ஃபார்முலா-2 கார் பந்தயத்தில் முதல் வெற்றியை பதிவு செய்து இந்திய வீரர் ஜெகன் தருவாலா அசத்தல்!

பஹ்ரைன் நாட்டில் நடந்த ஃபார்முலா-2 பந்தயத்தில் இந்திய வீரர் ஜெகன் தருவாலா வெற்றி பெற்று அசத்தி உள்ளார். ஃபார்முலா-2 போட்டியில் வெற்றிக் கனியை பறித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார்.

ஃபார்முலா-2 கார் பந்தயத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய வீரர் ஜெகன் தருவாலா!

உலகின் முதல் தர கார் பந்தயமாக ஃபார்முலா-1 இருந்து வருகிறது. இதற்கு அடுத்த தரத்திலான பந்தயமாக ஃபார்முலா-1 பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான ஃபார்முலா-2 பந்தயங்கள் பல்வேறு நாடுகளிலும் நடந்தது.

ஃபார்முலா-2 கார் பந்தயத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய வீரர் ஜெகன் தருவாலா!

கடந்த ஜூலை மாதம் ஆஸ்திரியாவின் ஸ்பீல்பெர்க் நகரில் துவங்கிய இந்த பந்தயம் நேற்று பஹ்ரைன் நாட்டில் முடிவடைந்தது. இந்தநிலையில், நேற்று நடந்த இந்த சீசனின் கடைசிப் போட்டியில் இந்திய வீரர் ஜெகன் தருவாலா வெற்றி பெற்று அசத்தி இருக்கிறார்.

ஃபார்முலா-2 கார் பந்தயத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய வீரர் ஜெகன் தருவாலா!

போட்டியை இரண்டாவது இடத்தில் இருந்து துவங்கிய ஜெகன் தருவல்லா மிக சாமர்த்தியமாக இறுதியில் வெற்றிக் கனியை பறித்தார். நேற்றைய போட்டியில் டேனியல் டிக்டம், மிக் சூமேக்கர் மற்றும் ஜெகன் தருவாலா இடையே கடும் போட்டி நிலவியது. விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் முதலில் சற்று பின்தங்கி இருந்த ஜெகன் இறுதியில் முனைப்புடன் செயல்பட்டு முதலிடத்தை பிடித்து அசத்தினார்.

ஃபார்முலா-2 கார் பந்தயத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய வீரர் ஜெகன் தருவாலா!

இரண்டாவது இடத்தில் வந்த டிக்டமைவிட 3.5 வினாடிகள் முன்னிலை பெற்று போட்டியில் வெற்றி பெற்றார். இறுதிக்கட்டத்தில் கடும் போட்டி நிலவியபோதும் வெற்றிக் கனியை பறித்து அசத்தி இருக்கிறார். கடந்த வாரக் கடைசியில் நடந்த போட்டியில் மூன்றாவது இடம் பிடித்து போடியம் ஏறிய ஜெகன் நேற்றைய போட்டியில் முதல் இடத்தை பிடித்தார்.

ஃபார்முலா-2 கார் பந்தயத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய வீரர் ஜெகன் தருவாலா!

மும்பையை சேர்ந்த 22 வயதான தருவாலா ஃபார்முலா-2 போட்டியில் முதல் வெற்றிக் கனியை ருசித்து இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளார். புனேயில் உள்ள ராயோ ரேஸிங் அகடமியில் பயிற்சி பெற்ற இவர் கார்லின் அணி சார்பில் ஃபார்முலா-2 போட்டியில் பங்கேற்று வருகிறார்.

ஃபார்முலா-2 கார் பந்தயத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய வீரர் ஜெகன் தருவாலா!

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான சீசனில் மிக் சூமேக்கர் அதிக புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை பெற்றார். இந்த ஆண்டு சீசனில் 215 புள்ளிகளுடன் மிக் சூமேக்கர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். ஃபார்முலா-1 பந்தயங்களில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்று ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள தனது தந்தை மேக்கேல் சூமேக்கர் வழியில் வெற்றிப் பயணத்தை துவங்கி இருக்கிறார்.

ஃபார்முலா-2 கார் பந்தயத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய வீரர் ஜெகன் தருவாலா!

இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஃபார்முலா-1 போட்டியிலும் ஹாஸ் அணி சார்பில் களமிறங்க உள்ளார் மிக் சூமேக்கர். அவர் தனது தந்தை வழியில் அதிக வெற்றிகளை குவிப்பார் ரசிகர்கள் அதிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Most Read Articles
English summary
In a proud moment for India, Jehan Daruvala from Mumbai won his maiden F2 sprint race at the Sakhir Grand Prix. The final race also saw Mick Schumacher being crowned the 2020 F2 Champion, ahead of his ascension to F1 with the Haas team for 2021.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X