ஜீப் வ்ராங்க்லரில் புதியதாக ப்ளக்-இன் ஹைப்ரீட் என்ஜின்... இந்தியாவிற்கு கொண்டுவரப்படுமா...?

உலகளவில் பிரபலமான ஜீப் வ்ராங்க்லர் மாடலில் புதிய ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட் வருகிற டிசம்பர் மாதம் முதலாவதாக அமெரிக்காவில் அறிமுகமாகவுள்ளது. இதற்கு முன்னதாக இந்த ஹைப்ரீட் காரின் புதிய டீசர் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஜீப் வ்ராங்லரில் புதியதாக ப்ளக்-இன் ஹைப்ரீட் என்ஜின்... இந்தியாவிற்கு கொண்டுவரப்படுமா...?

ஜீப் பிராண்டின் அதிகாரப்பூர்வ யுடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் கார் அதன் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களில் கொண்டிருக்கும் தோற்றத்தில் தான் காட்சியளிக்கிறது.

ஜீப் வ்ராங்லரில் புதியதாக ப்ளக்-இன் ஹைப்ரீட் என்ஜின்... இந்தியாவிற்கு கொண்டுவரப்படுமா...?

அதேபோல் வ்ராங்லரின் 4-கதவு வெர்சன் மட்டுமில்லாமல் அதன் இரு-கதவு வெர்சனும் புதிய ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட்டை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஹைப்ரீட் வேரியண்ட்களில் முக்கிய மாற்றமாக A-பில்லருக்கு வலது புறத்திற்கு கீழே சார்ஜிங் துளை வழங்கப்படவுள்ளது.

இது மட்டுமில்லாமல் புதியதாக 4xe முத்திரையும் நீல நிறத்தில் பொருத்தப்பட்டிருக்கும். மற்றப்படி இந்த புதிய ப்ளக்-இன் என்ஜின் அமைப்பு குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்க பெறவில்லை.

ஜீப் வ்ராங்லரில் புதியதாக ப்ளக்-இன் ஹைப்ரீட் என்ஜின்... இந்தியாவிற்கு கொண்டுவரப்படுமா...?

நமக்கு தெரிந்தவரை வ்ராங்லர் ஹைப்ரீட் வேரியண்ட்டில் 3.6 லிட்டர் வி6 வேரியண்ட் தான் புதிய ப்ளக்-இன் அமைப்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை 2.0 லிட்டர், 4-சிலிண்டர் என்ஜினை ஹைப்ரீட் அமைப்பாக மாற்றினால் நன்றாக இருக்கும் என ஜீப் நிறுவனம் கருதினால், அது வ்ராங்லரின் இந்திய வெர்சனுக்கு சாதகமாக இருக்கும்.

ஜீப் வ்ராங்லரில் புதியதாக ப்ளக்-இன் ஹைப்ரீட் என்ஜின்... இந்தியாவிற்கு கொண்டுவரப்படுமா...?

ஏனெனில் இந்தியாவில் ஜீப் வ்ராங்லர் 2.0 லிட்டர் என்ஜின் உடன் தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் வ்ராங்லர் ரூபிகான் காரையும் ஜீப் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் விற்பனைக்கு கொண்டுவந்து விற்று தீர்த்துவிட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

உலகளவில் பிரபலமான ஆஃப்-ரோடிற்கு ஏற்ற எஸ்யூவி மாடலாக விளங்கும் ஜீப் வ்ராங்லர் இந்தியாவில் சிபியூ முறையில் 4-கதவு வெர்சனில் விற்பனை செய்யப்படுகிறது. வ்ராங்லரின் புதிய ப்ளக்-இன் ஹைப்ரீட் வெர்சன் இந்தியாவில் அறிமுகமாகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep Wrangler 4xe PHEV Teased Ahead Of December Launch
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X