புதிய கியா கார்னிவல் எம்பிவி காரின் 10 முக்கிய அம்சங்கள்

புத்தாண்டு பிறந்தவுடனே புதிய கார் வாங்கும் திட்டத்தை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை சிறந்த எம்பிவி என்றாலே இன்னோவா க்ரிஸ்ட்டாதான் ஒரே சாய்ஸ் என்று இருந்தவர்களுக்கு இப்போது சிறந்த மாற்று தேர்வாக கியா கார்னிவல் விரைவில் வர இருக்கிறது. இன்னோவா க்ரிஸ்ட்டா காரைவிட பிரிமீயம் அம்சங்களுடன் எதிர்பார்க்கப்படும் கியா கார்னிவல் காரின் முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய கியா கார்னிவல் எம்பிவி காரின் 10 முக்கிய அம்சங்கள்

அதிக இடவசதி

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் சிறப்பான இடவசதியை வழங்குவதே பலரும் முன்னுரிமை அளிப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த நிலையில், கியா கார்னிவல் கார் அதைவிட வீல்பேஸ் மற்றும் வடிவத்தில் பெரிய கார் மாடலாக இருக்கும். புதிய கியா கார்னிவல் கார் 5,155 மிமீ நீளமும், 1,985 மிமீ அகலமும், 1,740 மிமீ உயரமும் பெற்றிருக்கிறது. இதன் வீல்பேஸ் 3,060 மிமீ ஆக உள்ளது.

புதிய கியா கார்னிவல் எம்பிவி காரின் 10 முக்கிய அம்சங்கள்

இன்னோவாவைவிட பெரிய கார்

இன்னோவா க்ரிஸ்ட்டா காரைவிட 420 மிமீ கூடுதல் நீளமும், 150 மிமீ கூடுதல் அகலமும் பெற்றிருக்கிறது. அதேபோன்று, இந்த கார் 310 மிமீ கூடுதல் வீல் பேஸ் நீளத்தை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனால், உட்புறத்தில் இன்னோவா க்ரிஸ்ட்டா காரைவிட அதிக இடவசதியை நிச்சயம் எதிர்பார்க்கலாம். ஆனால், உயரத்தில் 55 மிமீ குறைவு.

புதிய கியா கார்னிவல் எம்பிவி காரின் 10 முக்கிய அம்சங்கள்

இருக்கை வசதி

கியா கார்னிவல் கார் வெளிநாடுகளில் 7, 8 மற்றும் 11 இருக்கைகள் கொண்ட மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் 7 மற்றும் 8 இருக்கைகள் கொம்ட மாடல்களில் மட்டும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் இரண்டாவது வரிசை இருக்கைகளை முழுவதுமாக மடக்கும் வசதி இருக்கிறது. இதனால், மூன்றாவது வரிசைக்கு எளிதாக செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

புதிய கியா கார்னிவல் எம்பிவி காரின் 10 முக்கிய அம்சங்கள்

சொகுசு இருக்கைகள்

நடுவரிசையில் மிக சொகுசான இருக்கைகள் இடம்பெற்றிருக்கும். அதாவது, சொகுசு ஆம்னி பஸ்களில் கொடுக்கப்படுவது போன்ற லெக் ரெஸ்ட் வசதியுடன் கூடிய இருக்கைகள் கொடுக்கப்பட்டு இருக்கும். இந்த இருக்கைகள் குளிர்காலத்தில் வெதுவெதுப்பான உணர்வை தருவதற்கான வசதியையும், கோடை காலத்தில் குளிர்ச்சியை தரும் வசதியையும் பெற்றிருக்கும்.

புதிய கியா கார்னிவல் எம்பிவி காரின் 10 முக்கிய அம்சங்கள்

பூட் ரூம் இடவசதி

மூன்றாவது வரிசை இருக்கையை முழுவதுமாக மடித்து வைத்தால், 1,000 லிட்டர் கொள்திறன் கொண்ட பொருட்கள் மற்றும் உடைமைகளை வைப்பதற்கான இடவசதியை பெற முடியும்.

புதிய கியா கார்னிவல் எம்பிவி காரின் 10 முக்கிய அம்சங்கள்

ஸ்லைடிங் கதவுகள்

கியா கார்னிவல் காரில் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாக, ஸ்லைடிங் கதவுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதனால், ஏறி, இறங்குவதற்கு வசதியான அனுபவத்தையும், வாய்ப்பையும் வழங்கும்.

புதிய கியா கார்னிவல் எம்பிவி காரின் 10 முக்கிய அம்சங்கள்

சக்திவாய்ந்த எஞ்சின்

கியா கார்னிவல் எம்பிவி காரில் 2.2 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 201 பிஎச்பி பவரையும், 441 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

புதிய கியா கார்னிவல் எம்பிவி காரின் 10 முக்கிய அம்சங்கள்

வசதிகள்

கியா கார்னிவல் காரில் பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கியா யுவோ கனெக்ட்டிவிட்டி செயலி, இரண்டு சன்ரூஃப் அமைப்பு, ஓட்டுனர் இருக்கைக்கு மெமரி வசதி, ட்ரிப்பிள் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சஙஅகளாக இருக்கும். பின் இருக்கை பயணிகளுக்கு 10.1 அங்குல திரைகளுடன் பொழுது போக்கு வசதிகள் இருக்கும்.

புதிய கியா கார்னிவல் எம்பிவி காரின் 10 முக்கிய அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

புதிய கியா கார்னிவல் காரில் நான்கு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகிய பல பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.

