புதிய சப்-4 மீட்டர் எஸ்யூவி காருக்காக ஜீப் ரெனிகேட் மாடல் இந்தியாவில் சோதனை...

இந்திய வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்த்திருக்கும் ஜீப் மாடல்களுள் ஒன்றாக உள்ள ரெனிகேட் கோவா-மங்களூர் நெடுங்சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய சப்-4 மீட்டர் எஸ்யூவி காருக்காக ஜீப் ரெனிகேட் மாடல் இந்தியாவில் சோதனை...

ஜீப் ரெனிகேட் மாடலின் இந்த சோதனை ஓட்ட படங்களை விவேக் ரவீந்திரா என்பவர் 4X4 இந்தியா என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் கார் மஹாராஷ்டிரா மாநிலத்தின் நம்பர் ப்ளேட் உடன் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் உள்ளது.

புதிய சப்-4 மீட்டர் எஸ்யூவி காருக்காக ஜீப் ரெனிகேட் மாடல் இந்தியாவில் சோதனை...

இருப்பினும் வழக்கமான பாக்ஸ் வடிவத்தில் 7-ஸ்லாட் க்ரில் உடன் வட்ட வடிவிலான ஹெட்லேம்ப் அமைப்பை இந்த சோதனை ரெனிகேட் மாடல் கொண்டிருப்பதை அறிய முடிகிறது. இவையே இது ஜீப் நிறுவனத்தின் ரெனிகேட் எஸ்யூவி மாடல் என்பதை அடையாளப்படுத்துகின்றன.

புதிய சப்-4 மீட்டர் எஸ்யூவி காருக்காக ஜீப் ரெனிகேட் மாடல் இந்தியாவில் சோதனை...

ஐரோப்பிய நாடுகளில் ஏற்கனவே விற்பனையில் உள்ள இந்த எஸ்யூவி மாடலில் சதுர வடிவிலான சக்கர அச்சுகள், நேரான பெல்ட்லைன் மற்றும் 17-இன்ச் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய பாகங்களை இந்தியாவில் விற்பனையில் உள்ள ஜீப் காம்பஸ் மாடலிலும் பார்க்க முடியும்.

புதிய சப்-4 மீட்டர் எஸ்யூவி காருக்காக ஜீப் ரெனிகேட் மாடல் இந்தியாவில் சோதனை...

அதேபோல் காரின் பின்புறத்தில் உள்ள சதுர வடிவிலான எல்இடி டெயில்லைட்களும் நமது நாட்டு சந்தைக்கு பரீட்சயமானதாகும். ஆனால் எப்படியிருந்தாலும் ரெனிகேட் மாடல் இந்தியாவிற்கு கொண்டுவரப்படாது என்றாலும், ஜீப் நிறுவனம் இந்திய சந்தைக்காக சப்-4 மீட்டர் எஸ்யூவி மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

புதிய சப்-4 மீட்டர் எஸ்யூவி காருக்காக ஜீப் ரெனிகேட் மாடல் இந்தியாவில் சோதனை...

இந்த எஸ்யூவி மாடல் கிட்டத்தட்ட ரெனிகேட் காரின் டிசைனை ஒத்திருக்கும். பிறகு ஏன் ரெனிகேட் மாடல் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளது என்றால், இதில் உள்ள சஸ்பென்ஷன் மற்றும் என்ஜின் போன்ற பாகங்கள் தான் ஜீப்பின் புதிய சப்-4 மீட்டர் எஸ்யூவியில் பொருத்தப்படவுள்ளன.

புதிய சப்-4 மீட்டர் எஸ்யூவி காருக்காக ஜீப் ரெனிகேட் மாடல் இந்தியாவில் சோதனை...

அவற்றை இந்திய சாலையில் சோதனை செய்யவே ரெனிகேட் மாடல் சோதனை காராக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகையில் இந்த எஸ்யூவி மாடலில் 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படலாம். ஆனால் ஜீப்பின் புதிய சப்-4 மீட்டர் எஸ்யூவியின் அறிமுகத்திற்கு இன்னும் அதிக நாட்கள் உள்ளதால் இந்த என்ஜின் தான் பொருத்தப்படும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது.

புதிய சப்-4 மீட்டர் எஸ்யூவி காருக்காக ஜீப் ரெனிகேட் மாடல் இந்தியாவில் சோதனை...

இந்த சப் காம்பெக்ட் எஸ்யூவி மாடல் 2022ல் தான் அறிமுகமாகவுள்ளதாக எஃப்சிஏ குழுமத்தின் இந்தியாவிற்கான தலைவரான பார்த்தா தத்தா ஏற்கனவே கூறியிருந்தார். இதனால் இதுபோன்ற சோதனை கார்களை ஜீப் ப்ராண்ட்டில் இருந்து இனி அடிக்கடி எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep Renegade Spotted Testing In India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X