Just In
- 28 min ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 1 hr ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 1 hr ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
- 2 hrs ago
இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா? இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்!!
Don't Miss!
- Movies
பிக்பாஸ் வீட்டை விட்டு வந்த பிறகு ரம்யாவிடம் மறைமுகமாக காதலை சொல்லும் சோம்? இன்ஸ்டா பக்கத்த பாருங்க!
- News
எல்லாம் கூடி.. வெண்ணை திரண்டு வரும்போது.. இப்படி பானையை போட்டு உடைக்கிறாரே பாரதி!
- Education
8-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை!
- Lifestyle
நாவூற வைக்கும்... பஞ்சாபி மட்டன் மசாலா
- Sports
ரவி சாஸ்திரி கிடக்காரு.. உங்க இஷ்டம் போல ஆடுங்க.. சிட்னி டெஸ்டில் தெறிக்கவிட்ட இளம் வீரர்!
- Finance
பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பழமை மாறாத தோற்றத்துடன் தயாராகும் 2021 ஜீப் வாகோனீர்... புதிய டீசர் படம் வெளியீடு...
ஜீப் பிராண்ட் நிறுவனம் அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரைவில் சந்தைக்கு வரவுள்ள 2021 வாகோனீர் காரின் புதிய டீசர் படத்தை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தெரியவந்துள்ள காரை பற்றிய விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜீப் வாகோனீரின் செப்டம்பர் 3ஆம் தேதி உலகளாவிய அறிமுகத்திற்கு முன்னதாக வெளியாகியுள்ள இந்த டீசர் படங்கள் காரின் வெளிப்புற அவுட்லைன் மற்றும் வடிவம் எவ்வாறு இருக்கும் என்பதை வெளிக்காட்டுகின்றன.

மேலும் இதன் மூலம் பார்க்கும்போது இந்த புதிய மாடல் ஜீப் க்ராண்ட் செரோக்கியுடன் பெரிய அளவில் ஒத்திருக்கும் என்பதையும் அறிய முடிகிறது. மற்றப்படி அறிமுகம் குறித்த வேறெந்த தகவலும் இந்த டீசர் படத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் நமக்கு புதிய ஜீப் வாகோனீர் செப்டம்பர் 3ஆம் தேதி உலகளவில் அறிமுகமாகவுள்ள விஷயம் ஏற்கனவே தெரியும்.

செரோக்கியுடன் தோற்றத்தில் பெரிய அளவில் ஒத்துபோனாலும், வாகோனீர் மாடலும் தனது அடையாளத்திற்காக சில டிசைன் பாகங்களை கொண்டுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்மென்றால், வாகனத்தின் முன்பக்க க்ரில்.

1965 வாகோனீர் உடன் ஒத்த டிசைனில் தற்போது வடிவமைக்கப்பட்டு இந்த 2021 மாடலில் பொருத்தப்பட்டுள்ள இந்த க்ரில் தான் 2018 காட்சிப்படுத்தப்பட்ட வாகோனீர் ரோடுட்ரிப் கான்செப்ட் மாடலில் வழங்கப்பட்டு இருந்தது. இந்த க்ரில் அமைப்பில் பழமையான வாகோனீர் மாடல்களில் உள்ளதை போன்று க்ரோம் கொடுக்கப்பட்டுள்ளது.

மற்றப்படி 2021 வாகோனீரின் உட்புற கேபினில் வழங்கப்பட்டுள்ள அம்சங்கள் பற்றி பெரிய அளவில் எதையும் அறிய முடியவில்லை. இருப்பினும், ஜீப் நிறுவனம் கடைசியாக வெளியிட்டு இருந்த இந்த காரின் உட்புற படங்கள் மூலம் ரோட்டரி க்னாப், 12 இன்ச்சில் சட்டகம் இல்லாத இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்ட சில வசதிகள் இந்த காரின் கேபினில் இருக்கும் என்பதை அறிந்திருந்தோம்.

இந்த 2021 மாடலில் பொருத்தப்பட்டுள்ள என்ஜின் அமைப்புகள் குறித்த விபரங்கள் தற்போதைக்கு கிடைக்கவில்லை. ஜீப் வாகோனீர் அறிமுகமாகும் அதே சமயத்தில் வெளிவரவுள்ள ராம் 1500 ஹைப்ரீட் என்ஜின் அமைப்பை பெற்றுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீப் நிறுவனம் வாகோனீர் மாடலை வாகோனீர் மற்றும் நீண்ட வீல்பேஸ் கொண்ட க்ராண்ட் வாகோனீர் என்ற இரு விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தவுள்ளது. வாகோனீரின் தயாரிப்பு பணிகள் 2021ஆம் ஆண்டின் இரண்டாம் கால்பகுதியில் துவங்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.