புதிய கியா கார்னிவல் எம்பிவி காரின் 10 முக்கிய அம்சங்கள்

எதிர்பார்க்கும் விலை

புதிய கியா கார்னிவல் எம்பிவி கார் ரூ.25 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. டீலர்களில் ரகசிய முன்பதிவும் ஏற்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இது சற்றே பிரிமீயம் மாடலாக இருக்கும்.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் வேரியண்ட்டுகளில் உள்ள வசதிகள் விபரம்!

இதேபோன்று இந்தியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக காரில் வழங்கப்பட இருக்கும் வேரியண்ட் தேர்வுகள் மற்றும் அதில் உள்ள வசதிகள் பற்றிய விபரங்களும் வெளியாகியது. இதுகுறித்த சுவாரஷ்ய தகவலை கீழே காணலாம்.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் வேரியண்ட்டுகளில் உள்ள வசதிகள் விபரம்!

புதிய எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் எக்ஸ்சைட் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. நேரடி இன்டர்நெட் வசதி உள்ளிட்ட ஏராளமான சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் வேரியண்ட்டுகளில் உள்ள வசதிகள் விபரம்!

எக்ஸ்சைட் வேரியண்ட்டின் வெளிப்புற அம்சங்கள்

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் விலை குறைவான வேரியண்ட்டாக எக்ஸ்சைட் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த வேரியண்ட்டில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், ரியர் ஸ்பாய்லர், சைடு மிரர்களில் டர்ன் இண்டிகேட்டர் விளக்குகள், 17 அங்குல அலாய் வீல்கள் இடம்பெற்றிருக்கும். க்ரோம் அலங்கார ஆக்சஸெரீகளுடன் முன்புற க்ரில் அமைப்பு, பாடி கலர் பம்பர் ஆகியவையும் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் வேரியண்ட்டுகளில் உள்ள வசதிகள் விபரம்!

எக்ஸைட் வேரியண்ட்டின் உட்புற அம்சங்கள்

எக்ஸ்சைட் இன்டீரியரில் முக்கிய அம்சங்களாக லெதர் உறையுடன் கூடிய ஸ்டீயரிங் வீல், 8.9 செமீ அளவுடைய மல்டி இன்பர்மேஷன் திரை, பின்புறத்தில் 60:40 ஃபோல்டிங் இருக்கைகள் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் வேரியண்ட்டுகளில் உள்ள வசதிகள் விபரம்!

எக்ஸ்சைட் வேரியண்ட்டின் வசதிகள்

இந்த வேரியண்ட்டில் கீ லெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட், க்ரூஸ் கன்ட்ரோல், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள், இரவில் காரை நிறுத்தி இறங்கும்போது, சிறிது நேரம் ஒளிர்ந்து அணையும் ஃபாலோ மீ ஹெட்லைட்டுகள், ரிமோட் கன்ட்ரோல் லாக் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி மற்றும் ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் இடம்பெற்றிருக்கும்.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் வேரியண்ட்டுகளில் உள்ள வசதிகள் விபரம்!

எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட்டின் வெளிப்புற அம்சங்கள்

எம்ஜி இசட்எஸ் எஸ்யூவியின் விலை உயர்ந்த வேரியண்ட்டாக இது நிலைநிறுத்தப்பட இருக்கிறது. இந்த வேரியண்ட்டில் கூடுதலாக சில்வர் பூச்சுடன் ரூஃப் ரெயில்கள் வழங்கப்பட்டுள்ளன.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் வேரியண்ட்டுகளில் உள்ள வசதிகள் விபரம்!

எக்ஸ்க்ளூசிவ் இன்டீரியர்

இந்த வேரியண்ட்டில் கூடுதலாக லெதர் இருக்கைகள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் அமைப்பும் வழங்கப்படும். அதாவது, கார் கூரையின் 90 சதவீத பரப்பபு கண்ணாடி கூரையாக அமைந்திருக்கும்.

இந்த வேரியண்ட்டில் கேபினில் காற்று சுத்திகரிப்புக்காக PM 2.5 ஃபில்டர், 6 ஸ்டெப் பவர் அட்ஜெஸ்ட்டபிள் டிரைவர் இருக்கை, மடக்கும் வசதியுடன் சைடு மிரர்கள், முன் இருக்கைகளின் பின்பக்கத்தில் பாக்கெட்டுகள், ஐ-ஸ்மார்ட் இவி 2.0 கனெக்டெட் வசதி இடம்பெறுகிறது.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் வேரியண்ட்டுகளில் உள்ள வசதிகள் விபரம்!

பாதுகாப்பு அம்சங்கள்

புதிய எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரில் 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்கள், பெடஸ்ட்ரியன் வார்னிங் சிஸ்டம், ஸ்பீடு வார்னிங் சிஸ்டம் ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள் இடம்பெற்றிருக்கும்.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் வேரியண்ட்டுகளில் உள்ள வசதிகள் விபரம்!

புதிய எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் ரூ.22 லட்சம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜனவரியில் விற்பனைக்கு வரும் இந்த காருக்கு ரூ.50,000 முன்பணத்துடன் முன்பதிவும் செய்யப்படுகிறது. முதலில் முன்பதிவு செய்யும் 1,000 வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு அறிமுகச் சலுகை விலையில் இந்த கார் டெலிவிரி கொடுக்கப்படும். ஹூண்டாய் கோனா காருக்கு போட்டியாக வர இருக்கிறது.

Most Read Articles
English summary
Here are the most important things about all new KIA carnival MPV car.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X