உற்சாகத்தில் புதிய காரை அப்பளமாக்கிய தமிழக இளைஞர்... இந்த நிலைமை வேறு யாருக்கும் வர கூடாது... வீடியோ

உற்சாகத்தில் புதிய கார் ஒன்றை தமிழக இளைஞர் அப்பளமாக ஆக்கியுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

உற்சாகத்தில் புதிய காரை அப்பளமாக்கிய தமிழக இளைஞர்... இந்த நிலைமை வேறு யாருக்கும் வர கூடாது... வீடியோ!

ஒட்டுமொத்த மனித இனத்திற்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது ஒற்றை உயிர் கொல்லி வைரஸ் கொரோனா. இதனால் ஏற்பட்ட இழைப்புகள் எண்ணற்றவை. செல்வம் கொழித்தவர்கள்கூட இந்த வைரஸ் பரவல் காரணமாக கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் கொரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்பைக் காட்டிலும் கடுமையான இழப்பை தன்னுடைய அஜாக்ரதையால் சந்தித்துள்ளார்.

உற்சாகத்தில் புதிய காரை அப்பளமாக்கிய தமிழக இளைஞர்... இந்த நிலைமை வேறு யாருக்கும் வர கூடாது... வீடியோ!

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாஜகான். இவர் அண்மையில் அதே பகுதியில் இயங்கி வரும் ஃபோக்ஸ்வேகன் டீலர் வாயிலாக ஃபோக்ஸ்வேகன் போலோ மாடலை புக்கிங் செய்திருந்தார். இதைத்தொடர்ந்து அக்கார் அண்மையில் அவருக்கு டெலிவரி வழங்கப்பட்டது. இதனை பெறுவதற்காக ஷாஜகான் அவருடைய குடும்பத்தினருடன் ஷோரூமிற்கு சென்றிருந்தார். அப்போதுதான் அவர் எதிர்பாராத ஓர் சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.

உற்சாகத்தில் புதிய காரை அப்பளமாக்கிய தமிழக இளைஞர்... இந்த நிலைமை வேறு யாருக்கும் வர கூடாது... வீடியோ!

ஆம், டெலிவரிக்கு காரை எடுத்து ஷோரூம் நுழைவாயிலைத் தாண்டுவதற்குள் அந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காரணத்தினாலயே அக்கார் விபரீத நிலையைச் சந்தித்துள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக வெகுநாட்களுக்குப் பிறகு தற்போதே அனைத்துத் துறைகளும் இயங்கத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில்தான், தமிழகத்தைச் சேர்ந்த அந்த பெயர் குறிப்பிடப்படாத டீலர் ஷாஜகானுக்கு ஃபோக்ஸ்வேகன் போலோ காரை டெலிவரிக்கு வழங்கியிருக்கின்றனர்.

உற்சாகத்தில் புதிய காரை அப்பளமாக்கிய தமிழக இளைஞர்... இந்த நிலைமை வேறு யாருக்கும் வர கூடாது... வீடியோ!

இதனை ஷாஜகான் தனியாக காரில் அமர்ந்து வெளியே எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகின்றது. அதற்கேற்ப அவரின் குடும்பத்தினர் பலர் வெளியே நின்றபடி கை தட்டி அவரை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர். இந்த நிலையிலேயே காரை எடுத்து சில விநாடிகளிலேயே ஷோரூமின் வாசல் கதவின்மீது மோதி கவிழ்ந்தது. இதனால், புத்தம் புதிய போலோ கடுமையான சிராய்வு மற்றும் சேதங்களைச் சந்தித்துள்ளது.

உற்சாகத்தில் புதிய காரை அப்பளமாக்கிய தமிழக இளைஞர்... இந்த நிலைமை வேறு யாருக்கும் வர கூடாது... வீடியோ!

இதுபோன்ற காரணங்களால்தான் புதிய வாகனங்களை டெலிவரி எடுக்கும்போது அதிக கவனம் தேவை என கூறப்படுகின்றது. பொதுவாக புது வாகனங்கள் நமக்கு அதிக பரவசத்தையும், உற்சாகத்தையும் தரக்கூடியவை. அதிலும், குறிப்பாக முதல் முறையாக வாகனத்தை வாங்குபவர்களுக்கு இது சற்று அதிகமாகவே இருக்கும். அப்போது நம்மை அறியமாலே ஒரு சில விஷயங்களைச் செய்ய நேரிடும்.

உற்சாகத்தில் புதிய காரை அப்பளமாக்கிய தமிழக இளைஞர்... இந்த நிலைமை வேறு யாருக்கும் வர கூடாது... வீடியோ!

