'8 மணி நேரம் போவதே தெரியல'... இளம்பெண்ணிடம் டாடா நெக்ஸான் மின்சார காரை புகழ்ந்து தள்ளிய கேரள போலீஸ்!

டாடா நெக்ஸான் மின்சார காரை பயன்படுத்தி வரும் கேரள மோட்டார் வாகனத்துறையினர் அக்கார் பற்றிய தகவலைத் தெரிவித்திருக்கின்றனர். இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

'8 மணி நேரம் போவதே தெரியல'... இளம்பெண்ணிடம் டாடா நெக்ஸான் மின்சார காரை புகழ்ந்து தள்ளிய கேரள போலீஸ்!

இந்தியாவின் மலிவு விலை மின்சார கார் என்ற பெருமைக்கு உரிய ஒரே எலெக்ட்ரிக் காராக தற்போது வரை டாடா நிறுவனத்தின் நெக்ஸான் ஈவி மட்டுமே இருக்கின்றது. இந்த காரையே கேரளா அரசு தனது மோட்டார் வாகனத்துறை பயன்பாட்டிற்காக வாங்கியது. இதனடிப்படையில், 45 அலகுகள் அடங்கிய டாடா நெக்ஸான் மின்சார காரின் முதல் தொகுப்பு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

'8 மணி நேரம் போவதே தெரியல'... இளம்பெண்ணிடம் டாடா நெக்ஸான் மின்சார காரை புகழ்ந்து தள்ளிய கேரள போலீஸ்!

இக்கார் வழங்கும் நிகழ்வு கடந்த மாதம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. எனவே அம்மாநிலத்தின் குறிப்பிட்ட மாவட்டத்தில் நெக்ஸான் ஈவி கார் அதிகாரிகளின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. முன்பு டொயோட்டா இன்னோவா, மஹிந்திரா பொலிரோ, சுசுகி ஜிப்ஸி ஆகிய கார்களை மட்டுமே பயன்படுத்தி வந்த அதிகாரிகள் தற்போது புதிய தலைமுறைக்கு ஏற்ற சகல வசதிகளுடன் விற்பனக்கு வந்ததிருக்கும் டாடா நெக்ஸான் மின்சார காரை பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர்.

'8 மணி நேரம் போவதே தெரியல'... இளம்பெண்ணிடம் டாடா நெக்ஸான் மின்சார காரை புகழ்ந்து தள்ளிய கேரள போலீஸ்!

இந்த கார் அவர்களுக்கு என்ன மாதிரியான பயண அனுபவத்தை வழங்கி வருகின்றது என்பது பற்றிய தகவலை இப்பதிவில் நாம் காணவிருக்கின்றோம். மோட்டார் ஹெட் கேர்ல் எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டிருக்கும் பிரத்யேக வீடியோவின் அடிப்படையிலேயே அதிகாரிகள் டாடா நெக்ஸான் காரில் என்ன மாதிரியான அனுபவத்தைப் பெற்று வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

'8 மணி நேரம் போவதே தெரியல'... இளம்பெண்ணிடம் டாடா நெக்ஸான் மின்சார காரை புகழ்ந்து தள்ளிய கேரள போலீஸ்!

குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 8 மணி நேரமாவது அதிகாரிகள் இக்காரில் பயணிக்கின்றனர். ஆகையால், அலுவலகத்தில் இருப்பதைவிட அதிக நேரம் நெக்ஸான் காரில்தான் அதிகாரிகள் நேரம் செலவிடுகின்றனர். ஆனால், தாங்கள் 8 மணி நேரம் காரில்தான் இருந்தோம் என்கிற எண்ணத்தை நெக்ஸான் ஏற்படுத்தவில்லை என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

'8 மணி நேரம் போவதே தெரியல'... இளம்பெண்ணிடம் டாடா நெக்ஸான் மின்சார காரை புகழ்ந்து தள்ளிய கேரள போலீஸ்!

குறிப்பாக, இது ஓர் தானியங்கி எஸ்யூவி கார் என்பதால் இதில் க்ளட்ச் இருக்காது. எனவே, இந்த காரை இயக்குவது பெரியளவில் கலைப்பை ஏற்படுத்தவில்லை எனவும் அவர்கள் கூறுகின்றனர். இதுமட்டுமின்றி, டாடா நெக்ஸான் மின்சார கார் பிரீமியம் தரத்திலான கார்களுக்கு இணையான வசதியைக் கொண்டிருப்பதால் இக்காரில் பயணிப்பது அலாதியான அனுபவத்தை வழங்குவதாகவும் அவர்கள் கூடுதலாக தெரிவிக்கின்றனர்.

'8 மணி நேரம் போவதே தெரியல'... இளம்பெண்ணிடம் டாடா நெக்ஸான் மின்சார காரை புகழ்ந்து தள்ளிய கேரள போலீஸ்!

ஒரு நாளைக்கு 75 முதல் 100 கிமீ தூரம் வரை மட்டுமேஅதிகாரிகள் பயணித்து வருகின்றனர். ஆகையால், சார்ஜ் தீர்ந்துவிடுமோ என்ற பயம் இல்லை. இக்காரை முழுமையாக சார்ஜ் செய்தால் 312 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த திறனை வெளிப்படுத்தக்கூடிய 30.2 KwH திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.

'8 மணி நேரம் போவதே தெரியல'... இளம்பெண்ணிடம் டாடா நெக்ஸான் மின்சார காரை புகழ்ந்து தள்ளிய கேரள போலீஸ்!

பொதுவாக, சாலையில் போலீஸைப் பார்த்தால், பார்த்தும் பார்க்காததைப் போலவே பலர் செல்வார்கள். ஆனால், இந்தகாரில் பயணிக்கும்போது ஒரு சிலர் வேகத்தைக் குறைத்து காரை அதிகம் ஒரு ஸ்கேன் செய்துவிட்டே செல்கின்றனர் என நெக்ஸானைப் பயன்படுத்தும் ஓர் அதிகாரி தெரிவித்தார்.

'8 மணி நேரம் போவதே தெரியல'... இளம்பெண்ணிடம் டாடா நெக்ஸான் மின்சார காரை புகழ்ந்து தள்ளிய கேரள போலீஸ்!

டாடா நெக்ஸான் மின்சார காரில் 129 பிஎஸ் மற்றும் 245 என்எம் டார்க் திறனை வெளியேற்றக் கூடிய மின் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கின்றது. இது ஜிப்ட்ரான் தொழில்நுட்பத்தைக் கொண்டதாகும். எக்ஸ்எம், எக்ஸ்இசட் ப்ளஸ் மற்றும் எக்ஸ்இசட் ப்ளஸ் லக்ஸ் ட்ரிம் ஆகிய தேர்வுகளில் நெக்ஸான் மின்சார கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதற்கு ரூ. 13.99 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். டாடாவின் இந்த தயாரிப்பு எம்ஜி இசட்எஸ் மற்றும் ஹூண்டாய் கோனா ஆகிய மின்சார கார்களுக்கு போட்டியளிக்கின்ற வகையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Most Read Articles

English summary
Kerala Police Praise Tata Nexan Electric Car. Read In Tamil.
Story first published: Wednesday, December 23, 2020, 10:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X