வி8 எஞ்சினுடன் வரும் அதிசக்திவாய்ந்த புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் டீசர்கள் வெளியீடு!

அதிசக்திவாய்ந்த வி8 எஞ்சினுடன் புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவி வருவதை உறுதிப்படுத்தும் விதமாக புதிய டீசர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் வி8 எஞ்சின் மாடல் டீசர்கள் வெளியீடு!

பிரிமீயம் வகை ஆஃப்ரோடு எஸ்யூவி மார்க்கெட்டில் ஜீப் ரேங்லர் எஸ்யூவிக்கு தனி இடம் உள்ளது. உலக அளவில் ஆஃப்ரோடு பிரியர்களின் கனவு வாகனங்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த எஸ்யூவியில் அதிசெயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வு வழங்கப்பட உள்ளது.

புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் வி8 எஞ்சின் மாடல் டீசர்கள் வெளியீடு!

அதாவது, வி8 எஞ்சின் தேர்வுடன் புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவி வர இருக்கிறது. இதற்காக புதிய டீசர்களை ஜீப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் வி8 எஞ்சின் மாடல் டீசர்கள் வெளியீடு!

அதில், உற்பத்திக்கு செல்வதற்கு முந்தைய நிலையில் உள்ள ஜீப் ரேங்லர் வி8 மாடலின் கான்செப்ட் டீசரில் இடம்பெற்றுள்ளது. ரேங்லர் வி8 மாடல் உற்பத்திக்கு செல்வதை உறுதிப்படுத்தும் டீசர் ஒன்றும், மணல் பிரதேசத்தில் ஆஃப்ரோடு சாகசங்களை நிகழ்த்தும் வகையில் மற்றொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் வி8 எஞ்சின் மாடல் டீசர்கள் வெளியீடு!

புதிய ரேங்லர் வி8 மாடலில் இடம்பெற இருக்கும் எஞ்சின் குறித்த எந்த தகவலையும் ஜீப் நிறுவனம் வெளியிடவில்லை. எனினும், இந்த புதிய மாடலானது ரேங்லர் ரூபிகன் 392 என்ற பெயரில் குறிப்பிடப்படுவதுடன், இதில் 6.4 லிட்டர் வி8 எஞ்சின் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் வி8 எஞ்சின் மாடல் டீசர்கள் வெளியீடு!

இந்த புதிய வி8 எஞ்சின் அதிகபட்சமாக 450 எச்பி பவரையும், 610 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். இதுனுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மூலமாக எஞ்சின் சக்தி அனைத்து சக்கரங்களுக்கும் செலுத்தப்படும்.

புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் வி8 எஞ்சின் மாடல் டீசர்கள் வெளியீடு!

இந்த புதிய எஸ்யூவியில் 37 அங்குல மட்-டெர்ரெயின் டயர்கள் பொருத்தப்பட்டு இருக்கும். இதன் க்ரவுண்ட் க்ளியரன்ஸை கூடுதலாக உயர்த்துவதற்காக ஜீப் நிறுவனத்தின் மொபர் சஸ்பென்ஷன் பாகங்களும் கொடுக்கப்பட்டு இருக்கும். இந்த எஸ்யூவியில் ஃபுல் டைம் 2 ஸ்பீடு டிரான்ஸ்ஃபர் கேஸ், முன்புற மற்றும் பின்புற ஆக்சில்களுக்கு லாக்கர்கள் ஆகியவையும் கொடுக்கப்பட்டு இருக்கும்.

புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் வி8 எஞ்சின் மாடல் டீசர்கள் வெளியீடு!

சிவப்பு வண்ண போல்ஸ்டர் பக்கவாட்டு அமைப்புடன் தங்க நிற நூல் தையல் வேலைப்பாடுகளுடன் கூடிய இருக்கைகள், பெர்ஃபார்மென்ஸ் ஸ்டீயரிங் வீல் சிஸ்டம் ஆகியவையும் இதன் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் வி8 எஞ்சின் மாடல் டீசர்கள் வெளியீடு!

உற்பத்தி நிலைக்கு முந்தைய கான்செப்ட் நிலையில் புதிய ரேங்லர் வி8 காட்சி தந்துள்ளது. அடுத்த ஆண்டு இந்த புதிய மாடல் உற்பத்திக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. ஃபோர்டு நிறுவனம் தனது புதிய பிரான்கோ எஸ்யூவியை அறிமுகம் செய்த சில மணிநேரத்தில் இந்த புதிய மாடல் குறித்த டீசர்களை ஜீப் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep has revealed Wrangler will get new V8 engine option soon.
Story first published: Monday, November 16, 2020, 16:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X