எனவேதான் இம்மாதிரியான சூழ்நிலையில் புதிய வாகனங்களை டெலிவரி எடுக்க ஷோரூம் ஊழியர்களின் உதவியை நாட வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. அவர்கள் உங்களுக்கான புதிய வாகனத்தை உங்களின் இல்லத்திற்கே நேரடியாக கொண்டு வந்து சேர்ப்பர். மேலும், சில நேரங்களில் காலியான பகுதிகளில் முதல் டிரைவ் செய்ய அறிவுரை கூறுவர். ஆனால், இவை எதுவும் இங்கு நடைபெறவில்லை.

உற்சாகத்தில் புதிய காரை அப்பளமாக்கிய தமிழக இளைஞர்... இந்த நிலைமை வேறு யாருக்கும் வர கூடாது... வீடியோ!

இதன்காரணத்திலாயே கட்டுப்பாட்டை இழந்த புத்தம் புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கைக்கு வந்த சில நேரங்களிலேயே மெக்கானிக் ஷெட்டிற்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் நேரடியாக ஷோரூம் இரும்பு கதவின் மீது மோதியதாலே அது தலை கீழாக கவிழ்ந்தது. இதற்கு ஆரம்பத்திலேயே அதி வேகத்தில் காரை இயக்கியதும் ஓர் காரணமாகும்.

உற்சாகத்தில் புதிய காரை அப்பளமாக்கிய தமிழக இளைஞர்... இந்த நிலைமை வேறு யாருக்கும் வர கூடாது... வீடியோ!

எனவே, காரை எடுத்த எடுப்பிலியே அதி வேகத்தில் இயக்குவதை தவிர்க்க வேண்டும் என டிரைவிங் ஸ்கூலின் முதல் நாளிலேயே அறிவுரையாக கூறுகின்றனர். ஆனால், பலர் இதை ஞாபகம் வைத்துக் கொள்ள தவறிவிடுகின்றனர். இதன் விளைவு விபத்து, சேதம் போன்றவற்றைச் சந்திக்கின்றனர்.

உற்சாகத்தில் புதிய காரை அப்பளமாக்கிய தமிழக இளைஞர்... இந்த நிலைமை வேறு யாருக்கும் வர கூடாது... வீடியோ!

தற்போதைய விபரீத சம்பவம்குறித்த வீடியோக் காட்சிகள் இணையத்தில் வேகமாக வைரலாகத் தொடங்கியுள்ளது. இது புதிய வாகனங்களை டெலிவரி எடுப்போருக்கு ஓர் பாடமாகவே அமையும் என தெரிகின்றது. இதுபோன்ற விபரீதங்களை டெலிவரிக்கு புதிய கார்கள் மட்டுமில்லாமல் டெஸ்ட் டிரைவ்க்கு செல்லும் வாகனங்கள்கூட சந்தித்திருக்கின்றன.

இதனால், வாகனத்தை ஓட்டுவருக்கு மட்டுமின்றி குறிப்பிட்ட டீலர்களுக்கும் லேசான இழப்பு ஏற்படுகின்றது. எனவேதான், முதல் டிரைவ் செய்யும்போது அனுபவமிக்க ஓட்டுநர்களை பயன்படுத்த வேண்டும் ஒரு சில டீலர்கள் கட்டாயப்படுத்துகின்றனர்.

உற்சாகத்தில் புதிய காரை அப்பளமாக்கிய தமிழக இளைஞர்... இந்த நிலைமை வேறு யாருக்கும் வர கூடாது... வீடியோ!

இந்தியாவில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் அதிக பாதுகாப்பு நிறைந்த கார்களில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் போலோ காரும் ஒன்று. இது ஓர் ஹேட்ச்பேக் மாடல் ஆகும். இந்த கார் பாதுகாப்பு தரம் குறித்த நடத்தப்பட்ட விபத்து பரிசோதனையில் அதிகபட்சமாக 4 நட்சத்திரங்களைப் பெற்றது.

உற்சாகத்தில் புதிய காரை அப்பளமாக்கிய தமிழக இளைஞர்... இந்த நிலைமை வேறு யாருக்கும் வர கூடாது... வீடியோ!

இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களாக இரண்டு ஏர் பேக்குகள் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கூடுதல் சில பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த கார் இந்தியாவில் ரூ. 5.82 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் உயர்நிலை மாடல் ரூ. 10 லட்சத்திற்கு விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Just Been Handed Over Brand New Volkswagon Polo Hits Showroom Gate. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X