Just In
- 2 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 2 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 4 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 4 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கன்னட நடிகர்களின் நெகிழ்ச்சியான செயல்... ஒரு நடிகரை மகிழ்விக்க இன்னொரு நடிகர் செய்த காரியம்... என்ன தெரியுமா?
ஒரு நடிகரை மகிழ்விக்க மற்றொரு பிரபல நடிகர் செய்த காரியம் இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

நடிகர்களுக்கும் ஆசை, கனவுகள் இருக்கும் என்பதை கன்னட திரையுலகைச் சேர்ந்த ரிஷப் ஷெட்டி தனது டுவிட்டர் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார். அந்தவகையில், தனது நீண்ட கால கனவாக இருந்த ஒன்றை மற்றுமொரு பிரபல கன்னட நடிகர் தற்போது நிவர்த்தி செய்திருப்பதாக அதே பதிவின்மூலம் கூறியிருக்கின்றார்.

இளைஞர்கள் பலர் சொகுசு கார்கள் மீது தீரத மோகம் கொண்டவர்களாக இருக்கின்றனர். அந்தவகையில், ரிஷப் ஷெட்டியின் கனவு வாகனமாக ஃபோர்டு மஸ்டாங் கார் இருக்கின்றது. இந்த காரையே சக நடிகரான தர்ஷன், ரிஷப் ஷெட்டிக்கு இயக்கும் அனுபவத்தை வழங்கியிருக்கின்றார்.

இந்திய நடிகர்கள் பெரும்பாலானோரிடத்தில் சொகுசு மற்றும் விலையுயர்ந்த சூப்பர் கார்கள் இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அந்தவகையில், கன்னட நடிகர் தர்ஷனிடத்தில் பல்வறு சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அதில் ஒன்றே ஃபோர்டு மஸ்டாங் ஜிடி கார்.

இந்த காரையே நேற்று இரவு மைசூர் சாலையில் வைத்து ரிஷப் செட்டி இயக்கியிருக்கின்றார். இதுகுறித்த தகவலையே தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருக்கின்றார். இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் டுவிட்டரில் வெளியிட்டிருக்கின்றார்.

அதில், "எனது கனவு கார் ஃபோர்டு மஸ்டாங். நேற்று மாலை தர்ஷன் சாரின் இந்த காரை இயக்கும் அனுபவம் எனக்கு கிடைத்தது. தர்ஷன் சாருக்கு நன்றிகள். இது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது" என கூறியிருக்கின்றார்.

ஏன் இளைஞர்கள் பலரின் கனவு வாகனமாக ஃபோர்டு மஸ்டாங் ஜிடி கார்கள் இருக்கின்றன? இப்படி ஒரு கேள்வியை இக்காரின் ரசிகர்களிடத்தில் கேட்டால் நிச்சயம் அவர்கள் கோபமே அடைந்துவிடுவார்கள். ஏனெனில், இந்த காரைப் பற்றி தெரிந்த எவரும் இப்படி ஒரு கேள்வியைக் கேட்க மாட்டார்கள் என்பதே அவர்களின் எண்ணம்.

ஃபோர்டு மஸ்டங், சிறப்பாக விற்பனையாகும் ஸ்போர்ட்ஸ் கார் என்ற விருதை பெற்ற கார் ஆகும். இந்த விருதைத் தொடர்ச்சியாக ஐந்து முறை இந்த காரே தட்டிச் சென்றிருக்கின்றது என்பது கூடுதல் சிறப்பு தகவல். அறிமுகத்தில் இருந்து தற்போதைய ஆறாவது தலைமுறை வரை ஒட்டுமொத்தமாக 6,33,000 யூனிட் ஃபோர்டு மஸ்டாங் கார்கள் உலகளவில் விற்பனையாகியிருக்கின்றன.

இதுவரை 146 நாடுகளில் இக்கார் விற்பனையாகி இருக்கின்றது. குறிப்பாக அமெரிக்காவில் கடந்த 50 வருடங்களாகவே இந்த காரக்கு மிக பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகின்றது. கடந்த 2019ஆம் ஆண்டில் மட்டும் 1,02,090 யூனிட் கார்கள் உலகளவில் விற்பனையாகியிருக்கின்றது.

தற்போதைய தலைமுறை மஸ்டங் மாடலில் 445 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 5-லிட்டர் வி8 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த எஞ்ஜின் உடன் 2.3 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வும் இந்த காரில் வழங்கப்பட்டு வருகின்றுத. இந்த எஞ்ஜின் தேர்வுகளுடன் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 10-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வும் கொடுக்கப்படுகிறது.

இதுமட்டுமின்றி சொகுசு வசதிகளும் இக்காரில் ஏராளமாக இருக்கின்றது. எனவேதான் உலகளவில் இக்காருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் நிலவி வருகின்றனர். அதில் ஒருவரே கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி. தற்போது இவருடைய கனவு நடிகர் தர்ஷனின் செயலால் நிறைவேறியிருக்கின்றது.