸ் எஸ்யூவியில் இடம்பெறும்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் விபரங்கள் வெளியானது!

குறிப்பாக, மூன்றாவது வரிசை இருக்கை அமைக்கும் விதமாக, காரின் பி பில்லரின் டிசைன் மாறுபடுவதுடன் கூடுதலாக டி பில்லர் மற்றும் சிறிய கண்ணாடி ஜன்னல் கூடுதலாக இடம்பெறும். அதேநேரத்தில், முன்புற மற்றும் பின்புற டிசைனில் அதிக மாற்றங்கள் இருக்காது என்று நம்பலாம்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் விபரங்கள் வெளியானது!

மேலும், மூன்றாவது வரிசை இருக்கை பயணிகளுக்கு போதிய இடவசதியை வழங்கும் விதத்தில், காம்பஸ் 5 சீட்டர் மாடலைவிட 7 சீட்டர் மாடலின் நீளம் சற்றே அதிகரிக்கப்பட்டு இருக்கும். இந்த எஸ்யூவியில் 110 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி இருக்கும். இருக்கைகளை மடக்கினால் 700 லிட்டர் கொள்திறன் கொண்ட இடவசதியை பெற முடியும்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் விபரங்கள் வெளியானது!

ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் கவர்ச்சிகரமான ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், எல்இடி விளக்குகள், மேலும் வலிமையான பம்பர் அமைப்புடன் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. உட்புறத்திலும் சில மாறுதல்களுடன் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கும்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் விபரங்கள் வெளியானது!

இந்தியாவில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் தக்க வைக்கப்படும். மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் இந்த கார் கிடைக்கும்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் விபரங்கள் வெளியானது!

இந்தியாவில் ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, சில மாதங்களில் 7 சீட்டர் மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
US based SUV maker, Jeep is working on seven-seater version of the Compass SUV and it will be launched in the Indian market by next year.
Story first published: Wednesday, April 29, 2020, 15:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X