இந்தியாவின் முதல் ஜீப் ரேங்லர் ரூபிகான் மாடல்... பெங்களுருவில் டெலிவிரி...!

இந்தியாவில் ஜீப் ரேங்லர் ரூபிகான் மாடலுக்கான டெலிவிரி பணிகள் துவங்கியுள்ளன. இதன்படி பெங்களூருவில் முதல் ரேங்லர் ரூபிகான் ஜீப் மாடல் டெலிவிரி செய்யபட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவின் முதல் ஜீப் ரேங்லர் ரூபிகான் மாடல்... பெங்களுருவில் டெலிவிரி...!

ஜீப் நிறுவனம் ரேங்லர் ரூபிகான் மாடலை கடந்த மார்ச் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி இருந்தது. அறிமுகமான இரண்டு வாரங்களுக்கு உள்ளாகவே இதன் முதல் பேட்ஜ் முழுவதும் விற்று தீர்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஜீப் மாடலின் டெலிவிரிகள் நாடு முழுவதும் துவங்கியுள்ளன.

இந்தியாவின் முதல் ஜீப் ரேங்லர் ரூபிகான் மாடல்... பெங்களுருவில் டெலிவிரி...!

முன்னதாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே இதன் டெலிவிரிகள் துவங்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் கொரோனாவினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால் இதன் டெலிவிரி பணிகளில் தொய்வு ஏற்பட்டுவிட்டது.

MOST READ: காலாவதியான வாகன ஆவணங்களுக்கு மீண்டும் கால நீட்டிப்பு வழங்கியது மத்திய அரசு!

இந்தியாவின் முதல் ஜீப் ரேங்லர் ரூபிகான் மாடல்... பெங்களுருவில் டெலிவிரி...!

ஆனால் தற்போது எப்படியோ ஒரு வழியாக பெங்களூருவில் டெலிவிரியை துவங்கியுள்ள இந்த மாடலை வீட்டிற்கு ஓட்டி செல்ல வாடிக்கையாளர்கள் தயாராகி வருகின்றனர். சிபியூ முறையில் இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட்டு வரும் ரேங்லர் ரூபிகான் மாடலின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.68.94 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் ஜீப் ரேங்லர் ரூபிகான் மாடல்... பெங்களுருவில் டெலிவிரி...!

ஜீப் நிறுவனத்தின் இந்த எஸ்யூவி மாடல் 3-கதவு மற்றும் 5-கதவு என்ற இரு விதமான வேரியண்ட்களில் கிடைக்கும். ஆனால் இந்திய வாடிக்கையாளர்கள் நடைமுறைக்கு மிகவும் ஏற்றதாக உள்ளதால் இதன் 5-கதவு வெர்சனையே அதிகம் தேர்வு செய்கின்றனர்.

MOST READ: இதைதான் எதிர்பார்த்தோம்... உலகின் பிரச்னைக்கு முடிவு கட்டியது சீன நிறுவனம்! அதுவும் குறைவான விலையில்

இந்தியாவின் முதல் ஜீப் ரேங்லர் ரூபிகான் மாடல்... பெங்களுருவில் டெலிவிரி...!

ரேங்லர் ரூபிகான் மாடலில் இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 265 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் இந்த பெட்ரோல் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் ஜீப் ரேங்லர் ரூபிகான் மாடல்... பெங்களுருவில் டெலிவிரி...!

இந்த ட்ரான்ஸ்மிஷன் அமைப்பு என்ஜினின் ஆற்றலை ராக்ட்ராக் 4X4 ஆல்-வீல் ட்ரைவ் சிஸ்டத்தின் மூலமாக அனைத்து சக்கரங்களுக்கும் வழங்கும். வழக்கமான ஜீப் ரேங்லர் மாடலானது பெரும்பாலான நாடுகளில் ஆப்-ரோட்டிற்கு ஏற்ற வாகனமாக விற்பனையில் உள்ளது.

MOST READ: இது 5 ஸ்டார் ஹோட்டல் அல்ல... மோடிக்காக வாங்கப்படும் புதிய விமானம்! விலையை பாத்து மயக்கம் போட்றாதீங்க

இந்தியாவின் முதல் ஜீப் ரேங்லர் ரூபிகான் மாடல்... பெங்களுருவில் டெலிவிரி...!

இருப்பினும் இந்த ரூபிகான் மாடல், முழு-நேர டார்க் மேலாண்மை அமைப்பு, 4:1 4-குறைந்த வரம்பு விகிதத்துடன் 2-ஸ்பீடு ட்ரான்ஸ்பர் கேஸ் மற்றும் எலக்ட்ரிக் மூலமாக பூட்டக்கூடிய டிஃப்ரென்ஷியல் & சக்கர ஆர்டிகுலேஷனை அனுமதிக்கும் எலக்ட்ரிக்கல்லி கண்ட்ரோல்டு ஸ்வே பார்கள் உள்ளிட்டவைகளால் செயல்திறனில் உச்ச நிலையை கொண்டுள்ளது.

ஜீப் ரேங்லர் உடன் ஒப்பிடும்போது ரூபிகான் வெர்சனானது சிறப்பான க்ரவுண்ட் கிளியெரென்ஸ் மற்றும் உகந்த வளைவு மற்றும் புறப்படும் கோணங்களை வழங்கும். இவை மட்டுமின்றி ரேங்லரின் இந்த புதிய வெர்சனில் வழங்கப்பட்டுள்ள அதிகப்படியான வசதிகள் இந்த காரை மிகவும் பாதுகாப்பான மற்றும் சவுகரியமான வாகனமாக விளங்க வைக்கின்றன.

MOST READ: ஜூன் 11ல் இந்தியாவில் அறிமுகமாகும் மூன்றாம் தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ்6 மாடல்...

இந்தியாவின் முதல் ஜீப் ரேங்லர் ரூபிகான் மாடல்... பெங்களுருவில் டெலிவிரி...!

இந்த வசதிகளில் குறிப்பிட்ட சொல்லும்படியாக எலக்ட்ரானிக் ரோல் மைடிகேஷன், ட்ரைலர் ஸ்வே கண்ட்ரோல், பின்புற பார்க்கிங் கேமிரா, பார்க் அசிஸ்ட், டயரின் அழுத்ததை அளவிடும் சிஸ்டம், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் 8-இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், கீலெஸ் எண்ட்ரீ, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், இரு-நிலை க்ளைமேட் கண்ட்ரோல் போன்றவை உள்ளன.

Image Courtesy: K.H.T Prime And Tauseef See

Most Read Articles

மேலும்... #ஜீப் #jeep
English summary
India’s First Jeep Wrangler Rubicon Delivered In Bangalore
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X