சோதனையில் இருந்த 2020 மஹிந்திரா தாரை நிறுத்திய போலீஸார்... அடுத்து நடந்ததுதான் ஆச்சிரியமே..!

சோதனை காரணமாக சாலையில் சென்ற 2020 மஹிந்திரா தார் காரை போலீசார் நிறுத்தி ஆச்சிரியமாக வாகனத்தை பார்க்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

சோதனையில் இருந்த 2020 மஹிந்திரா தாரை நிறுத்திய போலீஸார்... அடுத்து நடந்ததுதான் ஆச்சிரியமே..!

வாடிக்கையாளர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் முற்றிலும் புதிய இரண்டாம் தலைமுறை தார் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமானது. தற்கால மாடர்ன் கார்களுக்கு உண்டான அப்கிரேட்களுடன் இந்த 2020 மாடல் கொண்டுவரப்பட்டுள்ளது.

சோதனையில் இருந்த 2020 மஹிந்திரா தாரை நிறுத்திய போலீஸார்... அடுத்து நடந்ததுதான் ஆச்சிரியமே..!

அதேநேரம் முந்தைய மஹிந்திரா தார்களின் டிசைன் டிஎன்ஏ-வும் இந்த தலைமுறையில் தொடர்ந்துள்ளது. இதனால் சாலையில் சென்றால் எவரது கண்களையும் கவர்ந்து இழுக்கும் தன்மை 2020 தாரிடம் உள்ளது. இதில் போலீசார் மட்டும் என்ன விதிவிலக்கா...

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

சோதனையில் இருந்த 2020 மஹிந்திரா தாரை நிறுத்திய போலீஸார்... அடுத்து நடந்ததுதான் ஆச்சிரியமே..!

இப்படிதான் கரடுமுரடான ஆஃப்-ரோடு பாதைகளில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை சோதிக்கும் பொருட்டு சாலையில் சென்ற புதிய தலைமுறை தாரை, மஹிந்திரா பொலிரோவில் வந்த கேரள போலீசார் நிறுத்தி சில கேள்வி கேட்டு, பின்னர் வாகனத்தை பிரம்மிப்புடன் பார்த்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ ரெவோகிட் விலாக்ஸ் என்ற யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் சில போலீசார் வாகனத்தை யார் ஓட்டியது உள்பட வாகனத்தை பற்றிய கேள்விகளை வினாவ, சிலர் நேரடியாக வாகனத்திற்கு உள்ளேயே சென்று உட்புற கேபினில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களை ஆராய துவங்கிவிடுகின்றனர்.

சோதனையில் இருந்த 2020 மஹிந்திரா தாரை நிறுத்திய போலீஸார்... அடுத்து நடந்ததுதான் ஆச்சிரியமே..!

இந்த சம்பவத்திற்கு பிறகு 2020 தாரை இயக்கி வந்தவர்கள் வாகனத்தின் திறனை அறிய மணல் நிறைந்த கடற்கரை பகுதிக்கு ஓட்டி செல்கின்றனர். புதிய தார் அதன் முந்தைய முதல் தலைமுறையை காட்டிலும் தோற்றத்தில் பெரியதாகும்.

சோதனையில் இருந்த 2020 மஹிந்திரா தாரை நிறுத்திய போலீஸார்... அடுத்து நடந்ததுதான் ஆச்சிரியமே..!

புதிய ஸ்கார்பியோவின் அடிப்படையிலான ப்ளாட்ஃபாரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள 2020 தாரில் ஏகப்பட்ட புதிய வசதிகளை மஹிந்திரா நிறுவனம் முதல்முறையாக வழங்கியுள்ளது. இந்த எஸ்யூவி காருக்கு 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் என்ற இரு என்ஜின் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சோதனையில் இருந்த 2020 மஹிந்திரா தாரை நிறுத்திய போலீஸார்... அடுத்து நடந்ததுதான் ஆச்சிரியமே..!

தற்போதுவரையில் 9 ஆயிரத்திற்கும் அதிகமான 2020 தாருக்கான முன்பதிவுகளை மஹிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுள்ளது. டெலிவிரிகள் வருகிற நவம்பர் மாதத்தில் இருந்து துவங்கவுள்ளன. இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.9.8 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Indian cops’ reaction to the all-new Mahindra Thar [Video]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X